கோனியோ ஒளிமானி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குறிப்பேடு (1), மி்ட்சர்லிச்சின் ஒளியியல் கருவி (2)1900 ல் படிகவியலில் பயன்பட்ட கோனியோ ஒளிமானி

கோனியோ ஒளிமானி (Goniophotometer) என்பது ஒரு பொருளிலிருந்து பல்வேறு கோணங்களில் உமிழப்படும் ஒளியை அளக்க உதவும் கருவியாகும்.[1]

ஒளி-உமிழ் இருமுனைய ஒளிமூலங்கள்  அறிமுகப்படுத்தப்பட்டவுடன் கோனியோ ஒளிமானியின் பயன்பாடு அதிகமாகியுள்ளது. இவ்வொளி மூலங்களிலிருந்து பரவும் ஒளியின் இடப்பகிர்வு ஒரேவிதமாக இருப்பதில்லை.[2] ஒளி மூலங்களிலிருந்து பரவும் ஒளியின் இடப்பகிர்வு ஒரேவிதமாக இருந்தால், அது லாம்பெர்சியன் ஒளி மூலம் (Lambertian source) எனப்படுகிறது.[3] தற்போதுள்ள சட்டதிட்டங்களால் வாகனங்களில் ஒளி பரவும் விதம் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

வகைகள்[தொகு]

கோனியோ ஒளிமானியின் பல்வேறு வகைகள் இங்கே விளக்கப்பட்டுள்ளன.[4] இவை சர்வதேச ஒளியூட்ட ஆணையம் (International Commission Of Illumination) பிரசுரித்தவற்றிலிருந்து பெறப்பட்டது.[5]

வகை 1[தொகு]

நிலையாகப் பொறுத்தப்பட்ட கிடைமட்ட அச்சுடன் இணைக்கப்பட்டுள்ள செங்குத்து அச்சு. இவையிரண்டும் ஒளி மூலத்திலிருந்து ஒளி வரும் பாதைக்கு செங்குத்தாக அமையுமாறு அமைக்கப்பட்டுள்ளது. 

வகை 2[தொகு]

நிலையாகப் பொறுத்தப்பட்ட செங்குத்து  அச்சுடன் இணைக்கப்பட்டுள்ள கிடைமட்ட அச்சு. இவையிரண்டும் ஒளி மூலத்திலிருந்து ஒளி வரும் பாதைக்கு செங்குத்தாக அமையுமாறு அமைக்கப்பட்டுள்ளது.

வகை 1 மற்றும் வகை 2 ஆகியவை இரட்டை நிரல் கட்டமைப்பைக் கொண்டவை.  நிலையான கம்பி அமைப்பு விளக்குடன் (grille lamp) பொறுத்தப்பட்டுள்ளது.

வகை 3[தொகு]

நிலையாகப் பொறுத்தப்பட்ட செங்குத்து அச்சு அளக்கும் பாதைக்கு  செங்குத்தாக  அமைக்கப்பட்டுள்ளது. கிடைமட்ட அச்சு  ஒளி மூலத்தின் ஒளி வரும் பாதைக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ளது. 

வகை 3 ஆகியவை ஒற்றை  நிரல் கட்டமைப்பைக் கொண்டவை.

மேற்கோள்கள்[தொகு]

  1. Marx, P. (1997). "New goniophotometers for light-engineering laboratories". Light & engineering 5 (4): 32–36. http://www.mx-electronic.com/pdf/Drehspiegelengl.PDF. பார்த்த நாள்: 2017-08-22. 
  2. Lindemann, Matthias; Maass, Robert (15 December 2009). "Photometry and colorimetry of reference LEDs by using a compact goniophotometer". MAPAN 24 (3): 143–152. doi:10.1007/s12647-009-0018-6. 
  3. Palmer, James (2010). The Art of Radiometry. Bellingham, Washington: SPIE. பக். 27. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780819472458. 
  4. "The goniometer types A / B / C". http://www.optronik.de. 26 அக்டோபர் 2015 அன்று மூலம் பரணிடப்பட்டது. 11 November 2015 அன்று பார்க்கப்பட்டது. External link in |publisher= (உதவி)
  5. CIE 70, The Measurement of Absolute Luminous Intensity Distributions. CIE. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனியோ_ஒளிமானி&oldid=3731611" இருந்து மீள்விக்கப்பட்டது