கொழுப்பு அமில அமைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொழுப்பு அமில அமைடுகளில் ஒன்றான ஆனந்தமைடின் அமைப்பு.

கொழுப்பு அமில அமைடுகள் (Fatty acid amides) ஒரு கொழுப்பு அமிலம் மற்றும் ஒரு அமீன் ஆகியவற்றிலிருந்து உருவான அமைடுகள் ஆகும். இயற்கையில் பல தனித்த கொழுப்பு அமிலங்களல் அமீன் உறுப்பாக ஈத்தனாலமீனைக் கொண்டுள்ளன. மேலும், அவை N-அசைல்எத்தனாலமீன்கள் என அழைக்கப்படுகின்ற RC(O)N(H)CH2CH2OH என்ற வினைசெயல்தன்மைக் கொண்ட அமைப்புடனான சேர்மங்களைக் கொண்டுள்ளன. நன்கறியப்பட்ட உதாரணமானது ஆனந்தமைடாகும். இதர கொழுப்பு அமில அமைடுகள் கொழுப்பு அமிலங்களின் முதன்மை அமைடுகளாகும். இவை வினைசெயல்படு தொகுதியாக  RC(O)NH2) வைக் கொண்டுள்ளன. ஒலியமைடு இவ்வகை அமைடுகளுக்கான ஒரு உதாரணமாகும்.

இயற்கையில் கிடைக்கும் நிகழ்வுகள்[தொகு]

கொழுப்பு அமில அமைடுகள் செல்களுக்கிடையே நடைபெறும் சமிக்ஞைகள் கடத்துதலில் முக்கியப்பங்கு வகிக்கின்றன. இந்த சமிக்ஞைகள் கடத்துதலானது அமைடுகளை தாய் கொழுப்பு அமிலமாக மாற்றுகின்ற கொழுப்பு அமில அமைடு ஐதரோலேசுகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. இத்தகைய சமிக்ஞை கடத்துதல்களுக்கான உதாரணமாக ஆனந்தமைடுகளின் கேன்னாபினாய்டு ஏற்பிகளின் பிணைப்புகளால் துாண்டப்படுகிறது.[1]

அலிபாட்டிக் அமைடுகள் நைஜீரியாவில் உள்ள சான்தோக்சைலம் எனும் சிறப்பினங்களில் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. McKinney, Michele K.; Cravatt, Benjamin F. (2005). "Structure and Function of Fatty Acid Amide Hydrolase". Annual Review of Biochemistry 74 (1): 411–432. doi:10.1146/annurev.biochem.74.082803.133450. பன்னாட்டுத் தர தொடர் எண்:0066-4154. 
  2. The Nigerian Zanthoxylum; Chemical and biological values. S. K. Adesina, Afr. J. Trad. CAM, 2005, volume 2, issue 3, pages 282-301 (article)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொழுப்பு_அமில_அமைடு&oldid=3454081" இலிருந்து மீள்விக்கப்பட்டது