உள்ளடக்கத்துக்குச் செல்

கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் இறகுப் பந்தாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுகளில் இறகுப் பந்தாட்டம்
நிகழ்வுகள்5 (ஆண்கள்: 2; பெண்கள்: 2; கலவை இணையர்: 1)
ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்
  • 1896
  • 1900
  • 1904
  • 1908
  • 1912
  • 1920
  • 1924
  • 1928
  • 1932
  • 1936
  • 1948
  • 1952
  • 1956
  • 1960
  • 1964
  • 1968
  • 1972
  • 1976
  • 1980
  • 1984
  • 1988
  • 1992
  • 1996
  • 2000
  • 2004
  • 2008
  • 2012
  • 2016

இறகுப்பந்தாட்டம் 1992 கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகளில் முதன்முறையாக முறையான போட்டியாகச் சேர்க்கப்பட்டது. தொடர்ந்து 6 ஒலிம்பியாடுகளில் போட்டியிடப்பட்டு வருகின்றது. ஒலிம்பிக் இறகுப் பந்தாட்டப் போட்டிகளில் இதுவரை 63 வெவ்வேறு நாடுகள் பங்கேற்றுள்ளன. இதில் 19 நாடுகள் 6 முறையும் பங்கேற்றுள்ளன. இந்த விளையாட்டுப் போட்டிகளை இறகுப் பந்தாட்ட உலகக் கூட்டமைப்பு ஒழுங்குபடுத்துகின்றது.

வரலாறு

[தொகு]

மியூனிக் நகரில் நடந்த 1972 ஒலிம்பிக் போட்டிகளில் இறகுப்பந்தாட்டம் முதன்முதலாகக் காட்சிப்படுத்தப்படும் விளையாட்டாக அறிமுகமானது. இருபதாண்டுகள் கழித்து பார்செலோனாவில் 1992 போட்டிகளில் 4 போட்டிகள் நடத்தப்பட்டன; ஆண்கள், பெண்கள் பிரிவில் ஒற்றையர், இரட்டையர் போட்டிகள் நடத்தப்பட்டன. ஒவ்வொரு போட்டியிலும் நான்கு பதக்கங்கள், இரு வெண்கலப் பதக்கங்களுடன், வழங்கப்பட்டன. அடுத்து அட்லான்டாவில் நடந்த 1996 ஒலிம்பிக்கில், கலவை இணையருடன் 5 போட்டிகளாயிற்று. தவிரவும் இரண்டு தோற்ற அரையிறுதி ஆட்டக்காரர்களுடன் வெண்கலப் பதக்கத்திற்கான போட்டியும் அறிமுகமானது. இந்தப் போட்டி வடிவம் 2016 வரை நீடித்துள்ளது.

போட்டிகள்

[தொகு]
  • ஆண்கள் ஒற்றையர்
  • ஆண்கள் இரட்டையர்
  • பெண்கள் ஒற்றையர்
  • பெண்கள் இரட்டையர்
  • கலவை இணையர்

பதக்கப்பட்டியல்

[தொகு]
நிலை நாடு தங்கம் வெள்ளி வெண்கலம் மொத்தம்
1 சீனா1781540
2 இந்தோனேசியா76619
3 தென் கொரியா67619
4 டென்மார்க்1337
5 சப்பான்1113
6 எசுப்பானியா1001
7 மலேசியா0527
8 ஐக்கிய இராச்சியம்0123
9 இந்தியா0112
10 நெதர்லாந்து0101
11 உருசியா0011
மொத்தம்333337103

இந்தியாவிலிருந்து பதக்கம் பெற்றவர்கள்

[தொகு]
ஒலிம்பியாடுபோட்டியாளர்போட்டிபதக்கம்
2012 இலண்டன்சாய்னா நேவால்பெண்கள் ஒற்றையர்வெண்கலப் பதக்கம்
2016 இரியோபுசார்லா வெங்கட சிந்துபெண்கள் ஒற்றையர்வெள்ளிப் பதக்கம்

வெளி இணைப்புகள்

[தொகு]