கொலேட் (2018 திரைப்படம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொலேட்
Colette
இயக்கம்வெஸ்ட் வெட்மோர்லாண்ட்
தயாரிப்பு
 • எலிசபெத் கார்சென்
 • பமீலா கூப்பர்
 • மைக்கேல் லிட்வாக்
 • கிறிஸ்டின் வாச்சோன்
கதை
 • வெஸ்ட்மோர்லேண்ட் வாஷ்
 • ரெபேக்கா லிங்கிவைஸ்
 • ரிச்சர்ட் கிளாட்ஸர்
இசைதாமஸ் அடிஸ்
நடிப்பு
 • கீரா நைட்லி
 • டொமினிக் வெஸ்ட்
 • எலினோர் டாம்லின்சன்
 • டெனிஸ் கோஃப்
படத்தொகுப்புலூசியா சூச்சட்டி
விநியோகம்
 • பிளேக்கர் ஸ்ட்ரீட்
 • 30 வெஸ்ட்
 • லயன்ஸ் கேட் பிலிம்ஸ்
வெளியீடுசனவரி 20, 2018 (2018-01-20)(சண்டேன்ஸ்)
செப்டம்பர் 21, 2018 (அமெரிக்கா)
சனவரி 25, 2019 (ஐக்கிய இராச்சியம்)
நாடு
 • அமெரிக்கா
 • ஐக்கிய இராச்சியம்
 • அங்கேரி
மொழிஆங்கிலம்

கொலேட் (Colette) என்பது 2018 ஆம் ஆண்டய பிரித்தானிய வாழ்க்கை வரலாற்று நாடகத் திரைப்படமாகும். பிரஞ்சு புதின எழுத்தாளரான காப்ரியேல் கொலேட்டின் வாழ்க்கை் கதையை மையமாகக் கொண்டு, வெஸ்ட்மோர்லாண்ட் மற்றும் ரிச்சர்ட் கிளாட்ஸர் ஆகியோரின் திரைக்கதையில் வாஷ் வெஸ்டார்ட்லேண்ட் இயக்கிய படமாகும். இப்படத்தில் கீரா நைட்லி, டொமினிக் வெஸ்ட், எலினோர் டாம்லின்சன், டெனிஸ் கோஃப் ஆகியோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் சிறப்புக் காட்சியானது 2018 சனவரி 20 அன்று சண்டேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. செப்டம்பர் 2018 செப்டம்பர் 21 அன்று பிளெகெர் ஸ்ட்ரீட் மற்றும் 30 வெஸ்ட் ஆகியவற்றால் அமெரிக்காவில் வெளியிடப்பட திட்டமிடப்பட்டுள்ளது, அதேசமயம் இது லியோங்க்கேட் மூலம் 2019 சனவரி 25 அன்று ஐக்கிய ராஜ்யத்தில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

கதை[தொகு]

கிராமத்தில் இருந்து வந்த இளம்பெண் காப்ரியேல் கொலேட் ஆவார். இவர் வயதில் 14 ஆண்டுகள் மூத்தவரான பாரீசை சேர்ந்த வில்லவி என்பவரை மணந்து தன் வாழ்க்கையைத் துவக்குகிறார்.

தற்செயலாக மனைவியின் எழுத்தாற்றலை அறிந்துகொண்ட கணவர், அவளைக் கொண்டு புதினங்களை எழுதவைத்து தன் பெயரில் வெளியிடுகிறார். அவரது "கிளாடியின்" தொடர் வரிசையின் வெற்றியானது வில்லியை ஒரு புகழ்வாய்ந்த எழுத்தாளராக ஆக்குகிறது. இதனால் இந்த இணையர் சமூகத்தில் சிறப்பான அந்தஸ்த்தை பெறுகின்றனர்.

காலப்போக்கில், கொலேட் தன் கணவனின் துரோகத்தால் தனது எழுத்துப் பணிக்கு முறையாக தனக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் தனக்கு கிடைக்காததை உணர்கிறார். இது கணவன் மனைவிக்கு இடையில் விசிசலை உண்டாக்குகிறது. அதன்பிறகு கெலட் தனக்கான தனிப்பாதையைத் தேர்ந்தெடுக்கிறாள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொலேட்_(2018_திரைப்படம்)&oldid=2905892" இருந்து மீள்விக்கப்பட்டது