கோனார் அணை

ஆள்கூறுகள்: 23°56′28″N 85°46′30″E / 23.94111°N 85.77500°E / 23.94111; 85.77500
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோனார் அணை
Konar Dam
Konar Dam
கோனார் அணை
கோனார் அணை is located in சார்க்கண்டு
கோனார் அணை
ஜார்கண்டில் கோனார் அணை அமைவிடம் (சிவப்பு நிறத்தில் குறியிடப்பட்டுள்ளது)
அமைவிடம்ஹசாரிபாக் மாவட்டம், ஜார்கண்ட், இந்தியா
புவியியல் ஆள்கூற்று23°56′28″N 85°46′30″E / 23.94111°N 85.77500°E / 23.94111; 85.77500
திறந்தது15 அக்டோப்ர 1955
அணையும் வழிகாலும்
தடுக்கப்படும் ஆறுகோனார் நதி
உயரம்48.77 மீட்டர்கள் (160.0 ft)
நீளம்4,535 மீட்டர்கள் (14,879 ft)
நீர்த்தேக்கம்
மேற்பரப்பு பகுதி27.92 சதுர கிமீ
மின் நிலையம்
இயக்குனர்(கள்)தாமோதர் பள்ளத்தாக்கு கழகம்

தாமோதர் பள்ளத்தாக்கு கழகத்தின் முதல் கட்டத்தில் சேர்க்கப்பட்ட நான்கு பல்நோக்கு அணைகளில் கோனார் அணை (Konar Dam) இரண்டாவது ஆகும். இது இந்திய மாநிலமான ஜார்க்கண்டில் ஹசாரிபாக் மாவட்டத்தில் தாமோதர் ஆற்றின் துணை நதியான கோனார் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு 1955இல் திறக்கப்பட்டது.[1] இந்த இடம் இயற்கையான அழகினை கொண்டுள்ளதால் பொழுதுபோக்கு இடமாக உருவாக்கப்பட்டுள்ளது.

நிலவியல்[தொகு]

இடம்[தொகு]

கோனார் அணையின் அமைவிடம் 23°56′28″N 85°46′30″E / 23.94111°N 85.77500°E / 23.94111; 85.77500 .

கோனார் அணை 4,535 மீட்டர்கள் (14,879 ft) நீளமும் 48.77 மீட்டர்கள் (160.0 ft) உயரமும் 27.92 சதுர கிலோ மீட்டர் நீர் கொள்ளவு திறனுடையது2.[2]

குறிப்பு: இதனுடன் வரைபடம் மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க சில இடங்களை வழங்குகிறது. வரைபடத்தில் குறிக்கப்பட்ட எல்லா இடங்களும் பெரிய முழுத்திரை வரைபடத்தில் இணைக்கப்பட்டுள்ளன.

டி.வி.சி கண்ணோட்டம்[தொகு]

1949இல் கோனார் அணை தளத்தில் கணக்கெடுப்பு பணிகள்
தாமோதர் பேசின்

1943ஆம் ஆண்டு ஏற்பட்ட பேரழிவு வெள்ளத்தின் விளைவாக, வங்காள ஆளுநர் தாமோதர் வெள்ள விசாரணைக் குழுவை நியமித்துத் தீர்வு காண நடவடிக்கைகளைப் பரிந்துரைத்தார். இது அமெரிக்காவில் டென்னசி பள்ளத்தாக்கு ஆணையத்திற்கு ஒத்த அதிகாரத்தை உருவாக்க பரிந்துரைத்தது. டி.வி.ஏ இன் மூத்த பொறியியலாளர் டபிள்யூ. எல். வூர்டுயின் ஆரம்ப அறிக்கையைத் தயாரித்தார். அதில் வெள்ளக் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம், மின் உற்பத்தி மற்றும் வழிசெலுத்தல் ஆகியவற்றை அடைய வடிவமைக்கப்பட்ட திட்டத்தின் சுருக்கமாக அது இருந்தது. இதன் விளைவாக, தாமோதர் பள்ளத்தாக்கு கழகம் 1948ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக பள்ளத்தாக்கு வளர்ச்சி மற்றும் மேலாண்மைக்காக நடைமுறைக்கு வந்தது. வூர்டுயின் எட்டு அணைகள் மற்றும் தடுப்பணை கட்டுமானத்தினை முன்மொழிந்தார். ஆனால் இது பின்னாளில், நான்கு அணைகளோடு அமல்படுத்த முடிவு செய்யப்பட்டது. திலையா, கோனார், மைதான் மற்றும் பஞ்செட் மற்றும் துர்காபூர் தடுப்பணை இவற்றுள் அடங்கும்.

முதல் அணை திலையா பராக்கர் ஆற்றின் குறுக்கே 1953இல் கட்டப்பட்டது. கோனார் ஆற்றின் குறுக்கே இரண்டாவது அணை 1955இல் திறக்கப்பட்டது. மைதானில் பராகர் குறுக்கே மூன்றாவது அணை 1957இல் திறக்கப்பட்டது. பஞ்செட்டில் தாமோதருக்கு குறுக்கே நான்காவது அணை 1959இல் திறக்கப்பட்டது.[3]

போக்குவரத்து[தொகு]

கோனார் அணை ஹசாரிபாக்கின் தென்கிழக்கே 41 கிலோமீட்டர்கள் (25 mi) தொலைவில் அமைந்துள்ளது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Konar Dam". india9.com. 2010-04-17 அன்று பார்க்கப்பட்டது.
  2. "DVC". Konar. DVC. 2007-02-10 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-04-17 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Damodar Valley Corporation". Dams and Barrages. DVC. 2010-04-29 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2010-06-06 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

வெளி ஒளிதங்கள்
Konar Dam
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோனார்_அணை&oldid=3109835" இருந்து மீள்விக்கப்பட்டது