உள்ளடக்கத்துக்குச் செல்

கொழும்பு மாநகர சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொழும்பு மாநகர சபை
Colombo Municipal Council
Seal of the Colombo Municipal Council
வகை
வகை
பாரிய கொழும்பின் உள்ளூராட்சி சபை
அவைகள்ஓரவை முறைமை
ஆட்சிக்காலம்
4 ஆண்டுகள்
வரலாறு
தோற்றுவிப்பு1866; 159 ஆண்டுகளுக்கு முன்னர் (1866)
தலைமை
முதல்வர்
விராய் கெலி பல்தசார், தேமச
துணை முதல்வர்
கேமந்த குமார, தேமச
மாநகர ஆணையாளர்
ஜே. எம். பத்ரானி ஜெயவர்தன
கட்டமைப்பு
உறுப்பினர்கள்1 முதல்வர், 116 உறுப்பினர்கள்
அரசியல் குழுக்கள்
அரசு (61)

எதிர்க்கட்சி (56)

ஆட்சிக்காலம்
4 ஆண்டுகள்
தேர்தல்கள்
அண்மைய தேர்தல்
6 மே 2025
கூடும் இடம்
கொழும்பு மாநகரசபைக் கட்டடம்
நகர மண்டபம், கொழும்பு
வலைத்தளம்
www.colombo.mc.gov.lk

கொழும்பு மாநகர சபை (Colombo Municipal Council, CMC) இலங்கையின் பெரிய நகரமும், முக்கிய வணிக மையமுமான கொழும்பு மாநகரை நிர்வாகம் செய்துவரும் மாநகராட்சி சபை ஆகும். கொழும்பு பிரதேச செயலாளர் பிரிவு, திம்பிரிகஸ்யாய பிரதேச செயலாளர் பிரிவு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குள் அடங்கும் பகுதிகள் இந்த மாநகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிகளாகும். இது 47 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, மொழும்பு மாநகரசபைக்கு 66 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 51 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 117 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1][2] கொழும்பு உள்ளூராட்சி சபை 1865 இல் உருவாக்கப்பட்டது, முதல் தடவையாக 1866 இல் கூடியது. இது அதன் பெரும்பாலான அதிகாரங்களை 1947 ஆம் ஆண்டின் 29 ஆம் எண் நகராட்சி மன்ற ஆணையிலிருந்து பெறுகிறது.[3]

இது இலங்கையின் மிகப் பழமையானதும், மிகப்பெரிய உள்ளூர் அரசாங்க அதிகாரசபையுமாகும். இது 600,000 க்கும் மேற்பட்ட மக்கள்தொகையைக் கொண்டுள்ளது (2001 நிலவரப்படி). இது 12,000 இற்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாகும்.[4] 2011-12 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, கொழும்பு மாநகரசபையின் எல்லைக்குள் வாழும் மக்கள் தொகை 555,031 ஆகும்.[5]

அரசியல்

[தொகு]

50 ஆண்டுகளுக்கும் மேலாக, கொழும்பு நகரம் வலதுசாரி சார்புடைய ஐக்கிய தேசியக் கட்சியின் (ஐதேக) ஆதிக்கத்தில் இருந்தது, அதன் வணிக நட்புக் கொள்கைகள் கொழும்பு மக்களுடன் ஒத்துப்போயின. 1947 இல் கட்சி உருவாக்கப்பட்டதிலிருந்து, இரண்டு சிறிய விதிவிலக்குகளைத் தவிர, முதல்வர் பதவியில் பெரும்பான்மையாக ஐக்கிய தேசியக் கட்சி இருந்தது. 1954 இல், திரொட்சுகிய-சார்பான லங்கா சமசமாஜக் கட்சியிடம் நகராட்சித் தேர்தலில் ஐதேக தோல்வியடைந்தது, என். எம். பெரேரா கொழும்பு முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கொழும்பு மாநகர சபையைத் தவிர, ஒன்பது கிராம சபைகள் மற்றும் மூன்று நகர சபைகள் உட்படப் பல உள்ளாட்சித் தேர்தல்களில் லசசக வெற்றி பெற்றது.[6] 2006 இல், 2006 மாநகர சபைத் தேர்தலுக்கான ஐதேக வேட்புமனு பட்டியல் நிராகரிக்கப்பட்டது,[7] ஐதேக ஆதரித்த ஒரு சுயேச்சைக் குழு தேர்தலில் வெற்றி பெற்றது.[8] உவைஸ் முகமது இம்தியாஸ் கொழும்பின் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[9] கொழும்பின் முதல் பெண் முதல்வராக ரோசி சேனாநாயக்க, 2018 இல் ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

வட்டாரங்கள்

[தொகு]

26ம் இலக்க 2015 ஆகத்து 21 அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலின் மூலம் உள்ளுராட்சி அதிகார சபைகள் தேர்தல் கட்டளை சட்டத்தின் 3ஆவது பிரிவின் கீழ் உள்ளுராட்சி அதிகார சபையின் ஆளுகைப் பிரதேசத்தின் எல்லைகள் வரையறை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு வரையறை செய்யப்பட்டுள்ள கொழும்பு மாநகர சபையின் ஆளுகைப் பிரதேசம் 47 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவற்றில் இரண்டு 3-உறுப்பினர் வட்டாரங்களும், 12 2-உறுப்பினர் வட்டாரங்களும், மீதி 32 1-உறுப்பினர் வட்டாரங்களும் ஆகும்.[10]

  1. சம்மன்திரணபுர
  2. மட்டக்குளி
  3. முகத்துவாரம் (2 உறுப்பினர்கள்)
  4. மகவத்தை (3 உறுப்பினர்கள்)
  5. அளுத்மாவத்தை (2 உறுப்பினர்கள்)
  6. லுனுபொக்குண (2 உறுப்பினர்கள்)
  7. கொட்டாஞ்சேனை மேற்கு
  8. கொட்டாஞ்சேனை கிழக்கு
  9. புளுமென்டால் (2 உறுப்பினர்கள்)
  10. பாலத்துறை வடக்கு
  11. நவகம்புர
  12. தெமட்டகொடை (3 உறுப்பினர்கள்)
  13. மாளிகாவத்தை கிழக்கு
  14. பாலத்துறை தெற்கு (2 உறுப்பினர்கள்)
  15. கேத்தாராமய
  16. நியூபசார்
  17. மசங்கஸ் வீதி
  18. ஜிந்துப்பிட்டி
  19. கொச்சிக்கடை
  20. கோட்டை
  21. கொச்சிக்கடை தெற்கு
  22. புதுக்கடை மேற்கு
  23. புதுக்கடை கிழக்கு
  24. வாழைத்தோட்டம்
  25. பஞ்சிக்காவத்தை
  26. மாளிகாவத்தை மேற்கு
  27. மருதானை (2 உறுப்பினர்கள்)
  28. குப்பியாவத்தை கிழக்கு
  29. வனாத்தமுல்லை (2 உறுப்பினர்கள்)
  30. பொரளை வடக்கு (2 உறுப்பினர்கள்)
  31. குப்பியாவத்தை மேற்கு
  32. உணுப்பிட்டி
  33. வேக்கந்தை
  34. கொள்ளுப்பிட்டி
  35. பம்பலப்பிட்டி
  36. கறுவாத்தோட்டம்
  37. பொரளை தெற்கு
  38. கோத்தமிபுர
  39. நாராகேன்பிட்டி
  40. திம்பிரிகசுயாய (2 உறுப்பினர்கள்)
  41. ஹவ்லொக் டவுன் (2 உறுப்பினர்கள்)
  42. கிருல (2 உறுப்பினர்கள்)
  43. கிருலப்பனை (2 உறுப்பினர்கள்)
  44. பாமன்கடை கிழக்கு
  45. பாமன்கடை மேற்கு
  46. வெள்ளவத்தை வடக்கு (2 உறுப்பினர்கள்)
  47. வெள்ளவத்தை தெற்கு

தேர்தல் முடிவுகள்

[தொகு]

2002 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

20 மே 2002 உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[11]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இருக்கைகள்
  ஐக்கிய தேசியக் கட்சி 136,845 57.83% 32
  மக்கள் கூட்டணி 38,002 16.06% 8
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 26,315 11.12% 6
  சனநாயகத் தொழிலாளர் காங்கிரசு 13,147 5.56% 3
  மக்கள் விடுதலை முன்னணி 9,967 4.21% 2
  சுயேச்சைக் குழு 2 4,298 1.82% 1
  சிகல உறுமய 2,836 1.20% 1
  முசுலிம் ஐக்கிய விடுதலை முன்னணி 1,905 0.81% 0
  புதிய இடது முன்னணி 1,724 0.73% 0
  ஐக்கிய சோசலிசக் கட்சி 1,018 0.43% 0
  சுயேச்சைக் குழு 1 282 0.12% 0
  இலங்கை முஸ்லிம் கட்சி 245 0.10% 0
  சுயேச்சைக் குழு 3 30 0.01% 0
செல்லுபடியான வாக்குகள் 236,614 95.61% 53
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,862 4.39%
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 247,476 59.45%
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 416,276
வாக்குவீதம் 59.45%

2006 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

2006 மே உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[12] 2006 மாநகர சபைத் தேர்தலுக்கான ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்புமனுப் பட்டியல் நிராகரிக்கப்பட்டது,[7] இக்கட்சி ஆதரித்த சுயேச்சைக் குழு 3 தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.[8]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இருக்கைகள்
  சுயேச்சைக் குழு 3 82,580 40.24% 23
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 57,158 27.85% 14
  சுயேச்சைக் குழு 4 17,480 8.52% 4
  ஜனநாயக மக்கள் முன்னணி 16,068 7.83% 4
  சனநாயக ஒற்றுமைக் கூட்டணி 8,106 3.95% 2
  மலையக மக்கள் முன்னணி 7,717 3.76% 2
  மக்கள் விடுதலை முன்னணி 6,145 2.99% 2
  சுயேச்சைக் குழு 2 3,931 1.92% 1
  ஜாதிக எல உறுமய 3,281 1.60% 1
  சுயேச்சைக் குழு 1 1,609 0.78% 0
  ஐக்கிய சோசலிசக் கட்சி 1,160 0.57% 0
செல்லுபடியான வாக்குகள் 205,235 95.48% 53
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 9,725 4.52%
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 214,960
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 395,914
வாக்குவீதம் 54.29%

2011 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

2018 பெப்ரவரி 10 உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[13]

கூட்டணிகளும் கட்சிகளும் வாக்குகள் % இருக்கைகள் இருக்கை மாற்றம்
  ஐக்கிய தேசியக் கட்சி 101,920 43.01% 24 Increase 24
  ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 77,089 32.53% 16 Increase 2
  சனநாயக மக்கள் முன்னணி 26,229 11.07% 6 Increase 2
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 9,979 4.21% 2 Increase 2
  சனநாயக ஒற்றுமைக் கூட்டணி 7,830 3.30% 2
  சுயேச்சைக் குழு 2 4,085 1.72% 1
  மக்கள் விடுதலை முன்னணி 3,162 1.33% 1 1
  சுயேச்சைக் குழு 1 2,962 1.25% 1 Increase 1
செல்லுபடியான வாக்குகள் 236,976 95.85% 53
நிராகரிக்கப்பட்ட வாக்குகள் 10,270 4.15%
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 247,246
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 393,085
வாக்குவீதம் 62.90%

2018 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 66 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 53 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 119 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[1][2] தேர்தல் முடிவுகள் வருமாறு:[10]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  ஐக்கிய தேசியக் கட்சி 131,353 46.03% 60 0 60
  இலங்கை பொதுசன முன்னணி 60,487 21.20% 3 20 23
  ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 31,421 11.01% 2 10 12
  ஒருமித்த முற்போக்குக் கூட்டணி 27,168 9.52% 1 9 10
  மக்கள் விடுதலை முன்னணி 14,234 4.99% 0 6 6
  சுயேச்சைக் குழு 2 4,884 1.71% 0 2 2
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு 4,700 1.65% 0 2 2
சிறீ லங்கா தேசிய சக்தி 3,251 1.14% 0 1 1
  இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் (அரசியற் கிளை) 2,853 1.00% 0 1 1
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி 2,771 0.97% 0 1 1
ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி 2,380 0.48% 0 1 1
  சுயேச்சைக் குழு 1 878 0.31% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 285,380 100.00% 66 53 119
செல்லாத வாக்குகள் 7,023
செலுத்தப்பட்ட மொத்த வாக்குகள் 292.403
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 394,044
வாக்குவீதம் 74.71%

2018 தேர்தலில் கொழும்பு மாநகரசபையின் முதல்வராக ரோசி சேனாநாயக்க (பம்பலப்பிட்டி, ஐக்கிய தேசியக் கட்சி), துணை முதல்வராக முகம்மது துல்பா முகம்மது இக்பால் (மசங்கஸ் வீதி, ஐக்கிய தேசியக் கட்சி) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[10]

2025 உள்ளூராட்சித் தேர்தல்

[தொகு]

2025 மே 6 அன்று இடம்பெற்ற தேர்தல் முடிவுகள்:[14] 66 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 51 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 117 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[15]

கூட்டணிகளும்
கட்சிகளும்
வாக்குகள் % வட்டாரங்களில்
இருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட
உறுப்பினர்கள்
பெற்ற
வாக்குகளுக்குரிய
கூடுதல் உறுப்பினர்கள்
உரித்தான முழு
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
  தேசிய மக்கள் சக்தி 81,814 36.92% 48 0 48
  ஐக்கிய மக்கள் சக்தி 58,375 26.34% 14 15 29
  ஐக்கிய தேசியக் கட்சி 26,297 11.87% 2 11 13
  இலங்கை பொதுசன முன்னணி 9,341 4.21% 1 4 5
  சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு 8,630 3.89% 1 3 4
  சுயேச்சைக் குழு 3 5,934 2.68% 0 3 3
  சுயேச்சைக் குழு 5 4,659 2.10% 0 2 2
ஐக்கிய சமாதானக் கூட்டணி 4,473 2.02% 0 2 2
சர்வசன அதிகாரம் 3,911 1.76% 0 2 2
  சுயேச்சைக் குழு 4 3,640 1.64% 0 2 2
மக்கள் கூட்டணி 2,754 1.24% 0 1 1
தேசிய சுதந்திர முன்னணி 2,398 1.08% 0 1 1
ஐக்கிய குடியரசு முன்னணி 2,157 0.97% 0 1 1
  சுயேச்சைக் குழு 1 1,909 0.86% 0 1 1
  சுயேச்சைக் குழு 2 1,791 0.81% 0 1 1
சனநாயக தேசியக் கூட்டணி 1,370 0.62% 0 1 1
தேசிய மக்கள் கட்சி 950 0.43% 0 1 1
தாராளவாத சனநாயகக் கட்சி 461 0.21% 0 0 0
மக்கள் போராட்டக் கூட்டணி 423 0.19% 0 0 0
சன சத்த பெரமுன 337 0.15% 0 0 0
செல்லுபடியான வாக்குகள் 221,624 100.00% 66 51 117
செல்லாத வாக்குகள் 5,609
அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் 227,233
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 394,533
வாக்குவீதம் 57.60%

2025 சூன் 16 இல் நடைபெற்ற கொழும்பு மாநகர சபைக்கான முதல்வர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் விராய் கெலி பல்தசார் தெரிவு செய்யப்பட்டார். துணை முதல்வராக கேமந்த குமார (தேமக) தெரிவு செய்யப்பட்டார்.[16]

இவற்றையும் பார்க்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "LG polls cost to hit Rs. 4 b". Daily FT. 5-12-2017. http://www.ft.lk/front-page/LG-polls-cost-to-hit-Rs--4-b/44-644557. பார்த்த நாள்: 23-12-2017. 
  2. 2.0 2.1 "Amended Local Government Elections Bill approved in Parliament". டெய்லி நியூசு. 25-08-2017. 
  3. "The History of the City". Colombo Municipal Council. Archived from the original on 2011-12-02. Retrieved 2006-01-12.
  4. "City Profile". Colombo Municipal Council. Archived from the original on 2005-12-25. Retrieved 2006-01-12.
  5. "Census of Population and Housing 2011". Archived from the original on 2014-10-28. Retrieved 2014-10-23.
  6. Alexander, Robert Jackson. International Trotskyism, 1929-1985: A Documented Analysis of the Movement.
  7. 7.0 7.1 Colombo UNP list rejected, BBC News, February 16, 2006
  8. 8.0 8.1 Independent group wins CMC, BBC News, May 21, 2006
  9. Rotational mayors as Colombo gets trishaw driver as her 1st citizen, Sunday Times, May 28, 2006
  10. 10.0 10.1 10.2 "Local Authorities Election - 10.02.2018" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 12 May 2025. Retrieved 7 June 2025.
  11. "Local Authorities Election - 2002" (PDF). இலங்கை தேர்தல் திணைக்களம். Archived (PDF) from the original on 21 December 2018. Retrieved 6 August 2025.
  12. "Local Authorities Elections Results 2006" (PDF). Election Commission of Sri Lanka. Archived (PDF) from the original on 21 திசம்பர் 2018. Retrieved 5 ஆகத்து 2025.}}
  13. "Local Authorities Elections Results 2011" (PDF). Election Commission of Sri Lanka. 10 August 2011. Archived (PDF) from the original on 21 திசம்பர் 2018. Retrieved 5 ஆகத்து 2025.}}
  14. "Local Authorities Election - 6.05.2025 Colombo District Colombo Municipal Council" (PDF). Department of Elections, Sri Lanka. Archived (PDF) from the original on 1 July 2025. Retrieved 3 August 2025.
  15. Newsfirst.lk. "Sri Lankan Local Authority Election 2025 – Sri Lanka | Live Results and Live Stream - newsfirst.lk". election.newsfirst.lk (in ஆங்கிலம்). Retrieved 2025-06-22.
  16. "கொழும்பு மாநகர சபை தேசிய மக்கள் சக்தி வசமானது". Ceylon Mirror. Retrieved 3 ஆகத்து 2025.{{cite web}}: CS1 maint: url-status (link)

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழும்பு_மாநகர_சபை&oldid=4322958" இலிருந்து மீள்விக்கப்பட்டது