கொளத்தூர் கோபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொளத்தூர் கோபாலன்
Coluthur Gopalan
பிறப்பு29 நவம்பர் 1918 (1918-11-29) (அகவை 100)
சேலம், தமிழ்நாடு
பணிஊட்டச்சத்து நிபுணர்

கொளத்தூர் கோபாலன் (Coluthur Gopalan) ஓர் இந்திய ஊட்டச்சத்து நிபுணர் ஆவார். இவர் 1918 ஆம் ஆண்டு நவம்பர் 29 அன்று தமிழ்நாட்டிலுள்ள சேலத்தில் பிறந்தார். எப்.ஆர்.சி.பி. எனப்படும் மருத்துவர்களுக்கான இராயல் கல்லூரியில் உறுப்பினர், எப்.ஆர்.எசு. எனப்படும் இராயல் கழக உறுப்பினர், எப்.ஏ.எம்.எசு. எனப்படும் இலண்டன் மருத்துவ அறிவியல் அகாடமியின் உறுப்பினர், எப்.ஏ.எசு.சி எனப்படும் அறிவியல் கழகத்தின் உறுப்பினர் போன்ற பல பெருமைகள் இவருக்கு உண்டு. கோபாலன் சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மருந்தியல் பட்டமும், இலண்டன் பல்கலைக்கழகத்தில் அறிவியல் மற்றும் தத்துவப் பாடங்களில் முனைவர் பட்டமும் பெற்றார் [1][2]. உயரிய விருதுகளான பத்மசிறீ மற்றும் பத்ம பூசண் விருதுகளை இந்திய அரசு இவருக்கு வழங்கி சிறப்பித்தது [3].

மேற்கோள்கள்[தொகு]

  1. Fellow Profile
  2. Indian Fellow Archived 2012-07-16 at Archive.is
  3. "Padma Awards". Ministry of Home Affairs, Government of India (2015). மூல முகவரியிலிருந்து 15 November 2014 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 21 July 2015.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொளத்தூர்_கோபாலன்&oldid=2711434" இருந்து மீள்விக்கப்பட்டது