கோடை ஏரி (ஓரிகன்)

ஆள்கூறுகள்: 42°50′N 120°45′W / 42.83°N 120.75°W / 42.83; -120.75
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடை ஏரி
Summer Lake
கோடை ஏரி
அமைவிடம்லேக் கவுண்டி, ஓரிகன்,
 ஐக்கிய அமெரிக்கா
ஆள்கூறுகள்42°50′N 120°45′W / 42.83°N 120.75°W / 42.83; -120.75
வகைஇயற்கை, வடிநிலம்
முதன்மை வரத்துஅனா ஆறு
முதன்மை வெளியேற்றம்இல்லை
வடிநிலப் பரப்பு376 சதுர மைல்கள் (970 km2)
வடிநில நாடுகள் ஐக்கிய அமெரிக்கா
அதிகபட்ச நீளம்15 மைல்கள் (24 km)
அதிகபட்ச அகலம்5 மைல்கள் (8 km)
மேற்பரப்பளவு25,000 ஏக்கர்கள் (10,000 ha)
சராசரி ஆழம்1 அடி (0.30 m)
அதிகபட்ச ஆழம்2 அடிகள் (0.61 m)
நீர்க் கனவளவு25,000 acre feet (31,000,000 m3)
நீர்தங்கு நேரம்3.5 ஆண்டுகள்
கரை நீளம்135 மைல்கள் (56 km)
கடல்மட்டத்திலிருந்து உயரம்4,150 அடிகள் (1,260 m)
குடியேற்றங்கள்கோடை ஏரி ஓரிகன், பெயிஸ்லெ
மேற்கோள்கள்[1][2][3]
1 கரை நீளம் என்பது சரியாக வரையறுக்கப்பட்ட அளவீடு அன்று.

கோடை ஏரி (Summer Lake) என்றறிந்த இவ்வேரி, ஐக்கிய அமெரிக்காவின் வடமேற்கு மாநிலமான ஓரிகன் லேக் கவுண்டி என்னும் ஊரகப் பகுதியில் அமைந்துள்ளது. காரத்தன்மையுடைய பேரேரியாக அறியப்படும் இது, ஓரிகனின் மத்திய பிராந்தியத்தில் காணப்படுகிறது. இந்த கோடை ஏரியை, 1843-ம் ஆண்டில், ஆய்வு பயணியான ஜான் சி.பிரமோன்ட் என்பவர் கண்டறிந்து பெயர் சூட்டியதாக அறியப்படுகிறது.[4]

பரப்பளவு[தொகு]

சுமார் 25,000 ஏக்கர் பரப்பளவு உடைய இது, 24 கிலோமீட்டர் (15 மைல்கள்) நீளமும், 8 கிலோமீட்டர் (5 மைல்கள்) அகலமும் கொண்டதாகும். இவ்வேரி, சராசரியாக 1-2 அடிகள் உள்ள ஆழமற்ற மேலோட்டமாக காணப்படுகிறது. அமெரிக்காவின், இயற்கையான பெரும் நீரேந்து வடிநிலப் பகுதியாக உள்ள லேக் கவுண்டி பகுதியில், கோடை ஏரி போன்ற பல கார ஏரிகள் உள்ளன.[4]

வாழ்வாதாரம்[தொகு]

வடிநில நீர்நிலையான இப்பேரேரி சதுப்புநிலப் பறவைகளுக்கும், பிற வன உயிரிகளுக்கும் ஆதரவளிக்கிறது. வெண்தலைக் கழுகு, கனடா வாத்து, அரிவாள் மூக்கன், மஞ்சள்த்தலை கருங்குருவி, தபசி பாடும் பறவை, செவ்வால் பருந்துகள், பெருநீல கொக்கு, மேலும் பல வாத்து இனங்கள் உட்பட 250-க்கும் மேற்பட்ட பறவையினங்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது. மேலும், பல்லுயிர்களுக்கு பிடித்த, மற்றும் வேட்டையாட ஏற்ற ஏரியாக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சிறந்த காலமான மார்ச் - ஏப்ரல் மாதங்களில், தோகை வாத்து, மற்றும் அன்னங்கள் உள்ளிட்ட நீர்வாழ்பறவைகள் புலம்பெயர்ந்து மந்தைகளாக இவ்வேரிக்கு வருகின்றன. மாற்றும் ஏப்ரல் - மே மாதங்களில் குடிபெயர்ந்த நீர் பறவைகள் மற்றும் பாடும்பறவைகள், வேறொரு பகுதிக்கு புலம்பெயர்கிறது அக்காலங்களில் சுற்றுலாப்பயணிகள் பெருமளவில் அப்பகுதிக்கு வருவதாக கருதப்படுகிறது.[4]

பண்டைய ஏரி[தொகு]

கோடை ஏரியை சுற்றி தற்போது வறண்ட நிலங்களாக உள்ளவை, ஒரு காலத்தில் பசுமையாக இருந்துள்ளது. ப்ளெய்ஸ்டோசீன் (Pleistocene) எனப்படும் காலத்தின்போது (சுமார் 2,588,000 முதல், 11,700 ஆண்டுகளுக்கு முன்பு வரை) தெற்கு மத்திய ஓரிகன் என்ற இந்த பிராந்தியம், நன்செய் நிலங்களாக காணப்பட்டுள்ளது. பெரும் வடிநிலப் (Great Basin) பகுதியாக இருந்த இந்த பிராந்தியம் முழுவதும் பனியால் நிரப்பப்பட்டிருந்தது. பிற்காலத்தில் கடைசி பனிக்காலம் முடிவுற்று, ஆழமானவகையில், 461 சதுர மைல்கள் (1,190 km2) முதல், 375 அடிகள் (114 m) ஆழம் வரை, மழை ஆறுகளால் நன்னீர் ஏரியாக உருவாக்கும் பெற்றது.[5]

சான்றாதாரங்கள்[தொகு]

  1. Johnson, Daniel M.; Petersen, Richard R.; Lycan, D. Richard; Sweet, James W.; Neuhaus, Mark E., and Schaedel, Andrew L. (1985). Atlas of Oregon Lakes. Corvallis: Oregon State University Press. பக். 270. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-87071-343-4. 
  2. [[[:வார்ப்புரு:Gnis3]] "Summer Lake"]. Geographic Names Information System. United States Geological Survey. November 28, 1980. பார்க்கப்பட்ட நாள் December 23, 2012. {{cite web}}: Check |url= value (help)
  3. "Atlas of Oregon Lakes: Summer Lake (Lake County)". Portland State University. 1985–2012. பார்க்கப்பட்ட நாள் December 23, 2012.
  4. 4.0 4.1 4.2 "Summer Lake". christmasvalleyproperty.com (ஆங்கிலம்). © 2016. பார்க்கப்பட்ட நாள் 23 சூன் 2016. {{cite web}}: Check date values in: |date= (help)
  5. "Ancient Lakes", Oregon Historical Marker, Summer Lake, Oregon.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடை_ஏரி_(ஓரிகன்)&oldid=2081552" இலிருந்து மீள்விக்கப்பட்டது