உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்டா நீலிமா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டா நீலிமா
பிறப்புஆந்திரப் பிரதேசம், இந்தியா
தொழில்அரசியல்வாதி, எழுத்தாளர், ஆய்வாளர், அரசியல் விமர்சகர், ஓவியர்
மொழிஆங்கிலம்
தேசியம்இந்தியர்
கல்விஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
தில்லி பல்கலைக்கழகம்
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்
வகைபுனைவிலக்கியம், புனைவற்ற இலக்கியம், அரசியல் விமர்சனம்
குறிப்பிடத்தக்க படைப்புகள்வின்டோசு ஆஃப் விதர்பா:மேகிங் ஆஃப் சேடோசு ,
சூஸ் ஆஃப் த டெட்,
த ஹான்ஸ் சீசன்,
ரிவர்ஸ்டோன்,
மணிலெண்டர்
துணைவர்பவன் கேரா

கோட்டா நீலிமா (Kota Neelima) என்பவர் இந்திய அரசியல்வாதி, எழுத்தாளர், ஆய்வாளர், அரசியல் விமர்சகர், ஓவியர் ஆவார். கிராமப்புற வறுமை, பாலினச் சமத்துவம், இந்தியாவில் விவசாயிகளின் தற்கொலைகள், ஜனநாயக சமூகங்களின் விளிம்புநிலை மக்களின் வாழ்க்கை ஆகியவை இவரது எழுத்துகள், ஆய்வுகளின் முக்கிய கருப்பொருள்களாகும்.வின்டோசு ஆஃப் விதர்பா:மேகிங் ஆஃப் சேடோசு என்ற புனைவற்ற நூலையும், சூஸ் ஆஃப் த டெட் உள்ளிட்ட பல புதினங்களையும் எழுதியுள்ளார்.

ஆரம்பகால வாழ்க்கையும் கல்வியும்

[தொகு]

கோட்டா நீலிமா, பத்திரிகையாளரும் எழுத்தாளருமான கே.வி.எஸ். ராம சர்மா , உமா சர்மா ஆகியோருக்கு மகளாக ஆந்திரப் பிரதேசத்தில் பிறந்தார்.[1] இவர் தில்லிப் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முனைவர் பட்டமும், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு உறவுகள் துறையில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார்.[2]

பின்னர், அமெரிக்காவின் வாசிங்டன் டி.சி. நகரில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பால் ஹெச். நிட்ஸே மேம்பட்ட பன்னாட்டு ஆய்வுகள் பள்ளியில்தெற்காசிய ஆய்வுகள் துறையில் மூத்த ஆய்வாளராக பணியாற்றினார்.[3] மேலும், ஓவியர் அர்பனா கௌர் தலைமையிலான நுண்கலை மற்றும் இலக்கியக் கல்விக்கூடத்திலும் கலைப் பயிற்சி பெற்றார்.

இவரது கல்வி மற்றும் ஆய்வுப் பின்னணி அரசியல், சமூக நீதி, கிராமப்புறப் பிரச்சினைகள் , பாலினச் சமத்துவம் தொடர்பான இவரது எழுத்துகள் மற்றும் ஆய்வுகளுக்கு வலுவான அடித்தளமாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Senior journalist passes away". The Hindu. 20 December 2008. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-newdelhi/Senior-journalist-passes-away/article15364356.ece.
  2. D’Souza, Ornella (August 25, 2019). "Thorns in the fields of women farmers". The New Indian Express. https://www.newindianexpress.com/thesundaystandard/2019/aug/25/thorns-in-the-fields-of-women-farmers-2023842.html.
  3. Jayan, TV (25 March 2018). "Unseen victims of farm distress". The Hindu Business Line. https://www.thehindubusinessline.com/opinion/books/kota-neelima-book-review-widows-of-vidarbha-making-of-shadows/article23349489.ece.

வெளியிணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டா_நீலிமா&oldid=4560263" இலிருந்து மீள்விக்கப்பட்டது