கோட்டயம் புஷ்பநாத்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

புஷ்பநாதன் பிள்ளை (Kottayam Pushpanath மலையாளம்: കോട്ടയം പുഷ്പനാഥ്) இவரது புனைப்பெயரான கோட்டயம் புஷ்பநாத் என்ற பெயரில் பரவலாக அறியப்பட்டுள்ளார். மலையாள மொழியில் துப்பறியும் புதினங்கள் எழுதும் எழுத்தாளர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவராவார்.

ஆரம்பகால வாழ்க்கை[தொகு]

புஷ்பநாதன் எனும் இயற்பெயர் கொண்ட இவர் சத்யநேசன் மற்றும் ரச்சேல் தம்பதியினருக்கு மகனாக கோட்டயத்தில் மே 14,1937இல் பிறந்தார்.கோட்டயத்தில் உள்ள நல்ல மேய்ப்பன் பள்ளி மற்றும் எம்டி குருத்துவப் பள்ளியில் பள்ளிப் படிப்பை முடித்த இவர் கேரளப் பல்கலைக் கழகத்தில் வரலாற்றுப் பிரிவில் பட்டம் பெற்றார்.[1] டிடிசி பட்டம் பெற்ற பிறகு கோழிக்கோடில் உள்ள கோடியாத்தூர் பள்ளியில் ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.பின்னர், வரலாற்று ஆசிரியராக கள்ளர்குட்டி, தேவிகுளம்,காரபுழா, நாட்டகோம் மற்றும் கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் பணியாற்றினார்.[2]

எழுத்து வாழ்க்கை[தொகு]

எம்டி குருத்துவப் பள்ளியில் பயின்ற போது பள்ளி இதழுக்காக "திரமலா (அலைகள்)" எனும் சிறுகதையினை எழுதினார்.[3] சுவன்னா மனுசியன் எனும் அறிவியல் புனைகதையினை 1968இல் வெளியிட்டார்.[4] 1970 மற்றும் 1980 காலகட்டத்தில் அறிவியல் புனைகதை, திகில் புனைவு, சிறுகதை உள்ளிட்ட 300 படைப்புகளை வெளியிட்டுள்ளார்.[5] இவரது புதினம் சூர்ப்பனகை தமிழில் தொடராக வெளியானது. பிராம் இசுட்டோகரின் "டிராகுலா"[6] மற்றும் ஆர்தர் கொனன் டொயிலின் தி ஹௌண்ட் ஆஃப் தெ பேஸ்கர்வில்லே ஆகிய நூல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். இவரது பிரம்மராக்சாஸ் மற்றும் சுவன்னா அன்கி ஆகிய இரு புதினங்களை அடிப்படையாக வைத்து மலையாளத்தில் திரைப்படங்கள் வெளியாகின.[7][8]

தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகள்[தொகு]

 • டெவில்
 • ராஜராஜேசுவரி
 • ஓவர் பிரிட்ஜ்
 • ஆசியாவில் டிராகுலா
 • ஒரு நர்த்தகின் மரணம்
 • டயல் 0003
 • டெவில்ஸ் கார்னர்
 • டைனோசரஸ்
 • லெவல் கிராஸ்
 • ஹிட்லரின் ஸ்கல்
 • தீமோர் ஸ்கல்
 • மர்டர்
 • பிளேடு
 • நெப்போலியன் ப்ரிதிமா (நெப்போலியன் சிலை) சிம்ஹம் (சிங்கம்)
 • மர்டர் கேங்
 • சிவப்பு கயறு (ரெட் ரோப்)
 • புராஜக்ட் 90
 • கிங் கோப்ரா
 • ஜீப்
 • கருடண்
 • தேவநர்த்தகி
 • டெட் லாக்
 • அவன் வருனு
 • கணினி பெண்
 • டிடெக்டிவ் மார்சின் பீகாரஸ்த்வம்
 • ஜரசந்தா
 • சீகரட்
 • டெட்லி ஹாட்
 • பெர்முடா முக்கோணம்

வெளிஇணைப்புகள்[தொகு]

 1. "From Dracula to divination, novelist Pushpanath was game for it all". https://www.onmanorama.com/news/kerala/2018/05/02/from-dracula-to-divination-novelist-kottayam-pushpanath-was-game.html. 
 2. "Detective novelist Kottayam Pushpanath passes away" (in en). https://english.mathrubhumi.com/news/kerala/detective-novelist-kottayam-pushpanath-passes-away-kottayam-pushpanath-1.2780833. 
 3. രാഘവന്‍, ബിജു. "കോട്ടയം പുഷ്പനാഥിന്റെ എഴുത്തുകോട്ടയില്‍..." (in en) இம் மூலத்தில் இருந்து 2020-07-20 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200720135211/https://www.mathrubhumi.com/books/interview/kottayam-pushpanath-malayalam-detective-novel-1.2780861. 
 4. "Detective novelist Kottayam Pushpanath passes away" (in en). https://english.mathrubhumi.com/news/kerala/detective-novelist-kottayam-pushpanath-passes-away-kottayam-pushpanath-1.2780833. 
 5. Desk, India com News (2018-05-02). "Novelist Kottayam Pushpanath Passes Away at 80" (in en). https://www.india.com/news/india/kottayam-pushpanath-detective-novelist-dies-at-80-3031259/. 
 6. "Detective novelist Kottayam Pushpanath passes away at 80" (in en). 2018-05-02. https://english.newstracklive.com/news/kottayam-pushpanath-passes-away-sub-regional-cinema-creur--45847-1.html. 
 7. "Pushpanath, who popularized detective fiction, passes away - Kochi News - Times of India" (in en). May 3, 2018. https://timesofindia.indiatimes.com/city/kochi/pushpanath-who-popularized-detective-fiction-passes-away/articleshow/64006767.cms. 
 8. Nair, Jaikrishnan (2 May 2018). "Noted novelist Kottayam Pushpanath passes away" (in en). https://timesofindia.indiatimes.com/city/kochi/noted-novelist-kottayam-pushpanath-passes-away/articleshow/64002757.cms. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்டயம்_புஷ்பநாத்&oldid=3731607" இருந்து மீள்விக்கப்பட்டது