உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்டிகலாப்புடி சீதாம்மா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோட்டிகலப்புடி சீதாம்மா (Kotikalapudi Seethamma)(1874–1936) என்பவர் ஓர் இந்திய எழுத்தாளரும் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இவர் கந்துகூரி வீரேசலிங்கம் பந்துலுவின் சீடராவார். இவரது பங்களிப்புகளில் அகல்யாபாய், சதுர்சா சதகமு, பக்திமார்கமு, சதிதர்மமு போன்றவை அடங்கும். 1913-இல் பாபட்லாவில் நடந்த பிரதமந்த்ரா மகிளாசபா என்ற முதல் தெலுங்கு பெண் எழுத்தாளர் கூட்டத்திற்கு இவர் தலைமை தாங்கினார்.[1][2]

ஆந்திர மாகாணத்தைக் கோரும் முதல் ஆந்திர மாநாட்டிற்கு முன்னதாக 1913ஆம் ஆண்டு பாபட்லாவில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிய பெருமை இவருக்குக் கிடைத்தது. விதவை மறுமணப் பிரச்சனை குறித்துப் பல கூட்டங்களில் உரையாற்றினார். இவருடைய உரைகள் "உபந்யசமாலிகா" (உரைகளின் மாலை) என்ற தலைப்பில் வெளியிடப்பட்டன. பெண்களுக்கான உயர்கல்வி குறித்த புத்தகத்தை இவர் எழுதியுள்ளார். இவர் ஒரு நாத்திக சமூக சீர்திருத்தவாதி. சமூகத்தில் பெண்கள் அப்போது அனுபவித்து வந்த மோசமான நிலையைக் கண்டு இவர் திகைத்துப் போனார்.[3]

படைப்புகள்

[தொகு]
  • அகலியாபாயின் வரலாறு
  • சதுர்சா சதகம்
  • கீதாசாரா (கவிதை)
  • சதிதர்மம்
  • உயர் கல்வி
  • கந்துகூரி வீரேசலிங்கத்தின் வரலாறு

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Kotikalapudi Seetamma". www.telugukiranam.com. Archived from the original on 2017-09-24. Retrieved 2017-09-24.
  2. Vepachedu, Sreenivasarao. "Telugu Women Writers of the Last Millennium". www.vepachedu.org. Archived from the original on 2018-12-28. Retrieved 2017-09-24.
  3. Suguna, B. (2009). Women's Movement (in ஆங்கிலம்). Discovery Publishing House. ISBN 9788183564250.

வெளி இணைப்புகள்

[தொகு]