கோதாபயன் (உருகுணை)
Jump to navigation
Jump to search
கோதாபயன் என்பவன் உருகுணையை ஆண்ட சிங்கள அரசனாவான்.
இரு வேறு ஆதாரங்கள்[தொகு]
இவன் மகாவம்சத்தின் படி உருகுணை அரசை தொடங்கி வைத்தவனான மகாநாகனின் இரண்டாம் மகனாவான். இவனுக்கு அட்டாலய திச்சன் தமையன் ஆவான்.
ஆனால் தாதுவம்சம் என்னும் நூலின் படி இவன் உருகுணை அரசை ஆண்ட தமிழர் அரசை அழித்து அதில் இருந்த பத்து சகோதர அரசர்களைக் கொன்று ஆட்சியைப் பிடித்தவன்.[1] அந்த பாவத்தைப் போக்க இவன் பல பௌத்த விகாரைகளை அமைத்ததாக தாதுவம்சம் நூல் குறிப்பிடுகிறது.[1][2]
மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]
- ↑ 1.0 1.1 மயிலை சீனி. வேங்கடசாமி (2007, திருவள்ளுவர் ஆண்டு - 2038). சங்ககாலத் தமிழக வரலாறு. சென்னை: மீனா கோபால் பதிப்பகம். பக். (211 - 218)/232.
- ↑ ஸ்ரீசாகுசந்தர், தாதுவம்சம், பக்கம் 23-24