கோகுலத்தில் சீதை (தொலைக்காட்சித் தொடர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கோகுலத்தில் சீதை
கோகுலத்தில் சீதை (தொலைக்காட்சித் தொடர்).jpg
வகை
இயக்கம்
 • எ. என். ஜாகிர் உசன் (2019-2020)
 • ஜி. மாணிகண்ட குமார் (2020-2022)
நடிப்பு
 • ஆஷா கவுடா
 • நந்தா
இசைஜே.வி.
நாடுஇந்தியா
மொழிதமிழ்
பருவங்கள்1
அத்தியாயங்கள்705
தயாரிப்பு
தயாரிப்பாளர்கள்லோக வாணி
ஆர்.சித்ரா
ஓட்டம்தோராயமாக 20-22 நிமிடங்கள் (ஒரு நாள் நிகழ்ச்சி)
தயாரிப்பு நிறுவனங்கள்இன் ஹவுஸ் தயாரிப்பு
ஒளிபரப்பு
அலைவரிசைஜீ தமிழ்
ஒளிபரப்பான காலம்4 நவம்பர் 2019 (2019-11-04) –
14 மே 2022 (2022-05-14)
Chronology
தொடர்புடைய தொடர்கள்மாட்டே மன்றமு

கோகுலத்தில் சீதை என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் 4 நவம்பர் 2019 முதல் 14 மே 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காதல் மற்றும் குடும்ப பின்னணியை கொண்ட தொலைக்காட்சித் நாடகத் தொடர் ஆகும்.[1] இந்த தொடரில் நந்தா மற்றும் ஆஷா கவுடா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இது ஜீ தெலுங்கு தொலைக்காட்சி தொடரான 'மாட்டே மன்றமு' என்ற தெலுங்கு மொழி தொடரின் கதையை தழுவி எடுக்கப்பட்டது..[2] இத்தொடர் 14 மே 2022 அன்று 705 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.

கதைச்சுருக்கம்[தொகு]

இந்த தொடரின் கதை வசுந்தரா என்ற நடுத்தர குடும்பத்தை சேர்ந்த பெண் பாரமப்பரியத்தை காப்பாற்றுபவராகவும் குடும்பத்தின் மீது பாசமும் திருமணத்தின் மீது நம்பிக்கையும் உடையவளும் ஆவாள். பணக்கார வீட்டு பையனா அர்ஜுன் எதையும் நம்பாதவன் விளையாட்டு தனமும் விரும்பியதை அடையும் குணம் கொண்டவன். இரு வெவ்வேறு குணம் கொண்டவர்கள் எப்படி திருமண பந்தத்தில் இணையப்போகின்றார்கள் என்பது தான் கதை.

நடிகர்கள்[தொகு]

முதன்மை கதாபாத்திரம்[தொகு]

 • ஆஷா கவுடா - வசுந்தரா "வசு"
 • "டான்ஸ் மாஸ்டர்" நந்தா - அர்ஜுன்

துணை கதாபாத்திரம்[தொகு]

 • நளினி - காந்திமதி, பேராசை பாட்டி (வசு மற்றும் லக்கியின் அத்தை / பாட்டி)
 • காயத்திரி - சுசித்ரா (அர்ஜுன் மற்றும் ஆனந்தின் தாய்)
 • ஷங்கரேஷ்குமார் - ஆனந்த் (அர்ஜுனின் தம்பி)
 • லஸ்யா நாகராஜ் (2019-2020) → ஃபவ்சில் ஹிதாயா (2020-தற்போது) - இலக்கியா "லக்கி" (மாற்றான் தந்தை சகோதரி)
 • அஞ்சு கிருதி கவுடா (2019-2020) → மதுமிதா இளையராஜா (2020-தற்போது) - நக்‌ஷத்ரா (இந்திராவின் மகள் மற்றும் அர்ஜுனின் உறவினர்)
 • தாட்சாயினி - இந்திரா (சுசித்ராவின் இணை சகோதரி மற்றும் நக்ஷத்திரரின் தாயார்)
 • பேபி ஜாய்ஸ் - துளசி (வசு மற்றும் இலக்கியாவின் தாய்)
 • வசந்த் கோபிநாத் - உத்தமன் (அர்ஜுனின் உதவியாளர்)
 • விஷ்ணுகாந்த் - இளமாரன் (வசுவின் முன்னாள் வருங்கால கணவன்)
 • வைஷாலி தனிகா - மீனாட்சி (இளமாரனின் சகோதரி மற்றும் அர்ஜுனின் முன்னாள் வருங்கால மனைவி)[3]
 • வினிதா ஜெகன்நாதன் - இனியா (அர்ஜுனின் போலி இதய நண்பர் மற்றும் முன்னாள் வருங்கால மனைவி)
 • பரத் - ஜோதிமணி (காந்திமதியின் நண்பர்)
 • கௌசல்யா செந்தாமரை - சௌந்தர்யா (மீனாட்சி மற்றும் இளமாரனின் பாட்டி) (2020)
 • ஜீவா ரவி - ஜெய்கிருஷ்ணா ராஜசேகர் "ஜே.கே.ஆர்" (அர்ஜுன் மற்றும் ஆனந்தின் தந்தை -(தொடரில் இறந்துவிட்டார்) )
 • விஜய் கிருஷ்னராஜ் - கிருஷ்ணமூர்த்தி (வசுவின் தாத்தா -(தொடரில் இறந்துவிட்டார்) )
 • வீணா வெங்கடேஷ் - பப்பிமா (அர்ஜுன் மற்றும் ஆனந்தின் அத்தை) (2019-2020)

சிறப்புத் தோற்றம்[தொகு]

நடிகர்களின் தேர்வு[தொகு]

இந்த தொடரில் அர்ஜுன் என்ற கதாபாத்திரத்தில் நடன இயக்குனர் நந்தா முதல் முதலாக தொலைக்காட்சி தொடரில் நடிக்க,[4] இவருக்கு ஜோடியாக புதுமுக நடிகை ஆஷா கவுடா என்பவர் வசுந்தரா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கின்றார்கள். மேலும் திரைப்பட நடிகை நளினி, காந்திமதி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

நேர அட்டவணை[தொகு]

இந்த தொடர் 4 நவம்பர் 2019 முதல் 14 மார்ச் 2021 ஆம் ஆண்டு வரை வரை தினமும் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. 15 மார்ச் 2021 முதல் தினமும் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாகிறது.

ஒளிபரப்பான தேதி நாட்கள் நேரம் அத்தியாங்கள்
15 மார்ச் 2021 - ஒளிபரப்பில்
தினமும்
19:00 356-
4 நவம்பர் 2019 - 14 மார்ச் 2021
தினமும்
20:00 1-355

மதிப்பீடுகள்[தொகு]

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

ஆண்டு மிகக் குறைந்த மதிப்பீடுகள் மிக உயர்ந்த மதிப்பீடுகள்
2019 4.6% 5.8%
2020 3.5% 4.8%
2.7% 4.3%
2021 2.3% 3.8%
2.1% 3.4%

சர்வதேச ஒளிபரப்பு[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Zee Tamil announces new fiction show - Gokulathil Seethai". www.exchange4media.com.
 2. "Gokulathil Seethai Serial: ராசாவே.. ஆஹா.. அந்த காயத்ரியா இது.. மறக்க முடியாத கண்ணாச்சே அது!". tamil.oneindia.com.
 3. "Actress Vaishali Thaniga joins the cast of 'Gokulathil Seethai'; shares her excitement with fans" (ஆங்கிலம்). Timesofindia.indiatimes.com.
 4. "மீண்டும் நடிகனானது ஆச்சரியம்தான்! - 'கோகுலத்தில் சீதை' நந்தா நேர்காணல்". www.hindutamil.in.

வெளி இணைப்புகள்[தொகு]

ஜீ தமிழ் : திங்கள்-சனி இரவு 7 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கோகுலத்தில் சீதை அடுத்த நிகழ்ச்சி
சூர்யவம்சம் அன்பே சிவம்
ஜீ தமிழ் : திங்கள் - சனி இரவு 8 மணி தொடர்கள்
முன்னைய நிகழ்ச்சி கோகுலத்தில் சீதை அடுத்த நிகழ்ச்சி
நாச்சியார்புரம் யாரடி நீ மோகினி