உள்ளடக்கத்துக்குச் செல்

கோச் நினைவு மணிக்கூட்டுக் கோபுரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவ பீடக் கட்டிடமும் கின்சி சாலையில் உள்ள கோச் நினைவு மணிக்கூட்டுக் கோபுரமும் .

கோச் நினைவு மணிக்கூட்டுக் கோபுரம் (Koch Memorial Clock Tower) இலங்கையின் தலைநகர் கொழும்பில் அமைந்துள்ள கொழும்புப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்கு அடுத்த கின்சி சாலையில் அமைந்துள்ளது. இது கொழும்பு மருத்துவப் பள்ளியின் இரண்டாவது முதல்வரான மருத்துவர் ஈ. எல். கோச்சின் (1838-1877) நினைவாக 1881இல் கட்டப்பட்டது. இது இலங்கையின் தேசிய மருத்துவமனைக்கு முன்னால் நேரடியாக நிற்கிறது.

வரலாறு[தொகு]

எட்வின் லாசன் கோச் 1838 நவம்பர் 29 ஆம் தேதி யாழ்ப்பாணத்தில், உள்ளூர் கண்காணிப்பாளரான ஜான் காட்ஃபிரைட் கோச், ஏஞ்செனிடா தோர்தியா ஆல்டன்சு என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார். கோச் முதலில் கொல்கத்தாவில் உள்ள வங்காள மருத்துவக் கல்லூரியில் மருத்துவத் தகுதி பெற்றார். பின்னர், அபெர்டீன் பல்கலைக்கழகத்தில் மருத்துவத்தில் முனைவர் பட்டம் பெற்றார். சூலை 1862 இல் இவர் இலங்கை மருத்துவச் சேவையில் நுழைந்தார். கொழும்பு பொது மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நிபுணராகவும் இருந்தார் (இப்போது 'தேசிய மருத்துவமனை' என்று அழைக்கப்படுகிறது). கொழும்பு மருத்துவப் பள்ளி 1870 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டபோது கோச் அதன் முதல் விரிவுரையாளர்களில் ஒருவராக இருந்தார்.

இறப்பு[தொகு]

1875ஆம் ஆண்டில் மருத்துவர் ஜேம்ஸ் லூஸின் அதன் முதல்வராக நியமிக்கப்பட்டார். திசம்பர் 20, 1877 அன்று பிணக்கூறு ஆய்ய்வு செய்தபோது ஏற்பட்ட காயம் காரணமாக சீழ்பட்டு இறந்தார்.

மரியாதை[தொகு]

இவர் "தைரியமான அறுவை சிகிச்சை நிபுணர் எனவும், வெற்றிகரமான மருத்துவர் எனவும், மகப்பேறியல் நிபுணர்" எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளார். மருத்துவர் ஜே.எல். வெண்டர்ஸ்ட்ராடனின் (கொழும்பு மருத்துவப் பள்ளியின் மற்ற விரிவுரையாளர்களில் ஒருவர்) முயற்சியின் மூலம் ஒரு மணிக்கூட்டுக் கோபுரத்தை நிர்மாணிப்பதற்காக பொதுமக்களிடமிருந்து 3000 இலங்கை ரூபாய் திரட்டப்பட்டது. அந்த நேரத்தில் இலங்கையின் ஆளுநராக இருந்த சர் ஜேம்ஸ் இலாங்டனும், அரசு சார்பாக ரூ. 5,000 நன்கொடையாக வழங்கினார்.

கடிகார கோபுரத்தின் கல்வெட்டில் "மருத்துவக் கல்லூரியின் முதல்வர் ஈ. எல். கோச்சின் (1838-1877) நினைவாக பொதுமக்களாலும், மருத்துவ அதிகாரிகளாலும் நிதியளிக்கப்பட்டு 1881இல் கட்டப்பட்டது" எனப் பொறிக்கப்பட்டுள்ளது.

உசாத்துணை[தொகு]