கோட்டூர் சோமன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டூர் சோமன்
Kottur Soman
கோன்னி யானை சோமன்
இனம்ஆசிய யானை
பால்ஆண்
பிறப்பு1942
கோன்னி, கேரளம்
நாடுஇந்தியா
அறியப்படுவதற்கான
 காரணம்
மூத்த வாழும் யானை
உரிமையாளர்கேரள வனத்துறை

கோட்டூர் சோமன் (Kottur Soman) என்பது இந்தியாவிலுள்ள கேரள வனத் துறைக்குச் சொந்தமான உலகிலேயே மிகவும் வயதான யானையாகும்.[1]

கேரள வனத்துறையினர் 1968 ஆம் ஆண்டு ரன்னி வனச்சரகத்திற்கு உட்பட்ட தேக்குதோடு கெப்ரமாலா பகுதியில் இருந்து சோமனை கொள்முதல் செய்தனர். சோமனை கோன்னி யானைகள் முகாமுக்கு அழைத்துச் சென்ற பிறகு, அதற்கு பயிற்சி அளிக்கப்பட்டு நல்ல கும்கி யானையாக மாற்றப்பட்டது[2] 1977 ஆம் ஆண்டு வரை சோமனின் கீழ் பல யானைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் பிறகு அரசாங்கம் யானைகளை காட்டில் இருந்து பிடிப்பதை தடை செய்தது.[3] 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் கோட்டூர் யானைகள் சரணாலயத்தில் ஒரு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கு சோமனின் 78 ஆவது பிறந்தநாளுக்குப் பிறகு, மிக வயதான யானைக்கான கின்னசு உலக சாதனை பட்டியலில் இடம்பிடிக்க ஆணையம் தயாராகி வந்த நிலையில், சரணாலயத்தில் உள்ள மற்ற யானைகளால் சோமனுக்கு மரியாதை செய்யப்பட்டது.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. കുമാർ, ബി അജിത്. "Kotur Elephant Grandfather to enter into Guinnes book of records". Mathrubhumi (in மலையாளம்). Archived from the original on 2020-10-04. பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
  2. "തലയുയര്‍ത്തി ആനമുത്തച്ഛന്‍ ഗിന്നസിലേയ്ക്ക്". ETV Bharat News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
  3. ഡെസ്ക്, വെബ് (9 October 2020). "പ്രായത്തിൽ മുന്നിൽ; കോന്നി സോമൻ ഗിന്നസ് റെേക്കാഡിലേക്ക്". Madhyamam (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
  4. "Oldest living elephant; Soman honoured". Mathrubhumi (in மலையாளம்). Archived from the original on 2021-11-07. பார்க்கப்பட்ட நாள் 2021-02-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டூர்_சோமன்&oldid=3583441" இலிருந்து மீள்விக்கப்பட்டது