கொலம்பசு நாள்
கொலம்பசு நாள் | |
---|---|
![]() புதிய உலகின் கரைகளில் கொலம்பசு முதலில் கால்பதித்தது; ஓவியம் - டையோசுகொரோ பப்லா (1862) | |
கடைப்பிடிப்போர் | அமெரிக்காக்களிலுள்ள பல நாடுகள், இத்தாலி, எசுப்பானியா, உலகெங்கும் இத்தாலியர் குடியிருப்புக்களில் . |
வகை | வரலாற்றுச் சிறப்பு |
முக்கியத்துவம் | 1492இல் அமெரிக்காவிற்கான கொலம்பசின் முதல் கடற்பயணத்தை நினைவுகூறும் கொண்டாட்டங்கள் |
நாள் | அக்டோபர் 12 (மரபு); அக்டோபரின் இரண்டாம் திங்கள் (ஐக்கிய அமெரிக்காவில்) |
2024 இல் நாள் | அக்டோபர் Expression error: Unexpected > operator. |
2025 இல் நாள் | அக்டோபர் Expression error: Unexpected > operator. |
2026 இல் நாள் | அக்டோபர் Expression error: Unexpected > operator. |
2027 இல் நாள் | அக்டோபர் Expression error: Unexpected > operator. |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
தொடர்புடையன | கனடாவின் நன்றியறிவித்தல் நாள் அன்றே கொண்டாடப்படுகிறது |
புதிய உலகின் பல நாடுகளும் வேறெங்கும் அமெரிக்க நிலப்பகுதியில் கொலம்பசு வந்திறங்கிய அக்டோபர் 12, 1492இன் ஆண்டுவிழாவை அலுவல்முறையில் விடுமுறை நாளாகக் கொண்டாடுகின்றனர். ஐக்கிய அமெரிக்காவில் கொலம்பசு நாள் என்றும் பகாமாசில் கண்டுபிடிப்பு நாள் என்றும், இலத்தீன் அமெரிக்காவின் பல நாடுகளில் டியா டெ லா ராசா ("இனவெழுச்சி நாள்") என்றும் பெலீசு, உருகுவையில் டியா டெ லாசு அமெரிகாசு (அமெரிக்காக்களின் நாள்) என்றும் அர்கெந்தீனாவில் டியா டெல் ரெசுபெடோ அ லா டைவர்சிடாட் குல்சரல் (பண்பாட்டு பன்முகமைக்கான மரியாதை நாள்) என்றும் , எசுப்பானியாவில் டியா டெ லா இசுப்பானிடாடு மற்றும் பியெஸ்டா நாசியோனல் என்றும், இத்தாலியிலும் உலகங்குமுள்ள இத்தாலியக் குடியிருப்புக்களிலும் கியோர்னாடா நேசியோனல் டி கிறித்தோபர் கொலம்பசு அல்லது பெஸ்டா நேசியோனல் டி கிறிஸ்டபரோ கொலம்போ என்றும் கொண்டாடுகின்றனர்.[1][2] 18வது நூற்றாண்டிலிருந்தே முறைசாராது கொண்டாடப்பட்டு வந்த இந்த விடுமுறைகள் அலுவல்முறையாக 20வது நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்து கொண்டாடப்படுகின்றன. இந்த விடுமுறை நாளுக்கு பலத்த எதிர்ப்பும் இருந்து வந்துள்ளது: ஐக்கிய அமெரிக்காவின் பல பகுதிகள் இந்நாளைக் கொண்டாட மறுக்கின்றன அல்லது இந்நாளை மற்றொரு நிகழ்விற்கான நாளாக கொண்டாடுகின்றன.
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2014-10-06. Retrieved 2014-11-27.
- ↑ http://www.governo.it/Presidenza/ufficio_cerimoniale/cerimoniale/giornate.html