கோச்சடை மீனாட்சி சொக்கநாதர் கோயில்
Appearance
கோச்சடை மீனாட்சி சொக்கநாதர் கோயில் | |
---|---|
ஆள்கூறுகள்: | 9°56′33″N 78°05′09″E / 9.9424°N 78.0859°E |
பெயர் | |
வேறு பெயர்(கள்): | பிட்டுக்கு மண் சுமந்த ஈசன் திருத்தலம், கோவிச்ச சடையன் கோயில் |
அமைவிடம் | |
நாடு: | இந்தியா |
மாநிலம்: | தமிழ்நாடு |
மாவட்டம்: | மதுரை மாவட்டம் |
அமைவிடம்: | கோச்சடை |
சட்டமன்றத் தொகுதி: | மதுரை மேற்கு (சட்டமன்றத் தொகுதி) |
மக்களவைத் தொகுதி: | மதுரை மக்களவைத் தொகுதி |
ஏற்றம்: | 190 m (623 அடி) |
கோயில் தகவல் | |
மூலவர்: | சொக்கநாதர் |
தாயார்: | மீனாட்சி அம்மன் |
குளம்: | சிவ தீர்த்தம் |
சிறப்புத் திருவிழாக்கள்: | சித்திரை திருக்கல்யாணம், ஆவணி மூலம் பிட்டுக்கு மண் சுமந்த திருவிழா, மகாசிவராத்திரி |
மீனாட்சி சொக்கநாதர் கோயில் என்பது தமிழ்நாடு மாநிலத்தில் மதுரை மாவட்டத்தின் கோச்சடை புறநகர்ப் பகுதியில் அமையப் பெற்றுள்ள ஒரு சிவன் கோயில் ஆகும்.[1] ஏழு வில்வ இலைகளை ஒரே காம்பில் கொண்ட பெண் வில்வ மரமும், மூன்று வில்வ இலைகளை ஒரே காம்பில் கொண்ட ஆண் வில்வ மரமும் ஒவ்வொன்றும் பக்கத்திலேயே மூலவருக்கு அருகில் வளர்ந்து காணப்படுகின்றன.[2] கோவிச்ச சடையன் என்ற திருநாமம் கொண்ட இறைவன், பெயர் மருவி, கோச்சடையான் என்ற அழைக்கப்பட்டு, பின்னர் தற்போது கோச்சடை சொக்கநாதர் என்று விளிக்கப்படுகிறார்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 190 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கோச்சடை மீனாட்சி சொக்கநாதர் கோயிலின் புவியியல் ஆள்கூறுகள், 9°56′33″N 78°05′09″E / 9.9424°N 78.0859°E ஆகும்.
இக்கோயிலின் மூலவர் சொக்கநாதர் மற்றும் தாயார் மீனாட்சி அம்மன் ஆவர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ ValaiTamil. "அருள்மிகு மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயில்". ValaiTamil. பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.
- ↑ "Meenakshi Sokkanathar Temple : Meenakshi Sokkanathar Meenakshi Sokkanathar Temple Details". temple.dinamalar.com. பார்க்கப்பட்ட நாள் 2023-08-10.