கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொழுமம் கோட்டை மாரியம்மன் கோவில் என்பது திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் கொழுமம் என்ற ஊரில் அமைந்துள்ள மாரியம்மன் கோயிலாகும். [1] கருவறையில் உள்ள மாரியம்மன் லிங்கவடிவில் உள்ளார். இவரை சுயம்பு மாரியம்மன் என அழைக்கின்றனர்.

பெயர்க்காரணம்[தொகு]

குமண மன்னன் என்பவர் இப்பகுதியை ஆட்சி செய்து வந்ததாகவும், அம்மன்னின் கோட்டைப் பகுதி இருந்த இடத்தில் இக்கோவில் கட்டியதால் கோட்டை மாரியம்மன் என அழைக்கின்றனர்.

விழாக்கள்[தொகு]

  • சித்திரைப் பெருந்திருவிழா [2][3]
  • ஆடி மாதத்தில் லட்சார்ச்சனை விழா[2]
  • லட்ச தீப விழா [2]
  • திருக்கல்யாணம்
  • தேர் திருவிழா
  • சிம்ம வாகன உலா

சித்திரை திருவிழா பதினெட்டு கிராமங்களை சேர்ந்த மக்களால் கொண்டாடப்படுகிறது. கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், பறவை காவடி, அலகு குத்துதல் ஆகியவை நடத்தப்படுகின்றன. [4]

நேர்த்திக்கடன்கள்[தொகு]

  • அக்னிசட்டி
  • அங்கப்பிரதட்சணம்
  • பால்குடம்
  • முடிக்காணிக்கை

மேற்கோள்கள்[தொகு]