கொழும்புக் கப்பல்துறை நிறுவனம்
கொழும்பு கப்பல்துறையின் சின்னம் | |
| வகை | பொதுப் பங்கு நிறுவனம் |
|---|---|
| முதன்மை நபர்கள் |
|
| தொழில்துறை |
|
| உற்பத்திகள் |
|
| சேவைகள் |
|
| வருமானம் | |
| இயக்க வருமானம் | |
| நிகர வருமானம் | |
| மொத்தச் சொத்துகள் | |
| மொத்த பங்குத்தொகை | |
| உரிமையாளர்கள் |
|
| பணியாளர் | 3,000 |
| தாய் நிறுவனம் | மசகான் கப்பல் கட்டும் நிறுவனம் |
| [1] | |
கொழும்புக் கப்பல்துறை நிறுவனம் (Colombo Dockyard PLC) என்பது இலங்கை, கொழும்பு நகரைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஒரு முன்னணி கப்பல் கட்டும் நிறுவனமாகும். இந்நிறுவனம் இலங்கை மற்றும் சர்வதேசச் சந்தைகளில் உள்ள வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில், இராணுவ மற்றும் சிவில் பயன்பாட்டுப் படகுகள் மற்றும் கப்பல்களை வடிவமைத்து நிர்மாணிப்பதில் நிபுணத்துவம் பெற்றுள்ளது.
வரலாறு
[தொகு]கப்பல் பழுதுபார்த்தல், கப்பல் கட்டுதல், கனரகப் பொறியியல் மற்றும் கடல்சார் பொறியியல் ஆகிய துறைகளில் இலங்கையின் முதன்மையான பொறியியல் நிறுவனங்களில் ஒன்றான கொழும்பு கப்பல்துறை, 1974 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது கொழும்பு துறைமுக வளாகத்திற்குள் அமைந்துள்ளதால், ஓர் ஆழ்கடல் துறைமுகத்திற்குரிய அனைத்துச் சாதகமான அம்சங்களையும் கொண்டு விளங்குகிறது.
கொழும்பு கப்பல்துறை நிறுவனம் 1993 ஆம் ஆண்டு முதல் ஜப்பானின் 'ஒனோமிச்சி கப்பல்துறை' நிறுவனத்துடன் கூட்டு ஒத்துழைப்புடன் செயல்பட்டு வருகிறது. இவ்விரு நிறுவனங்களின் கூட்டுப் பங்களிப்பின் 20 ஆம் ஆண்டு நிறைவு விழா, 2013 மார்ச் 26 அன்று கொண்டாடப்பட்டது.[2]
2020 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் 'கரே மிஸ்ஜே & கோ' நிறுவனத்தின் துணை நிறுவனமான நார்வேயின் 'மிஸ்ஜே ஈக்கோ பல்க்' நிறுவனத்திற்காக, சுற்றுச்சூழலுக்கு உகந்த சரக்குக் கப்பல்களை வடிவமைத்துக் கட்டியது. மேலும், ஜப்பானின் 'டொயோட்டா சுஷோ கார்ப்பரேஷன்' மூலமாக ஈராக் துறைமுகங்கள் பொது நிறுவனத்திற்கு வழங்குவதற்காக, மிதவை வழிகாட்டிப் படகுகளையும் கட்டியமைத்தது. ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) இத்திட்டத்திற்கு நிதியுதவி வழங்கியது.[3]
2024 நவம்பரில், கொழும்பு கப்பல்துறை நிறுவனம் கடுமையான நிதி நெருக்கடியைச் சந்தித்தது. இதைத் தொடர்ந்து, டிசம்பர் 6 அன்று அதன் இரு ஜப்பானிய இயக்குநர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர்; எனினும் இலங்கை இயக்குநர்கள் தங்கள் பதவிகளில் தொடர்ந்தனர். இலங்கை அரசாங்கத்தின் ஆதரவுடன், ஜப்பானின் ஒனோமிச்சி கப்பல்துறை நிறுவனம் வசம் இருந்த 51% பங்குகளை வாங்குவதற்கும், உரிமைப் பங்கு வெளியீடு மூலம் 30 மில்லியன் டாலர்களைத் திரட்டுவதற்கும் ஒரு புதிய மூலோபாய முதலீட்டாளரை இந்நிறுவனம் நாடியது. உலகெங்கிலும் உள்ள இலங்கைத் தூதரகங்கள் மூலம் இதற்கான வெளிப்படையான கோரிக்கை விடுக்கப்பட்டதில், சுமார் 40 நிறுவனங்கள் தங்களின் ஆர்வத்தை வெளிப்படுத்தின. அவற்றுள் இறுதிப் பட்டியலாக ஐந்து நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டன.[4]
மசகான் கப்பல்துறை கப்பல் கட்டுபவர்களால் கையகப்படுத்துதல்
[தொகு]மசகான் கப்பல் கட்டும் நிறுவனம், தனது கப்பல் கட்டுதல் மற்றும் பழுதுபார்ப்பு வணிகத்தை விரிவுபடுத்துவதற்காக, இலங்கையின் கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தின் 51% கட்டுப்பாட்டுப் பங்குகளை வாங்குவதற்கான தனது முடிவை 2025 ஜூன் 27 அன்று ஒழுங்குமுறை ஆணையத்திடம் அறிவித்தது. சுமார் 450 கோடி ரூபாய் (52.96 மில்லியன் அமெரிக்க டாலர்) மதிப்புள்ள இந்த வர்த்தகப் பரிவர்த்தனை ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும் என்றும், அதன் பிறகு கொழும்பு கப்பல்துறை நிறுவனம் மசகான் நிறுவனத்தின் ஒரு அங்கமாகச் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, 2024 நவம்பர் இறுதியில் ஜப்பானின் ஒனோமிச்சி கப்பல்துறை நிறுவனம் கொழும்பு கப்பல்துறையில் இருந்த தனது பெரும்பான்மையான பங்குகளைத் திரும்பப் பெற்றது. இதனால் ஏற்பட்ட நிதி நெருக்கடியைச் சமாளிக்கவும், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாத நிலையைத் தவிர்க்கவும், இந்திய முதலீடுகளை ஈர்க்க கொழும்பு புதுதில்லியின் உதவியை நாடியது. இதனையடுத்து, சிறந்த கப்பல் கட்டும் அனுபவமும் நிதித் திறனும் கொண்ட மசகான் நிறுவனம் இதற்கான முதலீட்டாளராகத் தேர்வு செய்யப்பட்டது.[5]
சுமார் 249.5 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த கையகப்படுத்தல் செயல்முறைகள் 2026 ஏப்ரலுக்குள் முழுமையாக நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து, கொழும்பு கப்பல்துறையின் நிர்வாகக் குழு ஏப்ரல் 7 முதல் நடைமுறைக்கு வரும் வகையில் மசகான் நிறுவனத்தின் பிரதிநிதிகளைக் கொண்டு மாற்றியமைக்கப்பட்டது. இதன்படி, இந்தியக் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற கேப்டனும், மசகான் கப்பல் கட்டும் நிறுவனத்தின் தலைவருமான ஜெகமோகன் இதன் செயல்சாரா தலைவராக நியமிக்கப்பட்டார். இது மசகான் நிறுவனத்தின் முதலாவது சர்வதேசக் கையகப்படுத்தலாகும்.[6] இக்கையகப்படுத்தல் ஒப்பந்தம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கப்பல்துறையின் உடனடி மூலதனத் தேவைகளுக்காக 40 மில்லியன் டாலர்கள் நிதி செலுத்தப்பட்டது.[7]
வசதிகள் மற்றும் செயல்பாடு
[தொகு]

குறிப்பிடத்தக்க திட்டங்கள்
[தொகு]கொழும்பு கப்பல்துறை நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட சில குறிப்பிடத்தக்க கப்பல்கள் மற்றும் திட்டங்கள் பின்வருமாறு:[8]
- ஜெயசாகர வகுப்பு ரோந்து கப்பல்[9]
- கொழும்பு வகுப்பு விரைவுத் தாக்குதல் கலங்கள்[10]
- கடலோரக் கண்காணிப்புக் கப்பல்கள்
- மீன்வளப் பாதுகாப்புக் கப்பல்கள் (35 மற்றும் 40 மீட்டர்)
- தீயணைப்புக் கப்பல்கள்
- 29 மீட்டர் தரையிறங்கு கலங்கள்
- விரைவுத் தரையிறங்கு கலங்கள்
- 65 டன் பொல்லார்ட் புல் இழுவைப் படகுகள்
- நங்கூரம் கையாளும் இழுவை விநியோகக் கப்பல்கள் (80 மற்றும் 130 டன் பொல்லார்ட் இழுவைத் திறன்)
- பயணிகள் கப்பல்கள் (250 மற்றும் 400 பயணிகள் பயணிக்கும் வசதி கொண்டது)
- பல்நோக்கு இயங்குதள விநியோகக் கப்பல்கள்
- விரைவு ரோந்துக் கப்பல்கள்
- VARD 9-01 வடிவமைப்புடைய 111.3 மீட்டர் கடலின்கீழ் கேபிள் இடும் கப்பல்[11]
- VARD 7.85 மீட்டர் கடலோர ரோந்துக் கப்பல் (OPV)[12]
வாடிக்கையாளர்கள்
[தொகு]இராணுவ வாடிக்கையாளர்கள்
[தொகு]
இலங்கை கடற்படை- இலங்கை கடலோரக் காவல்படை
- மாலத்தீவு கடலோரக் காவல்படை
சர்வதேச வாடிக்கையாளர்கள்
[தொகு]
போர்பன்
கொலம்பியா கப்பல் மேலாண்மை நிறுவனம் (சிங்கப்பூர்)
இந்திய தூர்வாரல் கழகம்
இன்டர்நேஷனல் டிரெட்ஜிங்
யூரோபல்க்
கோல் ஆஃப்ஷோர்
தி கிரேட்ஷிப் குரூப்
ஹூண்டாய் பொறியியல் மற்றும் கட்டுமானம்
கோட்டோகு கயூன்
மார்ஸ்க்
மெர்ச்சன்ட் ஷிப்பிங்
சேஃப்டி மேனேஜ்மென்ட் ஓவர்சீஸ்
இந்திய கப்பல் போக்குவரத்து கழகம்
பாகிஸ்தான் தேசிய கப்பல் போக்குவரத்துக் கழகம்
சினோகெம் கப்பல் போக்குவரத்து
டேங்கர் பசிபிக்
டோம்
டைட்வாட்டர்
டைட்டன் கடல்சார் மேலாண்மை
வான் ஓர்ட்
ஆரஞ்சு மரைன்[13]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Annual Report 2021" (PDF). Colombo Dockyard PLC. Retrieved 19 June 2022.
- ↑ "COLOMBO DOCKYARD PLC - EDB Sri Lanka". EDB Sri Lanka. Retrieved 22 February 2022.
- ↑ "Colombo Dockyard PLC Launches the Buoy Tender Vessel Being Built For General Company for Ports of Iraq through Toyota Tsusho Corporation of Japan" (in அமெரிக்க ஆங்கிலம்). Ada Derana Biz English. 24 July 2020. Retrieved 14 November 2020.
- ↑ Bana, Naresh (11 July 2025). "Reviving Sri Lanka's maritime edge" (in ஆங்கிலம்). BusinessLine. Retrieved 17 August 2025.
- ↑ Roy, Shubhajit (2025-06-29). "Behind Mazagon Dock's Lanka deal: Eye on China, Colombo bailout plea". The Indian Express (in ஆங்கிலம்). Archived from the original on 2025-06-29. Retrieved 2025-06-29.
- ↑ "Mazagon Dock acquires 51% stake in Colombo Dockyard for Rs 249.5 crore in first international acquisition". The Economic Times. 11 April 2026. பன்னாட்டுத் தர தொடர் எண்:0013-0389. https://economictimes.indiatimes.com/industry/transportation/shipping-/-transport/mazagon-dock-acquires-51-stake-in-colombo-dockyard-for-rs-249-5-crore-in-first-international-acquisition/articleshow/130194316.cms.
- ↑ "Mazagon Dock buys Colombo Dockyard for ₹452 crore". The Hindu. 2 May 2026. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/business/mazagon-docks-452-cr-colombo-dockyard-deal-signals-indias-global-shipbuilding-push/article70932834.ece.
- ↑ "dl.lib.mrt.ac.lk" (PDF). University of Moratuwa.
- ↑ "SLNS 'Jayasagara' decommissioned". Daily News. Retrieved 26 April 2023.
- ↑ Shamindra Ferdinando. "Navy obtains Ultra Fast Attack Craft from Dockyard Ltd". island.lk. Archived from the original on 19 November 2003. Retrieved 15 January 2022.
- ↑ "VARD designs new cable lay vessel for Kokusai Cable Ship Co. Ltd in Japan - VARD". VARD. Archived from the original on 29 March 2019. Retrieved 19 March 2019.
- ↑ "Colombo Dockyard to get US$180mn Sri Lanka patrol vessel deal" (in ஆங்கிலம்). EconomyNext. Archived from the original on 21 July 2019. Retrieved 19 March 2019.
- ↑ "Mazagon Dock buys Colombo Dockyard for ₹452 crore". The Hindu. https://www.thehindu.com/business/mazagon-docks-452-cr-colombo-dockyard-deal-signals-indias-global-shipbuilding-push/article70932834.ece.
