கொலைச் சிந்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கொலைச்சிந்து இலிருந்து வழிமாற்றப்பட்டது)

கொலைச் சிந்து என்பது நாட்டாறியல் கதைப் பாடல்களில் ஒரு வகையாகும். இந்த கதைப் பாடல் வகையில் தொடர் கொலைகளும், தற்கொலை நிகழ்வுகளும் குறிப்பிடப்படுகின்றன. இது கொலைப்பாட்டு, படுகொலைப் பாட்டு என்றும் அழைக்கப்படுகிறது

கொலைச்சிந்துவின் நோக்கம்[தொகு]

செய்திதாள் போன்ற ஊடகங்கள் பரவலாகாத காலத்தில் சிந்து பாடல்கள் மூலம் செய்திகள் பரப்ப பட்டன. நாட்டுப்புறங்களில் கொலைச் செய்யப்பட்டு இறந்தவர்களைப் பற்றி மக்களுக்கு தெரியப்படுத்த இந்த கொலைச் சிந்தை பாடியதாக நாட்டுப்புறவியல் துறைத்தலைவர் முனைவர் சி. சுந்தரேசன் தெரிவிக்கின்றார். [1] இக்கொலைச் சிந்துகள் கொலைகளைப் பற்றிய செய்திகளோடு அவை நிகழக் காரணமாக இருந்தவைகளைப் பற்றியும் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக மக்கள் மீண்டும் கொலை மற்றும் தற்கொலைகளிலிருந்து காக்கப்படுவார்கள். [2]

உருவாகக் காரணம்[தொகு]

இந்தியாவை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த பொழுது கல்வியறிவற்று மக்கள் இருந்தனர். அதனால் தற்கொலைகளும், கொலைகளும் வெகுவாக அம்மக்களை பாதித்த காரணத்தினால் இவ்வகையான கொலைச் சிந்து கதைப்பாடல்கள் உருவாகியிருக்கலாம் என்று அறிஞர்கள் கூறுகின்றர். [3]

பாடு பொருள்கள்[தொகு]

கொலை சிந்து பாடல்கள் குடும்ப நலத்திட்டம், மாமியார் மருமகள் சிக்கல், பொருந்தா மணம், பொருளாசை, ஒற்றுமை, இரக்கம் ஆகியனவற்றை பாடுபொருளாக கொண்டு பாடப்படுகின்றன.

எடுத்துக்காட்டுகள்[தொகு]

  • சித்தையன் கொலைச்சிந்து
  • குருசாமிக் கவுண்டனின் கொலைச் சிந்து
  • மகாத்மா கொலைச் சிந்து [4]
  • செம்புலிங்கம் கொலைச் சிந்து[4]
  • ஆளவந்தார் கொலைச் சிந்து
  • பிள்ளையைக் கொன்ற பாட்டு
  • படுகளச் சிந்து (1895)[2]
  • தீப்பற்றிய சிந்து (1888)[2]
  • கம்பம் தாதப்பன் குளச்சிந்து (1906)[2]
  • தற்கொலைச் சிந்து (1970 ல் திருத்தணி முருகன் குளத்தில் தற்கொலை)[2]
  • அரியலூர் ரயில் விபத்து (1987)[2]
  • சாவானா மில் படுகொலைப் பாட்டு[2]
  • மணிக்குறவன் கொலை சிந்து

திரைப்படங்கள்[தொகு]

கொலைச்சிந்துகளை திரைப்படங்களாகவும் நாடகமாகவும் எடுத்துள்ளனர். ஆளவந்தார் கொலை வழக்கு நாடகமாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.

  • செம்பருத்தி - 1972ல் வெளிவந்த திரைப்படம். இது மலையாள திரைப்படமாகும். பி.என்.மேனன் இயக்கியிருந்தார்.
  • மலையூர் மம்பட்டியான் - மம்பட்டியான் கொலைச்சிந்து பாடலை மையமாக கொண்டு வெளிவந்தது.

நூல்கள்[தொகு]

  • கொலைச் சிந்து பாடல்களை குஜிலி என சிறு நூல்களாக வெளியிட்டனர். இந்த நூல்களை எழுதுவோர் குஜிலி எழுத்தாளர் என அழைக்கப்பட்டனர். தமிழகம், கேரளா மாநிலங்களில் கொலைச் சிந்து புகழ்பெற்றதாக இருந்தது.
  • தமிழில் கொலைச்சிந்து - மருதத்துரை எழுதியுள்ள ஆய்வு நூல்

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2016-03-10. பார்க்கப்பட்ட நாள் 2013-09-04.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 2.5 2.6 http://m.tamil.thehindu.com/general/literature/சாவானா-மில்-படுகொலைப்-பாட்டு/article6515351.ece[தொடர்பிழந்த இணைப்பு] சாவானா மில் படுகொலைப் பாட்டு- தி இந்து
  3. http://www.keetru.com/mannmozhi/apr09/sithaiyan.php
  4. 4.0 4.1 கொலைச்சிந்துகளின் காலம் - அ. க. பெருமாள் தி இந்து[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலைச்_சிந்து&oldid=3698984" இலிருந்து மீள்விக்கப்பட்டது