கொல்கா-கர்மடோன் பாறை-பனி சரிவு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
செய்மதிப் படங்கள், முன் மற்றும் பனிச்சரிவு பிறகு எடுக்கப்பட்டது, பேரழிவு எந்தளவுக்கு மிகப் பரந்ததாய் காட்டுகிறது. குப்பைகள் மற்றும் பனி பற்றி வாயில்கள் கர்மடோன் தொலைவிற்கு ஆண்டு கொல்கா பனியாறு சர்கியூ இருந்து கேனல்டன் பள்ளத்தாக்கு நிரப்பிற்று 18 km (11 mi).

ஆள்கூறுகள்: 42°51′23.18″N 44°31′25.00″E / 42.8564389°N 44.5236111°E / 42.8564389; 44.5236111

கொல்கா-கர்மடோன் பாறை-பனி சரிவு (Kolka-Karmadon rock-ice slide) வட ஒசேத்தியாவில் உள்ள கழ்பேக் மலைமுகட்டின் வடக்கு சாய்வில் நிகழ்தது, உருசியாவின் கொல்கா (Kolka) பகுதியில் 2002-ம் ஆண்டு செப்டம்பர் 20-ம் திகதி பனியாறு பொறிவைத் தொடர்ந்து அது கடல் மட்டத்திலிருந்து சுமார் 1,780 மீட்டர் (15,680 அடி)[1] உயரத்தில் உள்ள ட்ழிமரை-க்ஹொக்ஹ (Dzhimarai-Khokh ) பகுதியின் வடக்கு மற்றும் வடகிழகு சுவரிலும் சரிய தொடங்கியது.[2] மேலும் தீவிரமாக கேனல்டன் (Genaldon) மற்றும் கர்மடோன் ( Karmadon) பள்ளத்தாக்கையும் பாதித்தது. இந்த பேரிடரில், பனிச்சரிவு மற்றும் சேற்றுப் பெருக்கத்தால் 125 பேர் கொல்லப்பட்டனர். (இவ்விபத்தில் உருசிய நடிகர் "செர்ஜி போட்ரோவ் ஜெஆர்" (Sergei Bodrov Jr) உட்பட படக்குழுவினர் 27 பேரும் அடங்குவர்) என்பது குறிபிடத்தக்க மூலத்தகவல்.[3]

கொல்கா பனியாறு, உத்தேசமாக 150 மீட்டர் (490 அடி) அகலமுள்ள தடித்த ஒரு மலைமுகட்டின் துண்டின்மீது சுமார் 32 கிலோமீட்டர் (20 மைல்) பயணப்பட்டு, கிழேயுள்ள கர்மடோன்(Karmadon) ஜார்ஜ் மற்றும் கோபான் (Koban) பள்ளத்தாக்கில் மணிக்கு 100-க்கும் (100 km/h (62 mph).[4] கூடுதலான விசையில், 10-லிருந்து 100 மீட்டர் (33-328 அடி) கன அளவிலும் 200 மீட்டர் (660 அடி) பரந்த அளவிலும் மண் மற்றும் கழிவுகளை பொறிவுகளில் அடித்துவரப்பட்ட,[5] வெள்ளநீர் பள்ளத்தாக்கிலிருந்த நிஜ்னி கர்மடோன் (Nijni Karmadon) என்ற கிராமத்தில் அடைப்பட்டு தங்கியது, இறுதியில் பேராறக மாற்றம் பெற்றதால் அக்கிராம பகுதியில் எச்சரிக்கை விடப்பட்டு கண்காணிப்பிற்கு உட்படுத்தபட்டது.[6] 2002 செப்டம்பர் 25-ம் திகதி கோர்ணய சனிப (Gornaya Saniba) எனும் கிராமம் அருகில் வெள்ளநீரை குரைக்க பனிச்சரிவை வெடிவைத்துத் தகர்க்க திட்டமிடப்பட்டது, அதற்கான பணிகள் துவங்கி முதல் சுற்று தோல்வியில் முடிந்ததாக மூலதாரத்தில்காணப்படுகிறது.[7]


சான்றுகள்[தொகு]