கொளக்கரவாடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ்நாட்டின் திருவண்ணாமலை மாவட்டம் போளூர் வட்டத்தைச் சேர்ந்தது கொளக்கரவாடி ஆகும். இது குளக்கரை பாடி என்று தேவிகாபுரம் கல்வெட்டுகளில் குறிக்கப்படும். இவ்வூரில் உள்ள ஏரியின் கரையில் மேற்குப் பார்த்தவாறு 12 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு நடுகல்லும் ஊரில் தனியார் நிலத்தின் அருகில் ஒரு செக்குக் கல்லும் காணப்படுகின்றன. இச்செக்குக் கல்லில் உள்ள கல்வெட்டு 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இவ்வூரின் முக்கிய தொழில் விவசாயம்.

கொளக்கரவாடி
கொளக்கரவாடி நடுகல்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொளக்கரவாடி&oldid=1235073" இருந்து மீள்விக்கப்பட்டது