உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்பேடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்பேடு
Kotpad
தமயந்தி நகர்
நகரம்
கோட்பேடுKotpad is located in ஒடிசா
கோட்பேடுKotpad
கோட்பேடு
Kotpad
இந்தியாவின் ஒடிசாவில் அமைவிடம்
கோட்பேடுKotpad is located in இந்தியா
கோட்பேடுKotpad
கோட்பேடு
Kotpad
கோட்பேடு
Kotpad (இந்தியா)
ஆள்கூறுகள்: 19°09′45″N 82°19′32″E / 19.1624°N 82.3256°E / 19.1624; 82.3256
நாடு இந்தியா
மாநிலம்ஒடிசா
மாவட்டம்கோராபுட்
மக்கள்தொகை
 (2011)
  மொத்தம்16,326
மொழிகள்
  அலுவல்ஒடியா
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
வாகனப் பதிவுஒடி 10
இணையதளம்odisha.gov.in

கோட்பேடு (Kotpad) என்பது இந்தியாவின் ஒடிசா மாநிலத்திலுள்ள கோராபுட் மாவட்டத்தின் ஒரு நகரமும் பேரூராட்சியுமாகும். கோட்பேடு சாலை தொடருந்து நிலையம் கோட்பேடு நகருக்கு அருகிலுள்ள தொடருந்து நிலையமாகும். கிழக்கு கடற்கரை இரயில்வேயின் ஒரு பகுதியாக இந்த தொடருந்து நிலையம் இயங்குகிறது.

சேலை மற்றும் கைத்தறி தயாரிப்புகளுக்கு கோட்பேடு நகரம் பிரபலமானதாகும். கோட்பேட் கைத்தறி என்பது கோராபுட்டில் உள்ள கோட்பேடு கிராமத்தைச் சேர்ந்த மிர்கன் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடி நெசவாளர்களால் நெய்யப்பட்ட காய்கறி சாயம் பூசப்பட்ட துணி வகையாகும்.

இயக்குனர் விசுவநாத் ரத்தின் விருது பெற்ற திரைப்படமான கோட்பேட் வீவிங்: தி சுடோரி ஆஃப் எ ரேசு அகெய்ன்சுட்டு டைம் மூலம் கோட்பேடு நகரம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்தது.

மக்கள் தொகையியல்

[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, கோட்பேடு நகரத்தின் மக்கள் தொகை 16,326 ஆகும். இதில் 7945 பேர் ஆண்கள் மற்றும் 8381 பேர் பெண்கள் இருந்தனர்.

கோட்பேடு நகரத்தில் 0-6 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மக்கள் தொகை 2014 ஆகும். இது கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 12.34% ஆகும்.கோட்பேடு நகரத்தின் சராசரி பாலின விகிதம் 1055 ஆகும். இது ஒரிசாவின் மாநில சராசரியான 979-என்பதை விட அதிகமாகும். மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி கோட்பேடு நகரத்தின் குழந்தை பாலின விகிதம் 998 ஆகும், இது ஒரிசாவின் சராசரியான 941-என்பதை விட அதிகமாகும். .

ஒரிசாவுடன் ஒப்பிடும்போது கோட்பேடு நகரத்தின் எழுத்தறிவு விகிதம் அதிகமாக உள்ளது. 2011 ஆம் ஆண்டில், ஒரிசாவின் எழுத்தறிவு விகிதம் 72.87% ஆக இருந்தபோது, கோட்பேடு கிராமத்தின் எழுத்தறிவு விகிதம் 76.24% ஆக இருந்தது. ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 83.60% ஆகவும், பெண்களின் எழுத்தறிவு விகிதம் 69.32% ​​ஆகவும் இருந்தது.[1]

கோட்பேடு நகரத்தில் மக்கள் தொகையில் பட்டியல் சாதியினர் 12.92 சதவீதமாகும். இங்கு பட்டியல் பழங்குடியினர் 24.42 சதவீதம் இருந்தனர்.

அரசியல்

[தொகு]

2019 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பத்மினி தியான் பிச்சு சனதா தளம் கட்சியின் பிரதிநிதியாப் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[2] முன்னதாக இத்தொதியில் 1977, 1980, 1985, 1995, 2000, 2004, மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் சந்திரசேகர் மச்கி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். தற்பொழுது பாரதிய சனதா கட்சியின் உறுப்பினரான உரூபா பாத்ரா இத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார்.

முக்கியத்துவம்

[தொகு]

கோட்பேடு நகரம், சிவன் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ள தமயந்தி சாகர் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பகுதி முன்னர் தமயந்திநகர் என்று அழைக்கப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kotpad Notified Area Committee City Population Census 2011-2026 | Orissa". www.census2011.co.in. Retrieved 2026-02-16.
  2. "Odisha Legislative Assembly". odishaassembly.nic.in. Archived from the original on 21 June 2020. Retrieved 2020-07-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்பேடு&oldid=4470203" இலிருந்து மீள்விக்கப்பட்டது