உள்ளடக்கத்துக்குச் செல்

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோத்தா கெமுனிங் (N50)
சிலாங்கூர் சட்டமன்றத் தொகுதி
State Constituency in Selangor
வாக்காளர்களின் எண்ணிக்கை81,946 (2023)[1]
முன்னாள் தொகுதி
உருவாக்கப்பட்ட காலம்2018
கட்சி      பாக்காத்தான் அரப்பான்
சட்டமன்ற
உறுப்பினர்
பிரகாஷ் ஜம்புநாதன்
முதல் தேர்தல்2018
இறுதித் தேர்தல்2023

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி (N50) (மலாய்: Bahagian Pilihan Raya Kota Kemuning; ஆங்கிலம்: Kota Kemuning State Constituency; சீனம்: 哥打哥文宁州议席) என்பது மலேசியா, சிலாங்கூர், சா ஆலாம் மாநகராட்சியில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இந்தத் தொகுதி கோத்தா ராஜா மக்களவைத் தொகுதியில் (P111); கோத்தா கெமுனிங் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ளது.

கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி 2018-ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. மறுசீரமைக்கப்பட்ட இந்தத் தொகுதியில், முதன்முதலாக 2018-ஆம் ஆண்டில் மலேசியப் பொதுத் தேர்தல் நடைபெற்றது. இறுதியாக, 2023-ஆம் ஆண்டில் மாநிலத் தேர்தல் நடைபெற்றது.

2018-ஆம் ஆண்டில் இருந்து கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதி, சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தில் பிரதிநிதிக்கப் படுகிறது. தற்போது பிரகாஷ் ஜம்புநாதன் (Preakas Sampunathan) என்பவர் இந்தச் சட்டமன்றத் தொகுதியின் உறுப்பினராக உள்ளார். கோத்தா கெமுனிங் தொகுதியின் தற்போதைய வாக்காளர் எண்ணிக்கை: 39.8% மலாய்க்காரர்கள்; 33.4% சீனர்கள்; 23.1% இந்தியர்கள்; 3.76% பிற இனத்தவர் என பதிவாகி உள்ளது.

30 மார்ச் 2018 அன்று வெளியிடப்பட்ட மத்திய அரசிதழின்படி, கோத்தா கெமுனிங் தொகுதி 14 வாக்குச் சாவடித் தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[2]

தொகுதி வரலாறு

[தொகு]




கோத்தா கெமுனிங் சட்டமன்றத் தொகுதியின் வாக்காளர் இனப் பிரிவுகள் (2023)[3]

  மலாயர் (39.8%)
  சீனர் (33.4%)
  இதர இனத்தவர் (3.76%)
கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர்கள்
சட்டமன்றம் ஆண்டுகள் உறுப்பினர் கட்சி
செரி மூடா தொகுதியிலிருந்து உருவாக்கப்பட்டது
14-ஆவது 2018-2023 கணபதிராவ் விருமன் பாக்காத்தான்
(பி.கே.ஆர்)
15-ஆவது 2023–தற்போது வரையில் பிரகாஷ் ஜம்புநாதன்

தேர்தல் முடிவுகள்

[தொகு]
சிலாங்கூர் மாநிலத் தேர்தல் 2023[4]
வேட்பாளர்கட்சிவாக்குகள்%+/–
பிரகாஷ் ஜம்புநாதன்பாக்காத்தான்41,25470.080.55
ஜிம்மி சியூ சைபெரிக்காத்தான்16,96628.8228.81 Increase
குணசேகரன் குப்பன்மக்கள் கட்சி6511.111.11 Increase
மொத்தம்58,871100.00
செல்லுபடியான வாக்குகள்58,87199.40
செல்லாத/வெற்று வாக்குகள்3580.60
மொத்த வாக்குகள்59,229100.00
பதிவான வாக்குகள்81,94659,22920.43
Majority24,28841.2712.14
      பாக்காத்தான் அரப்பான் கைப்பற்றியது

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Electoral Roll for the 14th Malaysian General Election Updated as of 10 April 2018" (PDF) (in மலாய்). மலேசிய தேர்தல் ஆணையம். 2018-04-16. p. 12. Retrieved 2018-04-25.
  2. "Federal Government Gazette: Notice of Polling Districts and Polling Centres for the Federal and State Constituencies of the States of Malaya [P.U. (B) 157/2018]" (PDF). Attorney General's Chambers of Malaysia. 2018-03-30. Retrieved 2019-01-03.[தொடர்பிழந்த இணைப்பு]
  3. "15th Selangor State Election - Results Overview". live.chinapress.com.my. Retrieved 2023-08-11.
  4. "Warta Kerajaan Persekutuan - Keputusan Pilihan Raya Yang Dipertandingkan Dan Penyata Pengundian Selepas Penjumlahan Rasmi Undi Bahagian Pilihan Raya Negeri Bagi Pahang" (PDF). Jabatan Peguam Negara. 2022-12-14. Retrieved 2024-05-13.{{cite web}}: CS1 maint: date and year (link)

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]