கோட்டைமேடு பள்ளிவாசல், கோயம்புத்தூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோட்டைமேடு பள்ளிவாசல்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்கோட்டைமேடு, கோயம்புத்தூர், தமிழ்நாடு, இந்தியா
சமயம்இசுலாம்
கட்டிடக்கலை தகவல்கள்
கட்டிடக்கலை வகைபள்ளிவாசல்
கட்டிடக்கலைப் பாணிஇசுலாமியக் கட்டிடக்கலை
அளவுகள்
குவிமாடம்(கள்)1
மினார்(கள்)2

கோட்டைமேடு பள்ளிவாசல் அல்லது கோட்டை ஹிதாய‌த்துல் இசுலாம் சாபியா ஜமாத் பள்ளிவாசல் (Kottaimedu Mosque) கோயம்புத்தூரிலுள்ள கோட்டைமேடு பகுதியில் அமைந்துள்ளது. இப்பள்ளிவாசல் கோவையில் எழுந்த முதல் மசூதி என்று கூறப்படுகிறது. [1].

அமைவிடம்[தொகு]

கோயம்புத்தூர் மாநகரின் மையப்பகுதியில் கோவை ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் இப்பள்ளிவாசல் அமைந்துள்ளது. இது இசுலாமியக் கட்டடக்கலையின் சிறப்புக் கூறுகளைக் கொண்ட பள்ளிவாசல் ஆகு‌ம்.[1]

வரலாறு[தொகு]

இப்பள்ளிவாசல் 17 ஆம் நூற்றாண்டில் திப்பு சுல்தான் ஆட்சியில் கட்டப்பட்டது. முதலில் 1776 ஆம் ஆண்டில் திப்பு சுல்தான் இப்பள்ளிவாசலைக் கட்டினார், பின்பு ஆங்கிலேயர் ஆட்சியில் இது சேதப்படுத்தப்பட்டது. தற்போதைய பள்ளிவாசல் கட்டிடம் 1901 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது. 'ஹாஜியார் வலியப்பா' என்று எல்லோராலும் அன்போடு அழைக்கப்படும் ஹாஜி முஹம்மது பிள்ளை ராவுத்தர் அவர்கள் இப்பள்ளியை புனரமைத்து இதற்கு சொத்துக்களையும் ஏற்படுத்தினார். [2]. 1921 இல் ஆங்கிலேயருக்கு எதிராக சுதந்திரத்திற்காக மலபார் கலகத்தில் போராடி உயிர்நீத்த மாப்பிள்ளை முசுலிம்கள் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனர்.[3][4]

அமைப்பு[தொகு]

இப்பள்ளிவாசல் வெள்ளை நிற பளிங்கு தூண்களையும் கறுப்பு நிற பளிங்கு தலையையும் கொண்டது. சிவப்பு நிற கம்பளம் மைசூர் நகரில் இருந்து கொண்டு வரப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "கோட்டை மேடு மசூதி". தமிழ்நாடு சுற்றுலாத் துறை.
  2. 2.0 2.1 "Mosque in History". The Hindu. பார்த்த நாள் OCTOBER 16, 2013.
  3. "Mosque in Coimbatore". Coimbatoreplaza.
  4. "Mosque in Coimbatore". coimbatoreonline CITY GUIDE.