கோகிமா தாவரவியல் பூங்கா
தோற்றம்
| கோகிமா தாவரவியல் பூங்கா Kohima Botanical Garden | |
|---|---|
![]() | |
| வகை | நகரப் பூங்கா |
| அமைவிடம் | அரதுரா மலை, புதிய அமைச்சர்களின் மலை வார்டு, கோகிமா, நாகாலாந்து, இந்தியா |
| ஆள்கூறு | 25°38′58″N 94°05′57″E / 25.649353°N 94.099215°E |
| நிலை | ஆண்டு முழுவதும் திறந்திருக்கும் |
கோகிமா தாவரவியல் பூங்கா (Kohima Botanical Garden) இந்தியாவின் நாகாலாந்து மாநிலத்தில் இருக்கும் கோகிமாவில் உள்ளது. கோகிமாவின் புதிய அமைச்சர்களின் மலை வார்டில் அமைந்துள்ளது. இந்த தாவரவியல் தோட்டம் நாகாலாந்து வனத்துறையால் பராமரிக்கப்படுகிறது. இங்கு மிகவும் அரிதான தாவர இனங்களைக் காணலாம். தாவரங்கள் மற்றும் விலங்கினங்களால் பூங்கா எப்போதும் பரபரப்பாக இருக்கும்.[1][2][3]
கோகிமா தாவரவியல் பூங்காவிற்குச் செல்ல செப்டம்பர் முதல் மார்ச் நடுப்பகுதி வரை சிறந்த நேரமாகும். திமாபூர் விமான நிலையத்திலிருந்து தாவரவியல் பூங்கா 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தோட்டத்தை பார்வையிடும் நேரம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Forestry Research - Nagaland Forest Department". forest.nagaland.gov.in. Retrieved 15 April 2022.
- ↑ "Kohima Botanical Garden". Trip Untold. Retrieved 15 April 2022.
- ↑ "Kohima Botanical Garden". Tour Travel World. Retrieved 15 April 2022.

