உள்ளடக்கத்துக்குச் செல்

கோட்கி மாவட்டம்

ஆள்கூறுகள்: 27°49′N 69°39′E / 27.817°N 69.650°E / 27.817; 69.650
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோட்கி மாவட்டம்
ضِلعو گھوٽڪي
மாவட்டம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் மாவட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 27°49′N 69°39′E / 27.817°N 69.650°E / 27.817; 69.650
நாடு பாக்கித்தான்
மாகாணம்சிந்து மாகாணம்
கோட்டம்கைர்பூர் கோட்டம்
நிறுவப்பட்ட ஆண்டு1983
தலைமையிடம்மிர்பூர் மாதேலோ
அரசு
 • வகைமாவட்டம் (நிர்வாகி-துணை ஆணையாளர்)
பரப்பளவு
 • மாவட்டம்6,083 km2 (2,349 sq mi)
மக்கள்தொகை
 • மாவட்டம்17,72,609
 • அடர்த்தி290/km2 (750/sq mi)
 • நகர்ப்புறம்
3,79,382 (21.40%)
 • நாட்டுப்புறம்
13,93,227
எழுத்தறிவு
 • எழுத்தறிவு %
  • மொத்தம்
    41.38%
  • 2023 ஆண்:
    55.32%
  • பெண்:
    26.27%
நேர வலயம்ஒசநே+5 (பாகிஸ்தான் சீர் நேரம்)

கோட்கி மாவட்டம் (Ghotki District), பாக்கித்தான் நாட்டின் தெற்கில் உள்ள சிந்து மாகாணத்தின் 30 மாவட்டங்களில் ஒன்றாகும். சிந்து மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்த கைர்பூர் கோட்டத்தில் இம்மாவட்டம் உள்ளது. இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மிர்பூர் மாதேலோ நகரம் ஆகும். நகரமானது, சிந்து மாகாணத் தலைநகரான கராச்சிக்கு வடகிழக்கில் 540 கிலோமீட்டர் தொலைவிலும்; நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 896 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இம்மாவட்டம் சிந்துவின் தார் பாலைவனத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் வடக்கிலிருந்து தெற்காக சிந்து ஆறு 87 கிலோமீட்டர் நீளத்திற்கு பாய்கிறது.

மாவட்ட நிர்வாகம்

[தொகு]

கோட்கி மாவட்டம் 5 வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது. அவைகள் பின்வருமாறு:

  • மிர்பூர் மாதேலோ வட்டம்[3]
  • தாகர்க்கி வட்டம்[4]
  • கோட்கி வட்டம்[3][4]
  • உபௌரோ வட்டம்[4]
  • கான்கர் வட்டம்[3][4]

மக்கள் தொகை பரம்பல்

[தொகு]

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 331,046 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 1,772,609 ஆகும்[5]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 107.99 ஆண்கள் வீதம் உள்ளனர்[1][6]. இதன் சராசரி எழுத்தறிவு 41.38% ஆகும். இதன் மக்கள் தொகையில் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 564,246 (32.05%) ஆக உள்ளனர்.[7]நகர்புறங்களில் 379,382 (21.40%) மக்கள் வாழ்கின்றனர்.[1]

சமயம்

[தொகு]

இம்மாவட்ட மக்கள் தொகையில் இசுலாம் சமயத்தை 93.35% மக்களும், இந்து சமயத்தை 6.35% மக்களும், கிறித்துவம் போன்ற சிறுபான்மைச் சமயங்களை 0.3% மக்களும் பின்பற்றுகின்றனர்.[8]இம்மாவட்டத்தின் மிர்பூர் மாதேலோ வட்டத்தில் சாதானி தர்பார் எனும் இந்துக் கோயில் உள்ளது.[9][10]

மொழி

[தொகு]

இம்மாவட்ட மக்கள் தொகையில் சிந்தி மொழியை 95.79% மக்களும், உருது மொழியை 1.79%% மக்களும் பேசுகின்றனர்.[11]

இதனையும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "7th Population and Housing Census - Detailed Results: Table 1" (PDF). Pakistan Bureau of Statistics.
  2. "Literacy rate, enrolments, and out-of-school population by sex and rural/urban, CENSUS-2023, SINDH" (PDF).
  3. 3.0 3.1 3.2 "Zila (District), Tehsil & Town Councils Membership for Sindh (Ghotki District)". Election Commission of Pakistan, Government of Pakistan website. Archived from the original on 5 March 2009. Retrieved 21 April 2023.
  4. 4.0 4.1 4.2 4.3 "Ghotki District: District and Tehsil Level Population Summary" (PDF). Pakistan Bureau of Statistics, Government of Pakistan website. Archived from the original (PDF) on 13 January 2019. Retrieved 10 December 2023.
  5. "7th Population and Housing Census - Detailed Results: Table 20" (PDF). Pakistan Bureau of Statistics.
  6. "7th Population and Housing Census - Detailed Results: Table 12" (PDF). Pakistan Bureau of Statistics.
  7. "7th Population and Housing Census - Detailed Results: Table 5" (PDF). Pakistan Bureau of Statistics.
  8. "7th Population and Housing Census - Detailed Results: Table 9" (PDF). Pakistan Bureau of Statistics.
  9. Shadani Darbar
  10. "Hindu pilgrims attend central ceremony of Shadani Darbar". Pakistan Today newspaper. 6 December 2018. https://www.pakistantoday.com.pk/2018/12/06/pakistan-issues-220-visas-to-indian-pilgrims-wishing-to-visit-sukkur-temple/. 
  11. "7th Population and Housing Census - Detailed Results: Table 11" (PDF). Pakistan Bureau of Statistics.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோட்கி_மாவட்டம்&oldid=4325728" இலிருந்து மீள்விக்கப்பட்டது