கோசிம்பசார்

ஆள்கூறுகள்: 24°07′N 88°17′E / 24.12°N 88.28°E / 24.12; 88.28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோசிம்பசார்
காசிம் பசார்
கணக்கெடுப்பு நகரம்
கோசிம்பசார் is located in மேற்கு வங்காளம்
கோசிம்பசார்
கோசிம்பசார்
Location in West Bengal, India
கோசிம்பசார் is located in இந்தியா
கோசிம்பசார்
கோசிம்பசார்
கோசிம்பசார் (இந்தியா)
ஆள்கூறுகள்: 24°07′N 88°17′E / 24.12°N 88.28°E / 24.12; 88.28
நாடு இந்தியா
மாநிலம்மேற்கு வங்காளம்
மாவட்டம்முர்சிதாபத்
ஏற்றம்17 m (56 ft)
மக்கள்தொகை (2011)மொழிகள்
 • மொத்தம்10,175
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுWB
மக்களவைத் தொகுதிபகரம்பூர்
சட்டமன்றத் தொகுதிபகரம்பூர்

கோசிம்பசார் அல்லது காசிம் பசார் (Cossimbazar or Kasim Bazar) என்பது இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தில் முர்சிதாபாத் மாவட்டத்தில் உள்ள பகரம்பூர் துணைப்பிரிவில் உள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமாகும். [1]

நிலவியல்[தொகு]

கோசிம்பஜார் 24.12 ° வடகிலும் 88.28 ° கிழக்கிலும் அமைந்துள்ளது. [2] இது சராசரியாக 17 மீட்டர் (56 அடி) உயரத்தில் உள்ளது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

கோசிம்பசார் (காசிம் பஜார் மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரம்) 2011 இல் 11,724 மக்கள் தொகையைக் கொண்டிருந்தது. அவர்களில் 5,978 ஆண்களும், 5,746 பெண்களும் இருந்தனர். 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த நகரத்தின் மக்கள் தொகை 10,175 ஆகும். [3]

0-6 வயதுடைய குழந்தைகளின் மக்கள் தொகை 981, அல்லது 8.37% ஆகும். பெண் பாலின விகிதம் மாநில சராசரியான 950க்கு எதிராக 961 ஆகும். மேற்கு வங்க மாநில மாநில சராசரி 956 உடன் ஒப்பிடும்போது குழந்தை பாலின விகிதம் 978 ஆகும். கல்வியறிவு விகிதம் 91.89%. இது மாநில சராசரியான 76.26% ஐ விட அதிகமாகும். மேலும் 2001ஆம் ஆண்டின் 78% வீதத்திலிருந்து அதிகரிப்பு. ஆண்களின் கல்வியறிவு 93.89% ஆகவும், பெண் கல்வியறிவு விகிதம் 89.81% ஆகவும் உள்ளது. [4] மக்கள் தொகை 99.45% இந்து, 0.22% சமண, 0.03% முஸ்லீம், 0.02% சீக்கியர், மற்றும் 0.01% பௌத்தர்கள் என்று இருந்தனர்.

வரலாறு[தொகு]

17 ஆம் நூற்றாண்டை விட இந்த இடத்தின் வரலாற்றைக் கண்டுபிடிக்க முடியாது என்றாலும், முர்சிதாபாத் உருவாவக்கதிற்கு நீண்ட காலத்திற்கு முன்பே இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்தது. முதல் ஐரோப்பிய வர்த்தகர்கள் இங்கு தொழிற்சாலைகளை அமைத்தனர். சரசுவதி ஆற்றின் வாயை தடுத்ததன் காரணமாக ஏற்பட்ட சத்கான் என்ற இடத்தின் அழிவுக்குப் பிறகு, வங்காளத்தின் சிறந்த வர்த்தக மையமாக கோசிம்பசார் ஒரு இடத்தைப் பெற்றது.

18 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கோசிம்பசார் மற்றும் முர்சிதாபாத்

ஆங்கிலம், டச்சு மற்றும் பிரெஞ்சு கிழக்கிந்திய நிறுவனங்கள் அனைத்தும் கோசிம்பசாரில் தொழிற்சாலைகளை பராமரித்தன. 1658 ஆம் ஆண்டில் கிழக்கிந்திய கம்பெனியின் முதல் ஆங்கில நிறுவனம் இங்கு நிறுவப்பட்டது. இந்த காலகட்டத்தின் ஆங்கில ஆவணங்களில், மற்றும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதி வரை, ஹூக்லி நதி கோசிம்பசார் நதி என்றும், ஹூக்லி, பத்மா நதி மற்றும் சலங்கி நதி ஆகிய மூன்றுக்குமிடையே முக்கோண நிலமாக இந்த நகரம் கோசிம்பசார் தீவாக நிற்கிறது. வங்காளத்தின் நவாப்களின் தலைநகரான முர்சிதாபாத்திற்கு அருகே தொழிற்சாலை இருப்பது, அதன் செல்வத்தின் முக்கிய ஆதாரமாகவும், அரசியல் முக்கியத்துவமாகவும் இருந்த போதிலும், அது தொடர்ந்து தாக்குதலுக்கான ஆபத்தை எதிகொண்டது. 1757 ஆம் ஆண்டில் நவாப் சிராச்-உத்-தௌலா, நிறுவிய முதல் தொழிற்சாலை இங்கு அமைந்தது. மேலும் வாரன் ஹேஸ்டிங்ஸ் முர்சிதாபாத்திற்கு கைதிகளை அழைத்து வந்தார். [5]

இந்த நகரம் கோசிம்பசார் மகாராஜாக்களின் இடமாக இருந்தது. 1773 முதல் 1785 வரை வங்காளத்தின் தலைமை ஆளுநராக இருந்த வாரன் ஹேஸ்டிங்ஸுக்கு பணம் அளிக்கும் காந்தா பாபுவின் சந்ததியினர் மகாராஜாக்களாக இருந்தனர்.. மஜாராஜாக்கள் கோசிம்பசாரில் ஒரு அரண்மனையை கட்டினர். அவற்றில் சில பகுதிகள் பனாரசு மகாராஜா சைத் சிங்கின் அரண்மனையிலிருந்து எடுக்கப்பட்ட கல்லால் செய்யப்பட்டவை. [6] மகாராஜா சர் மணிந்திர சந்திர நந்தி (1860 - 1929) வங்காள மறுமலர்ச்சியில் உருவான ஒரு பரோபகாரர் மற்றும் கல்விப் புரவலர் ஆவார்.

19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நகரம் இன்னும் செழித்தோங்கியது; 1811 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இது பட்டு, உள்ளாடை, ஆடைகள் மற்றும் அழகான தந்த வேலைகளுக்கு பிரபலமானது என்று விவரிக்கப்பட்டது. இருப்பினும், இதன் ஆரோக்கியமான காலநிலை படிப்படியாக மோசமடைந்தது. அநேகமாக உள்ளூர் மலேரியா காரணமாக, அதைச் சுற்றியுள்ள சாகுபடி நிலத்தின் பரப்பளவு வெகுவாக சுருங்கியது. காடுகள் அதன் இடத்தைப் பிடித்தது, 1813 ஆம் ஆண்டில் ஹூக்லியின் போக்கில் ஏற்பட்ட திடீர் மாற்றத்தால் இதன் அழிவு முடிந்தது. பழைய ஊரிலிருந்து 3 மைல் தொலைவில் ஒரு புதிய நதியின் பாதை உருவானது. 1829 ஆம் ஆண்டில், மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மக்கள் தொகை 3,538 ஆக பதிவாகியுள்ளது. [7] இதன் அற்புதமான கட்டிடங்களில், கோசிம்பசார் மகாராஜாவின் அரண்மனை மட்டும் மீதம் இருந்தது. மீதமுள்ளவை இடிபாடுகளாக உள்ளன. வாரன் ஹேஸ்டிங்ஸின் முதல் மனைவி கோசிம்பசாரில் அடக்கம் செய்யப்பட்டார். அங்கு அவரது கல்வெட்டுடன் கல்லறை 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பம் வரை இருந்தது. [5] 1901 ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 1,262 பேர் மட்டுமே.

போக்குவரத்து[தொகு]

கிழக்கத்திய தொடருந்து மண்டலத்தின் சீல்தா -லால்கோலா பாதையில் அமைந்துள்ள கோசிம்பசாரின் இரயில் இணைப்பு கோசிம்பசார் இரயில் நிலையம் ஆகும்.

குறிப்புகள்[தொகு]

  1. "Cossimbazar" in தி இம்பீரியல் கெசட்டியர் ஆப் இந்தியா, Oxford, Clarendon Press, 1908-1931 [v. 1, 1909]
  2. MSN 2016.
  3. Census Commission of India 2001.
  4. "Kasim Bazar Population Census 2011" Census 2011, Census Organization of India. Accessed 14 November 2017. www.census2011.co.in/data/town/315444-kasim-bazar-west-bengal.html
  5. 5.0 5.1 Chisholm 1911, ப. 218.
  6. "Cossimbazar" in Imperial Gazetteer of India, Oxford, Clarendon Press, 1908-1931 [v. 1, 1909]
  7. "Cossimbazar" in Imperial Gazetteer of India, Oxford, Clarendon Press, 1908-1931 [v. 1, 1909]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோசிம்பசார்&oldid=3579467" இலிருந்து மீள்விக்கப்பட்டது