கொல்லம் விரைவுத் தொடருந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொல்லம் விரைவுத் தொடருந்து
250px
கொல்லம் சந்திப்பு தொடருந்து நிலையத்தில் சென்னை எக்மோர் - கொல்லம் சந்திப்பு விரைவு தொடருந்து
கண்ணோட்டம்
வகைவிரைவு தொடருந்து
நிகழ்நிலைஇயக்கத்தில் உள்ளது
நிகழ்வு இயலிடம்கேரளாவும் தமிழ்நாடும்
முதல் சேவைநவம்பர் 26, 1904; 115 ஆண்டுகள் முன்னர் (1904-11-26)
மறு அறிமுகம் மார்ச்சு 4, 2019; 18 மாதங்கள் முன்னர் (2019-03-04)
நடத்துனர்(கள்)இந்திய ரயில்வே
வழி
தொடக்கம் சென்னை எக்மோர் (MS)
இடைநிறுத்தங்கள்21
முடிவு கொல்லம் சந்திப்பு (QLN)
ஓடும் தூரம்761 km (473 mi)
சேவைகளின் காலஅளவுதினந்தோறும்
தொடருந்தின் இலக்கம்16101/16102
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், முன்பதிவில்லாத பொது பெட்டிகள்
இருக்கை வசதிவசதி உண்டு
உணவு வசதிகள்வசதி இல்லை
தொழில்நுட்பத் தரவுகள்
சுழலிருப்புWDG-3A in QLN⇋TPJ section WAP-4 or WAP-7 in TPJ⇋MS section
பாதை5 ft 6 in (1,676 mm)
Indian broad gauge

கொல்லம் விரைவுத் தொடருந்து (Chennai Egmore–Kollam Junction Express ) தமிழ்நாட்டின் சென்னை எக்மோர் நிலையத்திலிருந்து கேரள மாநிலத்தின் கொல்லம் சந்திப்பு நிலையம் வரை இந்திய ரயில்வே துறையால் தினந்தோறும் இயக்கப்படும் தொடருந்து கொல்லம் விரைவு தொடருந்து தொடருந்து ஆகும். இந்த தொடருந்து 16101, 16102 ஆகிய எண்களில் இயங்கி வருகிறது. மிகவும் பழமையான தொடருந்துகளில் ஒன்றான இது 114 வருடங்களுக்கு மேலாக இயங்கி வருகிறது. சிறிது காலம் இயக்கத்தில் இல்லாமல் இருந்த இந்தத் தொடருந்து, புதிய அகல ரயில்பாதை உடன் 2019ஆம் ஆண்டு மார்ச் 9ம் தேதி முதல் மறுபடியும் இயங்கத் தொடங்கியுள்ளது. [1]

வரலாறு[தொகு]

திருவாங்கூர் சமஸ்தானத்தின் முதலாவது இருப்புப் பாதையான கொல்லம் - செங்கோட்டை பாதையில் 1904 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் இந்த தொடருந்து இயங்கி வந்தது. பின்னர் 1998ம் ஆண்டு முதல் இருப்புப்பாதை மாற்றம் (குறுகிய பாதையில் இருந்து அகல ரயில் பாதையாக) செய்யப்பட்டு ஏராளமான மலைத்தொடரை தாண்டி, இயற்கை சீற்றங்களை தாண்டி 2018 ஆம் ஆண்டு முடிவு பெற்றது ஆண்டு முடிவு பெற்றது. 2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 31 ஆம் தேதி முதல் கொல்லம் முதல் செங்கோட்டை வரையிலான இருப்புப்பாதை பயணிகள் தொடருந்து சேவைக்காக அர்ப்பணிக்கப்பட்டது.[2][3] முதலாவது பயணிகள் தொடருந்தாக சென்னை தாம்பரம் முதல் கொல்லம் வரையிலான சிறப்பு தொடருந்து (06027) அதன் அதிகபட்ச இருக்கைகளின் எண்ணிக்கையான 712ஐ விட அதிகமாக 879 பயணிகளுடன் இயக்கப்பட்டு ரயில்வே துறைக்கு 3.15 லட்சம் வருவாய் ஈட்டித் தந்தது.[4]

தமிழகத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு திருவனந்தபுரம் வழியாக செல்வதற்கு இந்த இருப்பு பாதையே சிறந்ததும் நேரம் குறைந்ததும் ஆகும். மதுரையிலிருந்து கன்னியாகுமரி வழியாகவும் கோயம்புத்தூரில் இருந்து பொள்ளாச்சி, பாலக்காடு வழியாகவும் கேரள மாநிலத்திற்கு செல்லலாம்.[5]

வாரத்திற்கு மூன்று நாட்கள் சென்னை தாம்பரம் முதல் கொல்லம் வரை இயங்கிவந்த இந்த தொடருந்து 2019ஆம் ஆண்டு மார்ச் நான்காம் தேதி முதல் சென்னை எக்மோர் வரை நீட்டிக்கப்பட்டு தினந்தோறும் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. மேலும் 25 நிறுத்தங்களை கொண்ட இந்த தொடருந்து 21 நிறுத்தங்கள் ஆக குறைக்கப்பட்டு அதன் பயணநேரம் 35 நிமிடங்கள் குறைக்கப்பட்டது. தினந்தோறும் இயக்கப்படும் இந்த தொடருந்து புனலூர், தென்காசி சந்திப்பு, தென்னிந்தியாவின் பழமையான நிலையங்களில் ஒன்றான மதுரை சந்திப்பு வழியாக இயக்கப்பட்டு வருகிறது. 1904 ஆம் ஆண்டு திருவாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவான மூலம் திருநாள் ராம வர்மா அவர்களால் கொடியசைத்து இந்த தொடருந்து சேவை ஆரம்பித்து வைக்கப்பட்டது இருப்பு பாதையை மாற்றிய காரணத்தினால் 1996 ஆம் ஆண்டு விருதுநகர் மற்றும் மானாமதுரை வழித்தடத்தில் மாற்றப்பட்டு இயக்கப்பட்டது அதன் பின்பு 2000 ம் ஆண்டு இந்த சேவை முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. 19 ஆண்டுகள் கழித்து 2019 ஆம் ஆண்டு இந்த தொடருந்து சேவை மறுபடியும் ஆரம்பித்து இயங்கி வருகிறது [6]

வழித்தடம்[தொகு]

சென்னை எக்மோர்தாம்பரம்செங்கல்பட்டு சந்திப்புவிழுப்புரம் சந்திப்பு → விருதாச்சலம் சந்திப்பு →திருச்சிராப்பள்ளி சந்திப்பு →திண்டுக்கல் சந்திப்பு →மதுரை சந்திப்பு →விருதுநகர் சந்திப்பு →சிவகாசிஸ்ரீவில்லிபுத்தூர்ராஜபாளையம்சங்கரன்கோவில்கடையநல்லூர் →தென்காசி சந்திப்பு →செங்கோட்டைஆரியங்காவுதென்மலை →எடாமன் →புனலூர் →அவனீஸ்வரம் →கொட்டாரக்கரா →குண்டறா →கொல்லம் சந்திப்பு[7]

இழுவை இயந்திரம்[தொகு]

சென்னை எக்மோர் முதல் கொல்லம் வரையிலான இருப்புப்பாதை இன்னும் முழுவதுமாக மின்மயமாக்கப்பட்டவில்லை. எனவே அரக்கோணம் நிலையத்தால் பராமரிக்கப்படும் WAP4 என்ற மின்சார இழுவை இயந்திரம் மூலமோ அல்லது ராயபுரம் மூலம் பராமரிக்கப்படும் WAP7 என்ற மின்சார இழுவை இயந்திரம் மூலமோ சென்னை எக்மோர் முதல் திருச்சிராப்பள்ளி சந்திப்பு வரை இயக்கப்பட்டு அதன்பின்பு GOC WDG-3A என்ற டீசல் இயந்திரம் மூலம் கடைசி நிலையம் வரை இயக்கப்படுகிறது.

பெட்டிகளின் வடிவமைப்பும் எண்ணிக்கையும்[தொகு]

கொல்லம் அதிவிரைவு தொடருந்து, மூன்றடுக்கு குளிர்சாதன பெட்டிகள் இரண்டு, முன்பதிவு வசதி உள்ள படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், படுக்கை வசதி கொண்ட பெட்டிகள் எட்டு, முன்பதிவு இல்லாத பொது பெட்டிகள், பொது பெட்டிகள் பெட்டிகள் இரண்டு, அமரும் வசதி கொண்ட சரக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு பெட்டிகள் சரக்கு பெட்டிகள் இரண்டு என மொத்தம் பதினான்கு பெட்டிகளுடன் இயங்கி வருகிறது. கீழ்க்கண்ட வரிசையில் பயணப் பெட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.[8][a]

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
BSicon LDER.svg SLR GEN S1 S2 S3 S4 S5 S6 S7 S8 B1 B2 GEN SLR

பயண அட்டவணை[தொகு]

வண்டி எண் நிலையக் குறியீடு புறப்படும் நிலையம் புறப்படும் நேரம் புறப்படும் நாள் சேரும் நிலையம் சேரும் நேரம் சேரும் நாள்
16101 MS சென்னை எக்மோர் 05.00 PM தினமும் கொல்லம் சந்திப்பு 08.55 PM தினமும்
16102 QLN கொல்லம் சந்திப்பு 11:45 AM தினமும் சென்னை எக்மோர் 03.30 AM தினமும்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Royal Mail back on track as new line connects Chennai to Kollam". India Today (9 March 2019). பார்த்த நாள் 19 March 2019.
  2. "Sengottai-Kollam railway line reopens after eight years". The New Indian Express (1 April 2018). பார்த்த நாள் 2 April 2018.
  3. "Special trains announced between Tambaram and Kollam". Times of India (30 March 2018). பார்த்த நாள் 2 April 2018.
  4. "First train from Chennai on Punalur line has commuters ready to roll". Times of India (1 April 2018). பார்த்த நாள் 2 April 2018.
  5. "BioTesting Europe officially announced by EBF". Biometric Technology Today 15 (6): 5. June 2007. doi:10.1016/s0969-4765(08)70031-6. பன்னாட்டுத் தர தொடர் எண்:0969-4765. 
  6. "After 19 years, Chennai-Kollam regular train service to resume from Monday". The New Indian Express (3 March 2019). பார்த்த நாள் 3 March 2019.
  7. "After 19 years, Chennai-Kollam regular train service to resume from Monday". The New Indian Express (3 March 2019). பார்த்த நாள் 3 March 2019.
  8. "16101/Chennai Egmore - Kollam Jn Express". Indiarailinfo. பார்த்த நாள் 6 March 2019.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found