உள்ளடக்கத்துக்குச் செல்

கோக்ரேன் கூட்டமைப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோக்ரேன்
Cochrane (organisation)
உருவாக்கம்1993 (கோக்ரேன் கூட்டமைப்பாக)
வகைஐக்கிய இராச்சியத்தில் தொண்டு நிறுவனம்
நோக்கம்சுகாதாரப் பராமரிப்பு தரவுகள் குறித்த சுயாதீன ஆராய்ச்சி
தலைமையகம்இலண்டன், இங்கிலாந்து
சேவை பகுதி
உலகளாவிய
முக்கிய நபர்கள்
சூசன் பிலிப்ஸ் (தலைவர்)
தன்னார்வலர்கள்
1,86,769-க்கு மேல் (2025)
வலைத்தளம்www.cochrane.org
முன்னாள் பெயர்
கோக்ரேன் கூட்டமைப்பு

கோக்ரேன் கூட்டமைப்பானது (Cochrane (organisation)) ஒரு பன்னாட்டுப் பிரித்தானியத் தொண்டு நிறுவனம் ஆகும்.[1] சுகாதாரத் தொழிலாளர்கள், நோயாளிகள, கொள்கை வகுப்பாளர்களை உள்ளடக்கிய சுகாதாரத் தலையீடுகள் குறித்த சான்று-அடிப்படையிலான தேர்வுகளை எளிதாக்க மருத்துவ ஆராய்ச்சி கண்டுபிடிப்புகளை ஒருங்கிணைக்க இது உருவாக்கப்பட்டது.[2][3]

இதன் கீழ் உலகெங்கும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களில் அமைந்துள்ள 53 மதிப்பாய்வுக் குழுக்கள் அடங்கியுள்ளன.[4] கோக்ரேனில் உலகெங்கும் இருந்து 37,000-க்கும் மேற்பட்ட தன்னார்வ நிபுணர்கள் உள்ளனர்.[5]

நடவடிக்கைகள்

[தொகு]

இந்த அமைப்பு சுகாதாரத் தலையீடுகள் மற்றும் நோயறிதல் சோதனைகள் குறித்த முறையான மதிப்பாய்வுகளை நடத்தி கோக்ரேன் நூலகத்தில் அவற்றை வெளியிடுகிறது.[2]

கோக்ரேன் மதிப்பாய்வுகள் பொதுவாக சமவாய்ப்புக் கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் மீது கவனம் செலுத்துகின்றன. இருப்பினும், சில மதிப்பாய்வுகள்குறிப்பாக பொது சுகாதாரம் மற்றும் தொழில் சார்ந்த சுகாதாரம் போன்ற துறைகளில் பிற ஆய்வு வடிவமைப்புகளையும் உள்ளடக்குகின்றன.[6][7]

நிர்வாகம்

[தொகு]

கோக்ரேன் கூட்டமைப்பு ஐக்கிய இராச்சியத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு தொண்டு நிறுவனம் ஆகும்.[8] நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களே அமைப்பின் அறங்காவலர்களாக செயல்படுகிறார்கள்; இவர்கள் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.

டேவிட் சாகெட் இந்த அமைப்பின் முதலாவது தலைவராக இருந்தார்.[9] தற்போது இப்பதவியை சூசன் பிலிப்ஸ் வகிக்கிறார்.[10]

வரலாறு

[தொகு]

கோக்ரேன் முன்னர் கோக்ரேன் கூட்டமைப்பு என்று பரவலாக அறியப்பட்டது. 1993ஆம் ஆண்டில் இயன் சால்மர்ஸ் தலைமையில் நிறுவப்பட்டது.[11][12]

இது சுகாதாரத் துறையில் தொடர்புடைய அனைத்து சமவாய்ப்பு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகளின் புதுப்பிக்கப்பட்ட, முறையான மதிப்பாய்வுகளுக்கான ஆர்ச்சி கோக்ரேனின் அழைப்புக்கு பதிலளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது.[13][14]

கோக்ரேன் பொருளியல் முறைகள் குழு

[தொகு]

1998ஆம் ஆண்டில், சுகாதார பொருளியல், சான்று-அடிப்படை மருத்துவம், மற்றும் முறையான மதிப்பாய்வுகள் அடிப்படையில் முடிவுகளை எடுக்க எளிதாக கோக்ரேன் பொருளியல் முறைகள் குழு நிறுவப்பட்டது.

கேம்பெல் கூட்டாண்மை

[தொகு]

2004ஆம் ஆண்டில், கேம்பெல் கூட்டமைப்பு சி.இ.எம்.ஜி-உடன் இணைந்து கேம்பெல் & கோக்ரேன் பொருளியல் முறைகள் குழு உருவாக்கப்பட்டது.[15]

2018 சர்ச்சை கோட்சே வெளியேற்றம்

[தொகு]

2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆண்டு கூட்டத்தின் போது, கோக்ரேன் வாரியம், அதன் வாரிய உறுப்பினரும் கோக்ரேனின் வடநாட்டு மையத்தின் இயக்குநருமான பீட்டர் சி. கோட்சே என்பவரை அமைப்பிலிருந்து வெளியேற்றியது.[16]

பி.எம்.ஜே சான்று-அடிப்படை மருத்துவம் இதழில் கோட்சே இணை-எழுதிய கட்டுரையில் ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தடுப்பூசி குறித்த கோக்ரேனின் 2018 மே மாத மதிப்பாய்வில் சார்பு இருந்ததாக குற்றம் சாட்டியிருந்தார். இதைத் தொடர்ந்து அமைப்புக்கு "ஏராளமான புகார்கள்" கிடைத்ததாக அமைப்பு நேச்சர் இதழிடம் தெரிவித்தது.

கோட்சேவின் வெளியேற்றத்தால் நான்கு வாரிய உறுப்பினர்கள் எதிர்ப்பை தெரிவிக்கும் விதமாக அவர்களது பதவியை ராஜினாமா செய்தனர்.[17]

கோட்சே கடிதம் மூலம் இந்த நிகழ்வை கூட்டமைப்புக்கு அறிவித்தார். கோக்ரேனில் "வளர்ந்து வரும் மேலிருந்து-கீழ் சர்வாதிகார பண்பாடு மற்றும் அதிகரித்துவரும் வணிக மாதிரி" இடம்பிடித்திருப்பதாகவும், இது "அமைப்பின் அறிவியல், தார்மீக, மற்றும் சமூக இலக்குகளுக்கு அச்சுறுத்தலாக" இருப்பதாகவும் எழுதியிருந்தார்.

சின்னம்

[தொகு]

கோக்ரேனின் சின்னம், பிரசவத்திற்கு முந்தைய புரணித்திரலனையம் (கார்டிகோஸ்டீராய்டுகள்) விளைவுகள் குறித்த சமவாய்ப்பு சோதனைகளின் ஒரு முறையான மதிப்பாய்விலிருந்து எடுக்கப்பட்ட காடு போன்ற வரைபடம் ஒன்றை உள்ளடக்கியுள்ளது.[18]

தரம் & விமர்சனம்

[தொகு]

தரம்

[தொகு]

கனேடிய மருத்துவச் சங்க இதழில் 2004இல் வெளியான ஒரு ஆசிரியர் கட்டுரை, கோக்ரேன் மதிப்பாய்வுகள் மற்ற மதிப்பாய்வுகளை விட புதுப்பிக்கப்பட்டவை மற்றும் தரமானவை என்று குறிப்பிட்டது.[19]

மலட்டுத்தன்மை, உடலியக்க சிகிச்சை, தளர்த்துப் பல் மருத்துவம் போன்ற துறைகளில் கோக்ரேன் மற்றும் கோக்ரேன்-அல்லாத மதிப்பாய்வுகளின் தரத்தை ஒப்பிட்டு நடத்திய ஆய்வுகள், கோக்ரேன் மதிப்பாய்வுகள் மேலான முறைமைச் சார்ந்த திடத்தன்மையை கொண்டிருப்பதாக முடிவெடுத்தன.[20]

விமர்சனம்

[தொகு]

கோக்ரேனின் ஆய்வுகள் மீது எழுப்பப்பட்ட முக்கிய விமர்சனங்கள்:[21]

  • வெளியிடப்படாத ஆய்வுகளை போதுமான அளவில் சேர்க்கத் தவறியது
  • முடிவு புள்ளிக்கு முன்-குறிப்பிடப்பட்ட விதிகளை பின்பற்றத் தவறியது
  • மதிப்பாய்வுகள் போதுமான அளவில் புதுப்பிக்கப்படாதிருத்தல்[22]

உலக சுகாதார அமைப்புடன் தொடர்பு

[தொகு]

கோக்ரேன் உலக சுகாதார அமைப்புடன் அதிகாரப்பூர்வ உறவை பராமரிக்கிறது.[23] உலக சுகாதார மாநாடு உட்பட அவற்றின் கூட்டங்களுக்கு வாக்களிக்காத பிரதிநிதிகளை நியமிக்கவும், அதன் தீர்மானங்கள் மீது அறிக்கை வெளியிடவும் கோக்ரேனுக்கு உரிமை உள்ளது.

விக்கிப்பீடியா கூட்டாண்மை

[தொகு]

2014ஆம் ஆண்டில், கோக்ரேன்-விக்கிப்பீடியா கூட்டாண்மை முறையாக அறிமுகப்படுத்தப்பட்டது. இது அனைத்து விக்கிப்பீடியா மருத்துவ கட்டுரைகளிலும் தொடர்புடைய சான்றுகளை உள்ளடக்குவதற்கு ஆதரவளிக்கிறது.[24]

விக்கிப்பீடியாவும் கோக்ரேனும் இணைந்து கோக்ரேன் ஆராய்ச்சியை விக்கிப்பீடியா கட்டுரைகளில் இணைப்பதை அதிகரிக்கவும், மருத்துவ தரவுகளை விளக்குவதற்கு விக்கிப்பீடியா தொகுப்பாளர்களுக்கு ஆதாரங்களை வழங்கவும் ஒத்துழைக்கின்றன.[25]

கோக்ரேன் மற்றும் ஜான் வைலி & சன்ஸ் (கொக்ரேன் மதிப்பாய்வுகளின் வெளியீட்டாளர்) 100 இலவச கோக்ரேன் கணக்குகளை விக்கிப்பீடியா மருத்துவ தொகுப்பாளர்களுக்கு வழங்குகின்றன. இதன் நிதி மதிப்பு ஆண்டுக்கு 30,000 முதல் 80,000 அமெரிக்க டாலர்கள் வரை மதிப்பிடப்பட்டுள்ளது.

நிதி ஆதாரங்கள்

[தொகு]

கோக்ரேன் கார்ப்பரேட் நலன்களிலிருந்து நிதி பெறுவதைத் தவிர்க்கிறது. அரசு அமைப்புகள், தேசம்-கடந்த அமைப்புகள், அரசுசாரா அமைப்புகள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், அறக்கட்டளைகளிலிருந்து மட்டுமே நிதி பெறுகிறது.[26]

முக்கிய அரசு நன்கொடையாளர்கள்:

கல்வி நன்கொடையாளர்கள்: மெக்மாஸ்டர் பல்கலைக்கழகம், ஆம்ஸ்டர்டாம் பல்கலைக்கழக மருத்துவ மையங்கள், கசான் கூட்டாட்சி பல்கலைக்கழகம், கோபன்ஹேகன் பல்கலைக்கழகம் போன்றவை.

சமூக ஈடுபாடு

[தொகு]

கோக்ரேன், முறையான மதிப்பாய்வுகளை உருவாக்குவதற்கு சமூக ஒழுங்கமைப்பு (community curation) மூலம் நோயாளிகள் மற்றும் பொதுமக்களை ஈடுபடுத்துகிறது. பணிகள் உள்ளடக்கியவை:[27]

  • சுகாதார சான்றுகளை வகைப்படுத்தி சுருக்கமாகக் காட்ட ஒத்துழைப்பு தன்னார்வ முயற்சி
  • தரவு பிரித்தெடுத்தல் மற்றும் சார்பு-அபாய மதிப்பீடு
  • மதிப்பாய்வுகளை பிற மொழிகளில் மொழிபெயர்த்தல்

மேற்கோள்கள்

[தொகு]
  1. "The Cochrane Collaboration". Charity Commission. Retrieved 2017-12-09.
  2. 1 2 "Public Health Guidelines". NIH Library. Retrieved 2017-11-20.
  3. Hill, G. B. (December 2000). "Archie Cochrane and his legacy. An internal challenge to physicians' autonomy?". Journal of Clinical Epidemiology 53 (12): 1189–1192. doi:10.1016/S0895-4356(00)00253-5. பப்மெட்:11146263. https://archive.org/details/sim_journal-of-clinical-epidemiology_2000-12_53_12/page/1189.
  4. "About us — Cochrane". www.cochrane.org. Retrieved 2015-09-14.
  5. Sepkowitz, Kent A. (2014-05-14). "Looking for the Final Word on Treatment". The New York Times. https://www.nytimes.com/2014/05/14/health/looking-for-the-final-word-on-treatment.html.
  6. Kongsted, Hans; Konnerup, Merete (2012). "Are more observational studies being included in Cochrane reviews?". BMC Research Notes 5 (1): 570. doi:10.1186/1756-0500-5-570. பப்மெட்:23069208.
  7. Ruotsalainen, Jani; Sauni, Riitta; Verbeek, Jos (2017). "Cochrane Work — championing facts since 2003". Occupational Medicine 67 (7): 504–506. doi:10.1093/occmed/kqx073. பப்மெட்:29048596.
  8. "The Cochrane Collaboration — Charity 1045921". Charity Commission for England and Wales. Retrieved 2025-06-21.
  9. "In Memoriam: Dr David Sackett, Founding Chair of the Cochrane Collaboration (1934-2015)". Cochrane Iberoamérica. Retrieved 2025-06-21.
  10. "Governing Board — Cochrane". Cochrane Collaboration. Retrieved 2025-06-21.
  11. Ault, Alicia (2003-06-27). "Clinical research. Climbing a medical Everest". Science 300 (5628): 2024–2025. doi:10.1126/science.300.5628.2024. பப்மெட்:12829761. https://archive.org/details/sim_science_2003-06-27_300_5628/page/2024.
  12. Thomas, Katie (2013-06-29). "The Cochrane Collaboration". The New York Times. https://www.nytimes.com/2013/06/30/business/the-cochrane-collaboration.html.
  13. Chalmers, I.; Dickersin, K.; Chalmers, T. C. (1992). "Getting to grips with Archie Cochrane's agenda". BMJ 305 (6857): 786–788. doi:10.1136/bmj.305.6857.786. பப்மெட்:1422354.
  14. Winkelstein, W. Jr. (September 2009). "The Remarkable Archie: Origins of the Cochrane Collaboration". Epidemiology 20 (5): 779. doi:10.1097/EDE.0b013e3181aff391. பப்மெட்:19680039.
  15. Shemilt, I. (2006). "Economics methods in Cochrane systematic reviews of health promotion and public health related interventions". BMC Medical Research Methodology 6: 55. doi:10.1186/1471-2288-6-55. பப்மெட்:17107612.
  16. Jørgensen, Lars; Gøtzsche, Peter C.; Jefferson, Tom (2018). "The Cochrane HPV vaccine review was incomplete and ignored important evidence of bias". BMJ Evidence-Based Medicine 23 (5): 165–168. doi:10.1136/bmjebm-2018-111012. பப்மெட்:30054374.
  17. Vesper, Inga (2018-09-17). "Mass resignation guts board of prestigious Cochrane Collaboration". Nature. doi:10.1038/d41586-018-06727-0.
  18. "Our name and logo". Cochrane. Retrieved 2025-11-07.
  19. Grimshaw, J. (2004). "So what has the Cochrane Collaboration ever done for us? A report card on the first 10 years". Canadian Medical Association Journal 171 (7): 747–749. doi:10.1503/cmaj.1041255. பப்மெட்:15451837.
  20. Windsor, B. (2012). "Methodological quality of systematic reviews in subfertility". Human Reproduction 27 (12): 3460–3466. doi:10.1093/humrep/des342. பப்மெட்:23034152.
  21. Green-Hennessy, S. (January 2013). "Cochrane systematic reviews for the mental health field: is the gold standard tarnished?". Psychiatric Services 64 (1): 65–70. doi:10.1176/appi.ps.001682012. பப்மெட்:23117176. https://archive.org/details/sim_psychiatric-services_2013-01_64_1/page/65.
  22. Mowatt, G. (2002-06-05). "Prevalence of honorary and ghost authorship in Cochrane reviews". JAMA 287 (21): 2769–2771. doi:10.1001/jama.287.21.2769. பப்மெட்:12038907. https://archive.org/details/sim_jama_2002-06-05_287_21/page/n32.
  23. "Non-State actors in official relations with WHO". World Health Organization. Retrieved 2017-07-26.
  24. "The Cochrane-Wikipedia partnership in 2016". Cochrane. Retrieved 2019-02-24.
  25. Mathew, Manu; Joseph, Anna; Heilman, James; Tharyan, Prathap (2013). "Cochrane and Wikipedia: the collaborative potential for a quantum leap in the dissemination and uptake of trusted evidence". Cochrane Database of Systematic Reviews 10: ED000069. doi:10.1002/14651858.ED000069. பப்மெட்:24475488.
  26. "Our funders and partners". Cochrane. Archived from the original on 2022-06-11. Retrieved 2022-06-11.
  27. "Cochrane crowd". crowd.cochrane.org. Retrieved 2019-02-14.

வெளி இணைப்புகள்

[தொகு]

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோக்ரேன்_கூட்டமைப்பு&oldid=4608039" இலிருந்து மீள்விக்கப்பட்டது