மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொளஞ்சியப்பர் திருக்கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
Jump to navigation Jump to search
மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் is located in தமிழ் நாடு
மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
Location within தமிழ் நாடு
ஆள்கூறுகள்: 11°31′20″N 79°17′59″E / 11.522246°N 79.29966°E / 11.522246; 79.29966ஆள்கூற்று: 11°31′20″N 79°17′59″E / 11.522246°N 79.29966°E / 11.522246; 79.29966
பெயர்
பெயர்: மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
தமிழ்: மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்
அமைவிடம்
நாடு: இந்தியா
மாநிலம்: தமிழ்நாடு
மாவட்டம்: கடலூர்
அமைவு: மணவாளநல்லூர்
கோயில் தகவல்கள்
மூலவர்: கொளஞ்சியப்பர்
தீர்த்தம்: மணிமுத்தாறு நதி
சிறப்பு திருவிழாக்கள்: பங்குனி உத்தரம், கந்த சஷ்டி,
சித்ரா பௌர்ணமி

கொளஞ்சியப்பர் கோயில் விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாளநல்லூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் சுயம்பு வடிவிலான முருகன் ஆவார். இக்கோயிலின் சிறப்பு இங்கே நடைமுறையில் இருக்கும் “பிராது” எனும் வழக்கு பதிவு செய்யும் முறை, சூறை விடுதல் போன்றவையாகும். இங்கு பங்குனி உத்தரம் விழா சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

பிராது கட்டுதல்[தொகு]

பிராது என்கிற வார்த்தைக்கு முறையீடு, குற்றச்சாட்டு, புகார், குறை கூறல் என்பது பொருள். இயல்பு வாழ்க்கையில் மக்கள் தங்கள் புகாரினை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, மக்கள் தங்கள் புகார்களை, வேண்டுகோளை ஒரு காகிதத்தில் எழுதி கொளஞ்சியப்பரை நீதிபதியாக கருதி சமர்பிப்பார்கள். சமர்பித்த மூன்று நாட்களுக்குள்ளோ, மூன்று வாரங்களுக்குள்ளோ, மூன்று மாதங்களுக்குள்ளோ, மூன்று வருடங்களுக்குள்ளோ முறையிடப்பட்ட குறை, புகாரின் தன்மையைப் பொறுத்து கொளஞ்சியப்பரே ஆய்ந்து நல்ல முடிவை தந்து, குறையை தீர்த்து, வேண்டுகோளை நிறைவேற்றி வைப்பதாக நம்பப்படுகிறது. வெளியூர்களில் இருந்தும் கூட பலரும் இங்கு வந்து இந்த பிராது பிராத்தனையை மேற்கொள்கின்றனர்.

  • பிராது கட்டுதலில் பின்பற்றப்படும் வழிமுறைகள்
மக்கள் காகிதத்தில் எழுதி கொடுக்கும் குறைகள் முதலில் மூலவரான கொளஞ்சியப்பர் சன்னிதானத்தில் வைக்கப்பட்டு பூஜிக்கப்படுகிறது. அதன்பிறகு, கோயில் வளாகத்தின் உள்ளேயே இருக்கும் முனியப்பர் சன்னிதானத்தின் முன்புறத்தில் அமைந்துள்ள சூலம், ஈட்டி போன்றவற்றில் கட்டப்படும். தங்கள் வேண்டுதல், கோரிக்கை நிறைவேறிய பிறகு மக்கள் மீண்டும் இந்தக்கோயிலுக்கு வந்து தங்கள் பிராதினை திரும்பப் பெற்றுக்கொள்கிறார்கள். பிராது கட்டும் வேண்டுதலுக்கு வசூலிக்கும் கட்டணத்திலும் ஒரு புதுமையான முறைமை கடைபிடிக்கப்படுகிறது. கோயில் நிர்வாகத்தின் பொதுவான கட்டணத்திற்குப் பிறகு, பிராது கட்டும் நபர் எங்கிருந்து வருகிறாரோ அந்த இடத்திற்கும் கோயிலுக்கும் இடையே உள்ள தொலைவு கணக்கிடப்பட்டு, ஒரு கிலோமீட்டருக்கு 25 பைசா வீதம் வசூலிக்கப்படுகிறது.

வேப்பெண்ணெய்[தொகு]

இத்திருத்தலத்தில், பூசித்து விபூதியிடப்பட்ட வேப்பெண்ணெய் மருந்தாக வழங்கப்படுகின்றது.[1]

சூறை விடுதல்[தொகு]

விவசாயிகள் தங்கள் நிலங்களில் நல்ல விளைச்சல் கிடைக்க இக்கோயில் வேண்டிக்கொள்கிறார்கள். அறுவடைக்குப் பிறகு வரும் பங்குனி உத்தர திருவிழா அன்று தாங்கள் விளைவித்த பயிர் விளைச்சலில் ஒரு பங்கினை கோயிலுக்கு கொண்டு வந்து மக்கள் கூட்டத்தில் மேலே எறிவார்கள் இது சூறைவிடுதல் எனப்படுகிறது[சான்று தேவை]. பொதுவாக சூறைவிடுதலில் முந்திரிக் கொட்டைகள் முக்கிய இடம்பெறும்.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

கொளஞ்சியப்பர் கோயிலின் இணையதளம்

காட்சியகம்[தொகு]

கோயிலை சுற்றியுள்ள சிலைகள்