கோகா சுப்பா ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கோகா சுப்பா ராவ் (Koka Subba Rao) (15 ஜூலை 1902 - 6 மே 1976) இவர் இந்தியாவின் ஒன்பதாவது தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். ஆரம்பக் காலங்களில் வழக்கறிஞராக பணயாற்றிய இவர் பின்னர் (1966-1967). ஆந்திர மாநில உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார். [1] [2]

ஆரம்ப கால வாழ்க்கை[தொகு]

1902 ஜூலை 15 ஆம் தேதி தற்போதைய தெலங்காணா மாவட்டத்திலுள்ள கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள ராஜமுந்திரியில் வேலமா என்ற குடும்பத்தில் பிறந்தார். இவரது தந்தையும், ஒரு வழக்கறிஞராக இருந்துள்ளார். இவரது தந்தை தனது சிறு வயதிலேயே இறந்து விட்டார். ராவ் ராஜமுந்திரி அரசு கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றார். சென்னை, டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார். கல்லூரியில் படிக்கும் போது இவர் ஒரு நல்ல விளையாட்டு வீரராக திகழ்ந்துள்ளார்.   [ மேற்கோள் தேவை ]

தொழில் வாழ்க்கை[தொகு]

ஆந்திர கேசரி பிரகாசம் பந்துலுவின் கீழ் பணி புரிந்து வந்த இவரது மாமனார் பி.வெங்கடராமன் ராவ் நாயுடுவின் அலுவலகத்தில் வழக்கறிஞராக பணியில் சேர்ந்தார். பின்னர், இவர் மாவட்ட நீதிபதியாக தேர்வு செய்யப்பட்டு, குண்டூர் மாவட்டத்தின் பாபட்லாவில் சில மாதங்கள் பணியாற்றினார்.

இவரது மாமனார் வெங்கட ராமன் ராவ் மெட்ராஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக உயர்த்தப்பட்ட பின்னர், சுப்பாராவ் தனது மைத்துனர் பி. வி. ராஜமன்னாருடன் கூட்டு சேர்ந்தார். பின்னர் இவர் வழக்கறிஞர்களின் தலைவரகவும், மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாகவும் ஆனார்.

கலப்பு சென்னை மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் இவர்கள் இருவரும் சட்டப் பணிகளைக் மேற்கொண்டு வந்துள்ளனர். இவர் 1948 இல் நீதிமன்ற அமர்விற்கு உயர்த்தப்பட்டார்.

ஆந்திரா பிரிந்த பின்னர், 1954 இல் குண்டூரில் நிறுவப்படவுள்ள ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தின் தலைவராக மூத்த நீதிபதி கோவிந்த மேனனை அனுப்ப அபோதைய சென்னை மாகான ஆளுநர் ராஜாஜி விரும்பினார். ஆனால் உயர்நீதிமன்றம் அமைப்பதற்கு வசதியாக சுப்பாராவ் சிறப்பு அதிகாரியாக இருக்க வேண்டும் என்று பிரகாசம் வலியுறுத்தினார். எனவே தானாகவே இவர் தலைமை நீதிபதி ஆனார்.

1954 ஆம் ஆண்டில் திருப்பதியில் ஸ்ரீ வெங்கடேஸ்வர பல்கலைக்கழகம் நிறுவப்பட்டபோது, சுப்பாராவ் அதன் முதல் வேந்தரானார். பல்கலைக்கழக சட்டத்தில் திருத்தம் செய்யும் வரை வேந்தராக இருந்தார்.

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாகவும், ஆந்திர மாநில உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகவும் பணியாற்றிய பின்னர், இவர் 1958 ஜனவரி 31, அன்று உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இவர் 1966 ஜூன் 30, அன்று இந்தியாவின் தலைமை நீதிபதியாக மீண்டும் நியமிக்கப்பட்டார். இவரது மிகவும் பிரபலமான தீர்ப்பு கோலக்நாத் எதிர் பஞ்சாப் மாநிலம் என்பதாகும். அடிப்படை உரிமைகளை திருத்த முடியாது என்று அவர் தீர்ப்பளித்த வழக்காகும். [3]

எதிர்க்கட்சிகளின் ஒருமித்த வேட்பாளராக நான்காவது குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட சுப்பா ராவ் 1967 ஏப்ரல் 11, அன்று ஓய்வு பெற்றார். [4]

அரசியல் வாழ்க்கை[தொகு]

ஐக்கிய எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக 1967 ல் இந்திய குடியரசுத் தலைவர் வேட்பாளராக போட்டியிட்டார். இவர் தேர்தலில் சாகீர் உசேனிடம் தோல்வியடைந்தார்.

இறப்பு[தொகு]

இவர் 6 மே 1976 இல் இறந்தார்.

மரியாதைகள்[தொகு]

மேற்குறிப்புகள்[தொகு]

  1. Profile of the Honorable justice Koka Subba Rao at High Court of Andhra Pradesh.
  2. Koka Subba Rao: Strong-Willed Judge in The Great Indian Patriots
  3. Austin, Granville (1999). Working a Democratic Constitution – A History of the Indian Experience. New Delhi: Oxford University Press. pp. 201–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 019565610-5.
  4. Supreme Court of India: Biography of K. Subba Rao

குறிப்புகள்[தொகு]

  • Luminaries of 20th Century, Potti Sreeramulu Telugu University, Hyderabad, 2005.
  • Koka Subba Rao : Strong-Willed Judge in The Great Indian patriots, Volume 2, P. Rajeswar Rao, page. 178.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கோகா_சுப்பா_ராவ்&oldid=3285744" இலிருந்து மீள்விக்கப்பட்டது