கோபனாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோபனாரி என்பது தமிழ்நாட்டின், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள காரமடை வட்டாரத்தில் கேரள எல்லையில் அமைந்துள்ள ஒரு மலைக் கிராமமாகும்.[1] இந்தக் கிராமத்தில் மொத்தம் 100 குடும்பங்களைச் சேர்ந்த இருளர் இன மக்கள் வாழ்கின்றனர்.

தொழில்[தொகு]

இந்த மக்கள் ஆடு, மாடு மேய்ப்பது மற்றும் தோட்ட வேலைக்குப் போவாது முதன்மையான தொழில் ஆகும். அண்மைக்காலமாக இந்த கிராமப் பெண்கள் சுய உதவிக்குழுக்களை ஏற்படுத்திக்கொண்டு அதன்மூலம் காடுகளில் உள்ள புளிய மரங்களை வனத்துறையிடம் குத்தகைக்கு எடுத்துப் புளியங்காய் பறித்து விற்பனை செய்தார்கள். மேலும் சுற்றுப்பகுதியில் உள்ள காடுகளில் உள்ள உசிலா மரம் எனப் பேச்சுவழக்கில் சொல்லப்படும் ஊஞ்ச மர இலைகளைப் பறித்துவந்து, அந்த இலைகளைக் காயவைத்து, அரப்புத் தூள் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கோபனாரி டூ டெல்லி: அசத்தும் பழங்குடிப் பெண்கள்". செய்தி. தி இந்து. 8 மார்ச் 2015. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. கா. சு. வேலாயுதன் (30 சூலை 2017). "அரப்புத் துளிர்களால் சுடர்விடும் பழங்குடியினப் பெண்கள்!". கட்டுரை. தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோபனாரி&oldid=3929340" இலிருந்து மீள்விக்கப்பட்டது