கோட்டூர்புரம் தொடருந்து நிலையம்
கோட்டூர்புரம் தொடருந்து நிலையம் கோட்டூர்புரம் | |||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| பொது தகவல்கள் | |||||||||||||||
| ஆள்கூறுகள் | 13°00′50″N 80°14′54″E / 13.013804°N 80.248271°E | ||||||||||||||
| நடைமேடை | பக்க நடைமேடை நடைமேடை-1 → வேளச்சேரி ** நடைமேடை-2 → சென்னைக் கடற்கரை ** (எதிர்கால விரிவாக்கம் பரங்கிமலை) (280 m) | ||||||||||||||
| இருப்புப் பாதைகள் | 2 | ||||||||||||||
| கட்டமைப்பு | |||||||||||||||
| கட்டமைப்பு வகை | உயர்த்தப்பட்ட | ||||||||||||||
| வரலாறு | |||||||||||||||
| திறக்கப்பட்டது | 26 சனவரி 2004 | ||||||||||||||
| சேவைகள் | |||||||||||||||
| |||||||||||||||
| |||||||||||||||
கோட்டூர்புரம் தொடருந்து நிலையம் (Kotturpuram railway station) என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வழித்தடத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சென்னையில் பக்கிங்காம் கால்வாயில் அமைந்துள்ள பிரத்தியேகமாக சென்னை பறக்கும் தொடருந்து திட்ட சேவை நிலையமாகும். இந்நிலையத்தினை கோட்டூர்புரம் பொன்னியம்மன் கோவில் சாலைவழியாக அணுகலாம்.
வரலாறு
[தொகு]சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தின் வலையமைப்பில் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கோட்டூர்புரம் நிலையம் 26 சனவரி 2004 அன்று திறக்கப்பட்டது.
அமைப்பு
[தொகு]கோட்டூர்புரம் தொடருந்து நிலையம் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இது பக்கிங்காம் கால்வாயின் கிழக்குக் பகுதியில் அடையாறு ஆற்றின் தென்பகுதியில் கட்டப்பட்டுள்ளது. சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டப் பாதையில் உள்ள மற்ற நிலையங்களைப் போலவே, கோட்டூர்புரம் தொடருந்து நிலையத்திலும் 2 பக்க நடைமேடைகள் உள்ளன. ஒவ்வொரு நடைமேடையின் நீளமும் 280 மீட்டர் ஆகும்.[1] கோட்டூர்புரம் தொடருந்து நிலைய கட்டிடம் அதன் அடித்தளத்தில் 4,312 சதுர மீட்டர் வாகன நிறுத்துமிடத்துடன் உள்ளது.[2]
நிலைய அமைப்பு
[தொகு]
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| தத | தெரு மட்டம் | வெளியேறு/நுழைவு |
| நிலை 1 | இடைமாடி | கட்டணக் கட்டுப்பாடு, நிலைய பயணச்சீட்டு நிலையங்கள், தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் |
| நிலை 2 | பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும் | |
| நடைமேடை 2 வடக்கு நோக்கி |
→ சென்னைக் கடற்கரை நோக்கி அடுத்த நிலையம் கசுதூரிபாய் நகர் | |
| நடைமேடை 1 தெற்கு நோக்கி |
← வேளச்சேரி நோக்கி அடுத்த நிலையம் கசுதூரிபாய் நகர் (எதிர்கால விரிவாக்க இணைப்பு பரங்கிமலை) | |
| பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும் | ||
| நிலை 2 | ||
வரிசை
[தொகு]கோட்டூர்புரம் சென்னைப் பறக்கும் தொடருந்துத் திட்டப் பாதையில் பதினொன்றாவது நிலையமாகும். வேளச்சேரியிலிருந்து திரும்பும் திசையில், இது தற்போது சென்னை கடற்கரை நிலையத்தை நோக்கிய ஏழாவது நிலையமாக உள்ளது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MRTS Phase-II Extension". Development of MRTS in Chennai. CMDA. Archived from the original on 15 August 2014. Retrieved 20 Aug 2012.
- ↑ R.Ramanathan. "Presentation on MRTS & Rail facilities in and around Chennai" (PDF). Traffic Transportation and Parking – Session 2. CMDA, Chennai. Archived from the original (PDF) on 2 July 2010. Retrieved 19 Aug 2012.
- ↑ "Chennai Beach – Velachery – Chennai Beach Week days service" (PDF). Southern Railways. Archived from the original (PDF) on 6 செப்டெம்பர் 2012. Retrieved 18 ஆகத்து 2012.
