உள்ளடக்கத்துக்குச் செல்

கோட் அட்டு மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட் அட்டு மாவட்டம்
ضِلع کوٹ ادو
மாவட்டம்
நாடு பாக்கித்தான்
மாகாணம்பஞ்சாப்
தலைமையிடம்கோட் அட்டு
அரசு
  வகைமாவட்ட (நிர்வாகி-துணை ஆணையாளர்)
பரப்பளவு
  மாவட்டம்3,471 km2 (1,340 sq mi)
மக்கள்தொகை
 (2023)[1]
  மாவட்டம்14,86,758
  அடர்த்தி430/km2 (1,100/sq mi)
  நகர்ப்புறம்
2,83,819 (19.20%)
  நாட்டுப்புறம்
12,02,939 (80.80%)
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)
இடக் குறியீடு0697
வருவாய் வட்டங்கள்2

கோட் அட்டு மாவட்டம் (Kot Addu District), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். பஞ்சாப் மாகாணத்தில் தென்மேற்கில் அமைந்த கோட் அட்டு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் கோட் அட்டு நகரம் ஆகும். கோட் அட்டு நகரமானது பஞ்சாப் மாகாணத் தலைநகரான லாகூருக்கு தென்மேற்கில் 394 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்து]க்கு தென்மேற்கே 594 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

மாவட்ட எல்லைகள்

[தொகு]

கோட்ட அட்டு மாவட்டத்தின் வடக்கில் லைய்யா மாவட்டம், கிழக்கிலும், தெற்கிலும் தௌன்சா மாவட்டம், தென்மேற்கில் தேரா காசி கான் மாவட்டம் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 251,512 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 1,486,758.[2]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 100.85 ஆண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு ஆகும் 57.44%.[3][4]10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 432,584 (29.12%) ஆக உள்ளனர். [5]நகர்புறங்களில் 283,819 (19.09%) மக்கள் வாழ்கின்றனர்.[3]

சமயங்கள்

[தொகு]

லைய்யா மாவட்டத்தில் இசுலாம் 99.43%, கிறித்துவம் 0.50% மற்றும் பிற சமயங்கள் 0.07% மக்கள் பின்பற்றுகின்றனர்.

மொழிகள்

[தொகு]

லைய்யா மாவட்டத்தில் சராய்கி மொழியை 79.80% மக்களும், 11.60% மக்கள் பஞ்சாபி மொழியையும், உருது மொழியை 4.79% மக்களும், பஷ்தூ மொழியை 2.66% மக்களும் தாய் மொழியாக பேசுகின்றனர்.[6]

மாவட்டம் நிர்வாகம்

[தொகு]

இம்மாவட்டம் 2 வருவாய் வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

வருவாய் வட்டம்[7] பரப்பளவு

(km²)[8]

மக்கள் தொகை

(2023)

மக்கள்தொகை அடர்த்தி

(ppl/km²)

(2023)

எழுத்தறிவு %

(2023)[9]

ஒன்றியக் குழுக்கள்
சௌக் சர்வார் சாகீத் வட்டம் 1,785 414,578 232.26 55.50%
கோட் அட்டு வட்டம் 1,686 1,072,180 635.93 58.19% 32
பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் 41 மாவட்டங்கள்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF). Pakistan Bureau of Statistics.
  2. "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
  3. 1 2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  4. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  5. "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. Divisions/Districts of Pakistan பரணிடப்பட்டது 2006-09-30 at the வந்தவழி இயந்திரம் Note: Although divisions as an administrative structure has been abolished, the election commission of Pakistan still groups districts under the division names
  8. "TABLE 1 : AREA, POPULATION BY SEX, SEX RATIO, POPULATION DENSITY, URBAN POPULATION, HOUSEHOLD SIZE AND ANNUAL GROWTH RATE, CENSUS-2023, PUNJAB" (PDF).
  9. "LITERACY RATE, ENROLMENT AND OUT OF SCHOOL POPULATION BY SEX AND RURAL/URBAN, CENSUS-2023" (PDF).
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்_அட்டு_மாவட்டம்&oldid=4316999" இலிருந்து மீள்விக்கப்பட்டது