கோங்கிடி சுனிதா
கோங்கிடி சுனிதா | |
---|---|
சட்டமன்ற உறுப்பினர் மற்றும் கொறடா தெலங்காணா சட்டப் பேரவை | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2 சூன் 2014 | |
தொகுதி | அலைர் சட்டமன்றத் தொகுதி, தெலங்காணா |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 16 ஆகத்து 1969 ஐதராபாத்து, ஆந்திரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | பாரத் இராட்டிர சமிதி |
துணைவர் | மகேந்திர ரெட்டி |
முன்னாள் மாணவர் | உசுமானியா பல்கலைக்கழகம் |
கோங்கிடி சுனிதா மகேந்திர ரெட்டி (Gongidi Sunitha Mahender Reddy) (பிறப்பு 16 ஆகஸ்ட் 1969) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தின் அலைர் தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தும் தெலங்காணா சட்டப் பேரவை உறுப்பினராகவும், அரசு கொறடாவாகவும் உள்ளார். [1] [2] இவர் பாரத் இராட்டிர சமிதி (முன்பு தெலுங்கானா இராட்டிர சமிதி) கட்சியை சேர்ந்தவர்.
ஆரம்ப கால வாழ்க்கை
[தொகு]கரிங்குலா சுனிதா ராணி 1969 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16 ஆம் தேதி ஐதராபாத்தில் சரளா மற்றும் நரசிம்ம ரெட்டிக்கு கீழ் நடுத்தர குடும்பத்தில் பிறந்தார். [3] இவர் தனது பள்ளிப்படிப்பை சிக்கந்தராபாத் வெஸ்லி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பின்னர், உசுமானியா பல்கலைக்கழகத்தில் வணிகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார்.
தொழில்
[தொகு]சுனிதா ரெட்டி, தனது பட்டப்படிப்புக் காலத்தில் குடும்பத்தை நடத்துவதற்காக தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். திருமணத்திற்குப் பிறகும் இவர் அரசியல் பிரவேசம் வரை தனது பணியில் இருந்தார்.
அரசியல் வாழ்க்கை
[தொகு]இவர் 2001 ஆம் ஆண்டு 2001 தெலுங்கு இராட்டிர சமிதி கட்சியில் இணைந்து அரசியலில் நுழைந்தார். 2001 முதல் 2006 வரை யாதகிரிகுட்டா மண்டல பரிசத் உறுப்பினராகவும் பணியாற்றினார். 2002-ஆம் ஆண்டில் தெலுங்காணா இராட்டிர சமிதி கட்சியின் மாநில பொதுச் செயலாளராக இருந்தார். 2006 - 2011ல் வாங்கப்பள்ளியில் இருந்து கிராமத் தலைவர் பதவியை வென்றார். இவர் 2009-ஆம் ஆண்டு தெலுங்காணா இராட்டிர சமிதி ஆட்சி மன்றக் குழுவில் உறுப்பினராக உள்ளார். [4]
இவர் 2014 சட்டமன்றத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசின் புத்திதா பிக்சுமாயா கௌடுவை விட 30,000 க்கும் அதிகமான வாக்குகள் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றார். [5] 2018 தெலங்காணா சட்டப் பேரவைத் தேர்தலில், இவர் 33086 வாக்குகள் பெரும்பான்மையுடன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பின்தங்கிய பெண்களின் வேலை வாய்ப்புக்காக வேலை செய்யும் “ஹெல்ப்” என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்திலும் இவர் பணியாற்றினார்.
தேர்தல் புள்ளிவிவரங்கள்
[தொகு]ஆண்டு | தேர்தல் | தொகுதி | கட்சி | எதிர்த்துப் போட்டியிட்ட வேட்பாளர் | பெரும்பான்மை | முடிவு | மேற்கோள் |
---|---|---|---|---|---|---|---|
2014 | 2014 ஆந்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் | அலைர் சட்டமன்றத் தொகுதி | பாரத் இராட்டிர சமிதி | புத்திதா பிக்சுமாயா கௌடு (இதேகா) | 31148 | வெற்றி | |
201 | 2014 ஆந்திரப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் | அலைர் சட்டமன்றத் தொகுதி | பாரத் இராட்டிர சமிதி | புத்திதா பிக்சுமாயா கௌடு (இதேகா) | 33086 | வெற்றி |
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]சுனிதா 2001-ஆம் ஆண்டில் தெலுங்கு இராட்டிர சமிதி கட்சியைச் சேர்ந்த கொங்கிடி மகேந்தர் ரெட்டியை மணந்தார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Gongidi Sunitha prays for timely rains".
- ↑ "DC discusses if women in state Cabinet can ensure social justice". http://www.deccanchronicle.com/141221/nation-current-affairs/article/dc-discusses-if-women-state-cabinet-can-ensure-social-justice. பார்த்த நாள்: 14 May 2016.
- ↑ "Member's Profile - SMT. GONGIDI SUNITHA". Retrieved 2021-09-10.
- ↑ "Politburo | Telangana Rashtra Samithi". Archived from the original on 2019-04-01. Retrieved 2023-03-03.
- ↑ TRS releases list of ‘69’ candidates for Assembly polls - The Hindu