கொழும்பு விவேகானந்தா கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விவேகானந்தா கல்லூரி
Vivekananda College, Colombo
அமைவிடம்
கொட்டாஞ்சேனை, கொழும்பு 13
இலங்கை
தகவல்
பழைய பெயர்கள்விவேகானந்தா மகா வித்தியாலயம்
வகைதேசியப் பாடசாலை
குறிக்கோள்கள்Be and Make
தொடக்கம்24 மார்ச் 1926
அதிபர்ஆர். இராமையா
பணிக்குழாம்99
தரங்கள்தரம் 1 - 13
பால்கலவன்
வயது5 to 19
மொத்த சேர்க்கை2,086
இணைப்புஇந்து

விவேகானந்தா கல்லூரி (Vivekananda College) இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள ஒரு அரசினர் தேசியப் பாடசாலை ஆகும். கொழும்பில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இந்துப் பாடசாலை ஆகும். இது 1926 மார்ச் 24 இல் ஆரம்பிக்கப்பட்டது.[1]

வரலாறு[தொகு]

சுவாமி விவேகானந்தர் 1897 ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகை தந்ததை நினைவு கூரும் முகமாகவும், கொழும்பு வாழ் இந்து மாணவர்களின் வசதிக்காகவும் 1926 ஆம் ஆண்டு மார்ச் 25 24 இல் கொழும்பு விவேகானந்த சபையினரால் கொட்டாஞ்சேனையில் இரண்டு ஆசிரியர்களுடனும், 25 மாணவர்களுடனும் ஆரம்பப் பாடசாலையாக ஆரம்பிக்கப்பட்டது. இதன் திறப்பு விழாவில் சுவாமி விபுலானந்தர், சுவாமி சச்சிதானந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர். முதலாவது அதிபராக கே. அருணாசலம் பொறுப்பேற்றார். முகாமையாளராக அருணாசலம் மகாதேவா பணியாற்றினார். 1962 ஆம் ஆண்டில் அரசு இப்பாடசாலையைப் பொறுப்பேற்றது.

1952 ஆம் ஆண்டில் இப்பாடசாலை க.பொ.த (சா.த) வகுப்புகளை ஆரம்பித்தது. 1963 இல் மகா வித்தியாலயமாகத் தரமுயர்த்தப்பட்டு க.பொ.த (உ.த) வகுப்பு வரை மாணவர்களைப் பயிற்றுவித்தது.[1] 1990 ஆம் ஆண்டில் பாடசாலை வளவினுள் சித்தி விநாயகர் கோயில் கட்டப்பட்டது. 2011 இல் இங்கு சுவாமி விவேகானந்தர், விபுலானந்தர், ஆறுமுக நாவலர் ஆகியோரது உருவச்சிலைகள் நிறுவப்பட்டன.

1996 ஆம் ஆண்டில் இது தேசியப் பாடசாலையாகத் தரமுயர்த்தப்பட்டது.[1]

பாடசாலை அதிபர்கள்[தொகு]

  • கே. அருணாசலம்
  • கே. வி. செல்வதுரை (1950-59)
  • வி. நடராசா (1959-65, 1970-73)
  • எஸ். மகேசன் (1973-83)
  • எஸ். மாணிக்கவாசகர் (1983-90)
  • எஸ். தில்லைநாதன் (1991-95)
  • டி. சந்தோசம் (1998-2005)
  • திருமதி வி. பரசுராமன் (2011-13)
  • ஆர். இராமையா (இன்று)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "Vivekananda College celebrates 90th anniversary". டெய்லி நியூசு. 26 மார்ச் 2016 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]