உள்ளடக்கத்துக்குச் செல்

கோங்கடி திரிசா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோங்கடி த்ரிசா
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கோங்கடி த்ரிசா
பிறப்பு15 திசம்பர் 2005 (2005-12-15) (அகவை 19)
பத்ராச்சலம், தெலங்காணா, இந்தியா
மட்டையாட்ட நடைவலது கை பேட்டிங் மற்றும் வலது கை லெக் பிரேக் பந்துகளை வீசு
பந்துவீச்சு நடைவலது கை லெக் பிரேக் பந்து வீச்சாளர்
பங்குபன்முக வீரர்
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
{{{1}}}ஹைதராபாத் பெண்கள் துடுப்பாட்ட அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பட்டியல் அ துடுப்பாட்டம் பெண்கள் இருபது20
ஆட்டங்கள் 20 21
ஓட்டங்கள் 370 335
மட்டையாட்ட சராசரி 20.55 22.33
100கள்/50கள் 0/2 0/2
அதியுயர் ஓட்டம் 69 56*
வீசிய பந்துகள் 1,094 406
வீழ்த்தல்கள் 17 16
பந்துவீச்சு சராசரி 25.82 21.81
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 5/17 3/10
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
4/– 3/–
பதக்கத் தகவல்கள்
மூலம்: ESPNcricinfo, 31 சனவரி 2023

கோங்கடி த்ரிசா (Gongadi Trisha) இவர் இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் அமைந்துள்ள பத்ராசலத்தில் 2005 ஆம் ஆண்டு, டிசம்பர் மாதம் 15 ஆம் தேதி, பிறந்தார். த்ரிசா ஓர் இந்திய கிரிக்கெட் வீரர் ஆவார். இவர் பன்முக வீரர் ஆவார், மேலும் வலது கை பேட்டிங் மற்றும் வலது கை லெக் பிரேக் பந்துகளை வீசுகிறார். 19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக் கோப்பையின் தொடக்க மற்றும் இரண்டாவது போட்டிகளை வென்ற இந்திய அணிகளில் அவர் ஒரு அங்கமாக இருந்தார்.[1][2]

2025 ஆம் ஆண்டில், பெண்கள் 19 வயதுக்குட்பட்ட டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்து திரிஷா வரலாறு படைத்தார், மேலும் பெண்கள் 19 வயதுக்குட்பட்ட டி20 உலகக் கோப்பை வரலாற்றில் முதல் சதம் அடித்தவர் என்ற பெருமையையும் பெற்றார்.[3][4]

ஆரம்பகால வாழ்க்கை

[தொகு]

த்ரிசா தெலுங்கானாவின் பத்ராசலத்தில் பிறந்த இவர்[5]ஒரு தனியார் நிறுவனத்தில் உடற்பயிற்சி பயிற்சியாளராகப் பணிபுரிந்த இவரது தந்தை, த்ரிசாவின் திறமையைக் கண்டறிந்து, தொடர்ந்து கிரிக்கெட் விளையாட ஊக்குவித்தார், மேலும் தனது வேலையை விட்டுவிட்டு, தனது மகளுக்கு கிரிக்கெட் பயிற்சி அளிக்க பத்ராசலத்திலிருந்து செகந்திராபாத்திற்கு குடிபெயர்ந்தார். ஏழு வயதில், த்ரிஷா செயிண்ட் ஜான்ஸ் கிரிக்கெட் அகாடமியில் சேர்க்கப்பட்டார்.[6]

தொழில்

[தொகு]

த்ரிசா ஹைதராபாத் மற்றும் தென் மண்டல அணிகளுக்காக விளையாடிய பிறகு, 2017–2018 சீனியர் பெண்கள் டி20 லீக்கில் ஹைதராபாத் அணிக்காக வ்ளையாட அறிமுகமானார்.[7] ஆந்திரப் பிரதேசத்தின் விஜயவாடாவில் நடைபெற்ற 2021–22 19 வயதுக்குட்பட்ட மகளிர் கிரிக்கெட் சேலஞ்சர்ஸ் மற்றும் 2021–2022 சீனியர் பெண்கள் சேலஞ்சர் டிராபியில் இந்தியா பி அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார்.[5]

2023 ஆண்டில், ஜனவரி மாதத்தில் த்ரிஷா 2023 ஐசிசி 19 வயதுக்குட்பட்ட பெண்கள் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்காக விளையாடினார்.[7][8]போட்டியின் இறுதிப் போட்டியில், இவர் 24 ரன்கள் எடுத்து அதிகபட்சமாக தனது அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றார்.[9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Player Profile: Gongadi Trisha". ESPNcricinfo. Retrieved 31 January 2023.
  2. "Player Profile: Gongadi Trisha". CricketArchive. Retrieved 31 January 2023.
  3. "India’s Gongadi Trisha hits historic first-ever century in U19 Women’s T20 World Cup" (in en). India Today. 28 January 2025 இம் மூலத்தில் இருந்து 28 January 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250128160103/https://www.indiatoday.in/sports/story/cricket-u19-womens-t20-world-cup-gongadi-trisha-century-india-vs-scotland-2671259-2025-01-28. 
  4. "ICC Women’s Under-19 Twenty20 World Cup: India under-19 women vs Scotland under-19 women; Trisha Gongadi scores first-ever century in women’s U-19 T20 World Cup history" (in en-IN). The Hindu. 28 January 2025 இம் மூலத்தில் இருந்து 28 January 2025 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20250128160724/https://www.thehindu.com/sport/cricket/icc-womens-under-19-t20-world-cup-india-vs-scotland/article69150186.ece. 
  5. 5.0 5.1 "Breaking the barriers of the 'gentleman's game'". The New Indian Express. Retrieved 2023-01-30.
  6. Chronicle, Deccan (2022-11-20). "Bhadradri student Trisha figures in India's Under-19 T-20 team". Deccan Chronicle (in ஆங்கிலம்). Retrieved 2023-01-30.
  7. D'Cunha, Zenia. "Indian cricket: Prodigiously talented, G Trisha continues to make the right moves". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2023-01-30.
  8. "Landmark day for women's U19 cricket: India head coach Dravid on T20 World Cup win". ANI News (in ஆங்கிலம்). Retrieved 2023-01-30.
  9. "India trumps England to win first Women's U19 T20 World Cup". Business Today (in ஆங்கிலம்). 2023-01-29. Retrieved 2023-01-30.
  10. "India clinch inaugural ICC Women's U19 T20 World Cup with crushing victory over England. Cricket News - Times of India". The Times of India (in ஆங்கிலம்). Jan 29, 2023. Retrieved 2023-01-30.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோங்கடி_திரிசா&oldid=4257633" இலிருந்து மீள்விக்கப்பட்டது