கோட்டைமலை, படவேடு




கோட்டைமலை அல்லது இராசகம்பீர மலை (Padavedu Kottamalai) என்பது தென்னிந்தியாவின், தமிழ்நாட்டின், திருவண்ணாமலை மாவட்டம் சவ்வாது மலைகளில் உள்ள ஒரு மலையாகும்.
கோயில்
[தொகு]இந்த மலையில் வேணுகோபால சுவாமி கோயில் அமைந்துள்ளது.[1] இது கடல் மட்டத்தில் இருந்து 2,160 அடி உயரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலானது இராசகம்பீர சம்புவரையர் மன்னரால் 12 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.[2] சேதமுற்றிருந்த இக்கோயில் சீரமைப்புப் பணிகள் 1986 இல் டி.வி.எஸ் நிறுவனத்தாரால் மேற்கோள்ளப்பட்டு 1993 இல் பணிகள் நிறைவுபெற்றன. இக்கோயில் சனிக்கிழமைகளில் மட்டும் காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை திறந்திருக்கும். கோயிலுக்கு வனப்பகுதியில் உள்ள மண் பாதை வழியே நடந்து செல்லவேண்டும். பின்னர் 350 படிகளில் ஏறி கோயிலுக்குச் செல்லவேண்டும்.[3] நடக்க முடியாத பக்தர்களின் வசதிக்காக இலவசமாக உழுவை (டிராக்டர்) போக்குவரத்து சனிக்கிழமைகளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை 7 மணிக்கு சற்று முன்பு படவீட்டில் டி.வி.எஸ் அலுவலகம் முன்பு பக்தர்களை ஏற்றிச் செல்ல உழுவை தயாராக இருக்கும். இந்த உழுவைகள் பயணிகள் பயணிக்க ஏற்றதாக வடிவமைக்கபட்டுள்ளது.
கோட்டை
[தொகு]மலையில் வேணுகோபால சுவாமி கோயில் அமைந்துள்ள பகுதியைச் சுற்றி கோட்டை இருந்துள்ளது. கோட்டை மிகவும் சிதைந்த நிலையில் தற்போது உள்ளது. இக்கோட்டையானது இயற்கை அரண் மிக்கதாகவும், யாரும் எளிதில் நெருங்க முடியாக இடத்திலும் அமைந்துள்ளது. கோட்டை அமைந்துள்ள முகடுப் பகுதியை ஒரு பெரும் பள்ளத்தாக்கு மலையிலிருந்து பிரிக்கிறது. கோட்டைக்குச் செல்ல தற்காலிகலிக மரப்பாலம் அமைக்கப்பட்டிருக்கும். எதிரிகள் கோட்டையைக் கைப்பற்ற வரும்போது மரப்பாலம் தகர்க்கப்படும். அதன் பின்னர் யாரும் கோட்டையை நெருங்க முடியாது. தற்காலத்தில் கோட்டையில் உள்ள கோயிலை அடைய இரும்பாலான பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
படத்தொகுப்பு
[தொகு]-
வேணுகோபால சுவாமி கோயில் விமானம்
-
கோட்டைமலை வேணுகோபால சுவாமி கோயில் தாயார் சந்நிதி முன்தோற்றம்
-
படவேடு கோட்டைமலைக்கு உழுவையில் பயணம் பின்பக்கத் தோற்றம்
-
கோட்டைமலையில் கோட்டையின் ஒரு கட்டடம்
-
கோட்டைமலை வேணுகோபால சுவாமி கோயில் திருப்பணிக் கல்வெட்டு
மேற்கோள்கள்
[தொகு]- ↑ தினத்தந்தி (2023-09-17). "படவேடு கோட்டைமலை வேணுகோபால சுவாமி கோவிலில் புரட்டாசி உற்சவ விழா". www.dailythanthi.com. Retrieved 2025-02-27.
- ↑ மலர், மாலை (2022-09-21). "படவேடு கோட்டைமலை வேணுகோபால சுவாமி கோவில் புரட்டாசி உற்சவம் 24-ந்தேதி தொடங்குகிறது". www.maalaimalar.com. Retrieved 2025-02-27.
{{cite web}}: Text "padavedu kottaimalai sri venugopala swamy temple Purattasi Festival on 24th" ignored (help) - ↑ மலை உச்சியிலே மயக்கும் வேணுகானம், தினமணி, 2015, சனவரி, 9