கோட்டா, ஆந்திரப் பிரதேசம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்டா
Kota
கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்நெல்லூர்
ஏற்றம்8 m (26 ft)
மொழிகள்
 • அலுவல்பூர்வம்தெலுங்கு
நேர வலயம்இ.சீ.நே (ஒசநே+5:30)
அ.கு.எண் -->524411
தொலைபேசி குறியீடு+918624
வாகனப் பதிவுAP26

கோட்டா (Kota) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் உள்ள நெல்லூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு கிராமம் ஆகும். கோட்டா மண்டலத்தின் 19 கிராமங்களில் ஒன்றான இக்கிராமம் மண்டலத்தின் தலைமையிடமாகவும் ஓர் அரசியல் மையமாகவும் திகழ்கிறது.

புவியியல் அமைப்பு[தொகு]

14.0333° வடக்கு 80.0500° கிழக்கு என்ற அடையாள ஆள்கூறுகளில் கோட்டா கிராமம் பரவியுள்ளது. கூடூரில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை எண் ஐந்திற்கு கிழக்காகவும்,வங்காளவிரிகுடா கடற்கரையிலிருந்து 15 கிலோமீட்டர் தள்ளியும் கோட்டா கிராமம் அமைந்துள்ளது. சிறீயறிகோட்டா விண்கல ஏவு மையம், நெலாப்பட்டு பறவைகள் சரணாலயம் முதலிய சிறப்புவாய்ந்த இடங்கள் இங்கிருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளன[1]. மேலும், கடல் மட்டத்தில் இருந்து சராசரியாக 8 மீட்டர்கள் (26அடி) உயரத்தில் இக்கிராமம் அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

கோட்டா கிராமம் இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் சாலை போக்குவரத்தால் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. அருகில் கூடூர் தொடருந்து நிலையம் இருக்கிறது. சென்னை-விசயவாடா, திருப்பதி-விசயவாடா பாதைகளின் சந்திப்பாக கூடூர் தொடருந்து நிலையம் உள்ளது.

விவசாயம்[தொகு]

நெல், கரும்பு பயிரிடுதல் இக்கிராமத்தின் முதன்மையான விவசாயத் தொழிலாகும். மீன் வளர்ப்பும் இங்கு மேற்கொள்ளப்படுகிறது. நிலத்தடி நீர், தண்ணீர் தொட்டிகள் மூலமாகவே நீர்ப்பாசன வசதி செய்யப்படுகிறது. கோட்டா மண்டலத்தில் உள்ள கோதபாலம் மற்றும் குடாலி கிராமங்கள் விவசாயத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கும் கிராமங்களாக இருக்கின்றன.

மேற்கோள்கள்[தொகு]