உள்ளடக்கத்துக்குச் செல்

கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்தா பெலுட் (P169)
மலேசிய மக்களவைத் தொகுதி
சபா
Kota Belud (P169)
Federal Constituency in Sabah
கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி
(P169 Kota Belud)
மாவட்டம்கோத்தா பெலுட் மாவட்டம்
மேற்கு கரை பிரிவு
வாக்காளர்களின் எண்ணிக்கை79,885 (2022)[1][2]
வாக்காளர் தொகுதிகோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி
முக்கிய நகரங்கள் கோத்தா பெலுட் மாவட்டம்
பரப்பளவு1,372 ச.கி.மீ[3]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்1966
கட்சி      சபா பாரம்பரிய கட்சி
மக்களவை உறுப்பினர்இசுனாரயிசா முனிரா
(Isnaraissah Munirah)
மக்கள் தொகை107,243 (2020)[4]
முதல் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 1969
இறுதித் தேர்தல்மலேசியப் பொதுத் தேர்தல், 2022[1]

கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி (மலாய்: Kawasan Persekutuan Kota Belud; ஆங்கிலம்: Kota Belud Federal Constituency; சீனம்: 哥打毛律联邦选区) என்பது மலேசியா, சபா மாநிலத்தின் மேற்கு கரை பிரிவின், கோத்தா பெலுட் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு மக்களவைத் தொகுதி (P169) ஆகும்.[5]

கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இந்தத் தொகுதியில், முதன்முதலாக 1969-ஆம் ஆண்டில் மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2022-ஆம் ஆண்டில் நடைபெற்றது.

1969-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி, மலேசிய நாடாளுமன்றத்தின், மலேசிய மக்களவையில் பிரதிநிதிக்கப் படுகிறது.[6]

கோத்தா பெலுட் மாவட்டம்

[தொகு]

கோத்தா பெலுட் மாவட்டம் என்பது சபா மாநிலம், மேற்கு கரை பிரிவில் உள்ள ஒரு மாவட்டம் ஆகும். இந்த மாவட்டத்தின் தலைநகரம் கோத்தா பெலுட்.

சபா, மேற்கு கரை பிரிவில் உள்ள ஏழு மாவட்டங்களில் கோத்தா பெலுட் மாவட்டமும் ஒன்றாகும். சபா மாநிலத்தின் தலைநகரமான கோத்தா கினபாலுவில் இருந்து 77 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது. கோத்தா பெலுட் மாவட்டம் 20 முக்கிம்களாகப் பிரிக்கப்பட்டு உள்ளது.

கினபாலு மலை

[தொகு]

கோத்தா பெலுட் எனும் பெயர் பஜாவ் மொழியில் இருந்து வந்தது. "கோத்தா" என்றால் கோட்டை; "பெலுட்" என்றால் மலை என்று பொருள். எனவே, கோத்தா பெலுட் என்றால் "மலையில் உள்ள கோட்டை" என்று பொருள் படுகிறது.

கோத்தா பெலுட் நகரமும்; கோத்தா பெலுட் மாவட்டமும், சபா மாநிலத்தின் மிக அழகான நிலப் பகுதிகளில் ஒன்றாகும். கினபாலு மலையின் அழகியக் காட்சிகளைக் கோத்தா பெலுட் நகரத்தில் இருந்து பார்க்கலாம். கோத்தா பெலுட் நிலப் பகுதி, கினபாலு தேசியப் பூங்கா வரை பரந்து விரிந்து உள்ளது.[7] [8]

கோத்தா பெலுட் மக்களவைத் தொகுதி

[தொகு]




கோத்தா பெலுட் தொகுதி வாக்காளர்களின் இனப் பிரிவுகள் (2022):[9]

  மலாயர் (15.6%)
  சீனர் (2.6%)
  இதர இனத்தவர் (2.4%)





கோத்தா பெலுட் தொகுதி வாக்காளர்களின் பாலின புள்ளிவிவரங்கள் (2022)

  ஆண் (48.94%)
  பெண் (51.06%)

கோத்தா பெலுட் தொகுதி வாக்காளர்களின் வயது புள்ளிவிவரங்கள் (2022)

  18-20 (7.13%)
  21-29 (22.23%)
  30-39 (23.88%)
  40-49 (17.05%)
  50-59 (13.48%)
  60-69 (9.25%)
  70-79 (3.86%)
  80-89 (2.07%)
  + 90 (1.04%)
கோத்தா பெலுட் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (1969 - 2023)
நாடாளுமன்றம் தொகுதி ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
கோத்தா பெலுட் தொகுதி 1966-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது
1969-1971 நாடாளுமன்றம் இடைநிறுத்தம்[10]
3-ஆவது மக்களவை P107 1971-1973 முகமட் சாயிட் கெருவாக்
(Mohammad Said Keruak)
அசுனோ
1973-1974 பாரிசான் நேசனல்
(அசுனோ)
4-ஆவது மக்களவை P117 1974-1978
5-ஆவது மக்களவை 1978-1982
6-ஆவது மக்களவை 1982-1986 யகயா லம்போங்
(Yahya Lampong)
சுயேச்சை
7-ஆவது மக்களவை P136 1986-1990 பால் மாயிடோம் பான்சாய்
(Paul Maidom Pansai)
பாரிசான் நேசனல்
(ஐக்கிய சபா கட்சி)
8-ஆவது மக்களவை 1990-1995 காகாசான் ராக்யாட்
(அசுனோ)
9-ஆவது மக்களவை P148 1995-1999 சாலே சாயிட் கெருவாக்
(Salleh Said Keruak)
பாரிசான் நேசனல்
(அம்னோ)
10-ஆவது மக்களவை 1999-2004
11-ஆவது மக்களவை P169 2004-2008
12-ஆவது மக்களவை 2008-2013 அப்துல் ரகுமான் டாலான்
(Abdul Rahman Dahlan)
13-ஆவது மக்களவை 2013-2018
14-ஆவது மக்களவை 2018–2022 இசுனாரயிசா முனிரா
(Isnaraissah Munirah Majilis)
வாரிசான்
15-ஆவது மக்களவை 2022–தற்போது வரையில்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
மலேசியப் பொதுத் தேர்தல் 2022
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
இசுனாரயிசா முனிரா
(Isnaraissah Munirah)
சபா பாரம்பரிய கட்சி (Heritage)25,14846.544.28
அப்துல் ரகுமான் டாலான்
(Abdul Rahman Dahlan)
பாரிசான் நேசனல் (BN)20,56638.063.52
மாடலி பின் பங்காலி
(Madeli @ Modily bin Bangali)
பாக்காத்தான் அரப்பான் (PH)8,32315.4015.40 Increase
மொத்தம்54,037100.00
செல்லுபடியான வாக்குகள்54,03797.77
செல்லாத/வெற்று வாக்குகள்1,2352.23
மொத்த வாக்குகள்55,272100.00
பதிவான வாக்குகள்79,88567.6414.48
Majority4,5828.480.77
      சபா பாரம்பரிய கட்சி கைப்பற்றியது
மூலம்: [11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Infografik Statistik Pilihan Raya Umum Ke-15 (Keputusan 222 Parlimen)".
  2. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF). Election Commission of Malaysia. 10 April 2018. p. 18. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  3. Laporan Kajian Semula Persempadanan Mengenai Syor-Syor Yang Dicadangkan Bagi Bahagian-Bahagian Pilihan Raya Persekutuan Dan Negeri Di Dalam Negeri-Negeri Tanah Melayu Kali Keenam Tahun 2018 Jilid 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  4. "Kawasanku" (in ஆங்கிலம்). Department of Statistics Malaysia. 2023-09-24. பார்க்கப்பட்ட நாள் 2023-09-24.
  5. Demarcation Review Report on Proposed Recommendations for Federal and State Electoral Divisions in the States of Malaya Sixth Year 2018 Volume 1 (PDF) (Report). Election Commission of Malaysia. 2018. பார்க்கப்பட்ட நாள் 2020-01-29.
  6. "Federal Government Gazette, Notice Under Subregulation 11(5A), Polling Hours for the Fifteenth General Election" (PDF). Attorney General's Chambers. 31 October 2022. Archived from the original (PDF) on 19 நவம்பர் 2022. பார்க்கப்பட்ட நாள் 31 ஜூலை 2024. {{cite web}}: Check date values in: |access-date= (help)
  7. "The town of Kota Belud is located about an hour and a half north of Kota Kinabalu. The surrounding district is one of the most beautiful regions in Sabah and provides some of the best panoramic views of Mount Kinabalu". Sticky Rice Travel. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.
  8. "Nama Kota Belud berasal dari bahasa suku kaum Bajau. Dalam bahasa Bajau, KOTA membawa maksud PERTAHANAN dan BELUD pula bermakna BUKIT. Oleh itu, Kota Belud boleh diterjemahkan ke dalam bahasa Malaysia sebagai BUKIT PERTAHANAN". www.sabah.edu.my. பார்க்கப்பட்ட நாள் 30 March 2022.
  9. "15th General Election-Oriental Daily-2022". ge15.orientaldaily.com.my (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 30 July 2024.
  10. "www.parlimen.gov.my" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2016-05-19.
  11. "PARLIAMENTARY CONSTITUENCIES FOR THE STATE OF SABAH" (PDF). பார்க்கப்பட்ட நாள் 9 July 2024.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]