கொல்லிக் குடவரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குடவரை என்பது கொல்லிமலையின் மேற்கிலிருந்த பாறை. குடமலை என்பது மேற்குத் தொடர்ச்சி மலை. கொல்லிமலையின் மேற்கில் இருந்த குகைவளைவுப் பாறையில் கொல்லிப்பாவை என்னும் அழகிய ஓவியம் வரையப்பட்டிருந்தது. இங்குக் குவளைமலர் பூத்துக்கிடக்கும் சுனை ஒன்றும் இருந்தது.

இப்பகுதியைச் சங்ககாலத்தில் பொறையன்,[1] குட்டுவன்[2] ஆகிய சேரமன்னர்கள் ஆண்டுவந்தனர்.

இந்தக் குடவரையில் தெய்வ உருவம் எழுதிய பாவை பெண்ணின் அழகனைத்தும் கொண்டதாகத் திகழ்ந்தது. இந்தக் குடவரைச் சுனையில் பூத்த நீலமலர் போல் கண்களை உடையவளாம் தலைவி.

அடிக்குறிப்பு[தொகு]

  1. பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக், கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய நல்லியல் பாவை பரணர் பாடல் – குறுந்தொகை 89
  2. குட்டுவன் குடவரைச் சுனைய மாயிதழ்க் குவளை (அவள் கூந்தலில்) முடத்திருமாறன் பாடல் – நற்றிணை 105
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொல்லிக்_குடவரை&oldid=2565385" இருந்து மீள்விக்கப்பட்டது