கோகராஜு கங்கராஜு
கோகராஜு கங்கராஜு | |
---|---|
மக்களவை உறுப்பினர் | |
பதவியில் 16 மே 2014 – 23 மே 2019 | |
முன்னையவர் | கனுமூரி பாபி ராஜு |
பின்னவர் | கனுமுரு ரகு ராம கிருஷ்ண ராஜு |
தொகுதி | நரசாபுரம் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 14 சூன் 1948 கேசாவராம், மேற்கு கோதாவரி மாவட்டம், ஆந்திரப் பிரதேசம், இந்திய மேலாட்சி அரசு |
அரசியல் கட்சி | பாரதிய ஜனதா கட்சி |
துணைவர் | லைலாவதி |
பிள்ளைகள் | 2 மகன்கள், 1 மகள் |
வாழிடம் | விசயவாடா |
முன்னாள் கல்லூரி | ஆந்திரப் பல்கலைக்கழகம் |
As of May, 2014 |
கோகராஜு கங்கராஜு (Gokaraju Ganga Raju) ஓர் இந்திய அரசியல்வாதியும், ஆந்திரப் பிரதேசத்தின் நர்சாபுரம் மக்களவைத் தொகுதியிலிருந்து பதினாறாவது மக்களவைக்குத் தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர் ஆவார். 2014 இந்தியப் பொதுத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.[1]
இவர், லைலா குழும நிறுவனங்களின் நிறுவனரும் ஆவார். சமீபத்தில், இவர் இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் தென் மண்டலத்தின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2]
இவரது தந்தை, மறைந்த கோகராஜு ரங்க ராஜு, உண்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராவார். கங்கராஜு ஆந்திர துடுப்பாட்டச் சங்கத்தின் செயலாளராகவும், இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாட்டு வாரியத்தின் நிதிக் குழுவின் தலைவராகவும், வாரியம் நடத்தும் இந்தியன் பிரீமியர் லீக்கின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் உள்ளார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Constituencywise-All Candidates". Archived from the original on 17 May 2014. பார்க்கப்பட்ட நாள் 17 May 2014.
- ↑ "Gokaraju Ganga Raju-Profile - BJP AP Elections 2014". Archived from the original on 18 May 2014. பார்க்கப்பட்ட நாள் 18 May 2014.