கோடீஸ்வரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கோடீஸ்வரி
250px
வகைஆட்ட நிகழ்ச்சி
மூலம்நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
வழங்கல்ராதிகா சரத்குமார்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
சீசன்கள்1
எபிசோடுகள்40
தயாரிப்பு
படப்பிடிப்பு தளங்கள்தமிழ் நாடு
ஓட்டம்தோராயமாக அங்கம் ஒன்று 50–55 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசைகலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி
ஒளிபரப்பான காலம்23 திசம்பர் 2019 (2019-12-23) –
14 பெப்ரவரி 2020 (2020-02-14)
Chronology
தொடர்புடைய தொடர்கள்நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி
உங்களில் யார் மகா இலட்சாதிபதி

கோடீஸ்வரி என்பது 23 திசம்பர் 2019 முதல் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழ் தொலைக்காட்சி விளையாட்டு நிகழ்ச்சி ஆகும்.[1][2] ஊ வாண்ட்சு டு பி எ மில்லியனர்? என்ற பிரித்தானிய நிகழ்ச்சியை அடிப்படையாகக் கொண்ட நீங்களும் வெல்லலாம் ஒரு கோடி என்ற விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிகழ்ச்சியின் மறு வடிவமாகும்.

இந்த நிகழ்ச்சியின் நிகழ்ச்சியின் சிறப்பு ஊ வாண்ட்சு டு பி எ மில்லியனர்? வரலாற்றில் முதல் முறையாகப் பெண்கள் மட்டுமே பங்கேற்கவுள்ள பிரத்யேக விளையாட்டு நிகழ்ச்சி ஆகும். இந்த நிகழ்ச்சியை பிரபல தமிழ் நடிகை ராதிகா சரத்குமார் என்பவர் தொகுத்து வழங்கியுள்ளார்.[3][4][5] இந்த நிகழ்ச்சியின் முதல் பருவம் பெப்ரவரி 14, 2020 ஆம் ஆண்டு அன்று 40 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

சாதனை[தொகு]

முதல் தமிழ்நாட்டின் 1 கோடி ரூபா வென்ற போட்டியாளர் கௌசல்யா என்ற வாய் மற்றும் காது கேட்க முடியாத ஒரு மாற்றுத்திறனாளி பெண் ஆகும்.[6][7]

தேர்வு[தொகு]

அக்டோபர் 28 தேதி முதல் தினமும் 8 மணிக்குத் தினம் ஒரு கேள்வி கேட்கப்படும். 8 கேள்விகளில் எதாவது ஒரு கேள்விக்குப் பதில் சொல்பவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முடியும்.

விதி முறைத்தாள்[தொகு]

இந்த விளையாட்டில் மொத்தம் 15 கேள்விகள் கேட்கப்படும். கேட்கப்படும் கேள்விகளுக்கேட்ப ₹1000 ரூபா முதல் ₹1 கோடி ரூபா வரை வெல்வதற்கான வாய்ப்பு உண்டு.

4 உதவும் விதிகள்
  • 50-50
  • பார்வையாளர்களின் கருத்து கணிப்பு
  • நிபுணரிடம் கேள்வி (தொலைபேசி அழைப்பு)
  • வேறு கேள்வி

பங்கேற்பாளர்கள்[தொகு]

வாழ்த்து[தொகு]

கோடீஸ்வரி நிகழ்ச்சியை பாராட்டி பாலிவுட் நடிகர் மற்றும் கோன் பனேங்கா கரோர்பதி நிகழ்ச்சியின் தொகுப்பாளரான அமிதாப் பச்சன் என்பவர் நிகழ்ச்சியை வாழ்த்தி ஒரு காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார்.[8]

தொடர்புடைய நிகழ்ச்சிகள்[தொகு]

  • உங்களில் யார் மகா இலட்சாதிபதி
    • இந்த நிகழ்ச்சி மே 2011ஆம் ஆண்டு இலங்கை தமிழ் தொலைக்காட்ச்சியான சக்தி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. முதல் பருவத்தை அபர்ணா சுதன் என்பவர் வழங்கினார். இரண்டாவது பருவமானது மே 12, 2012ஆம் ஆண்டு ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியை பாலேந்திரன் காண்டீபன் தொகுத்து நடத்தினார்.

ஆதாரங்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சி : திங்கள் - வெள்ளி இரவு 8 மணிக்கு
முன்னைய நிகழ்ச்சி கோடீஸ்வரி
(23 டிசம்பர் 2019 - 14 பெப்ரவரி 2020)
அடுத்த நிகழ்ச்சி
சிவகாமி
(20 பெப்ரவரி 2018 – 21 டிசம்பர் 2019)
திருமணம்
(17 பெப்ரவரி 2020 - ஒளிபரப்பில்)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோடீஸ்வரி&oldid=2930459" இருந்து மீள்விக்கப்பட்டது