கொற்ற வஞ்சி
Appearance
தமிழ் இலக்கணத்தில் கொற்ற வஞ்சி என்பது புறப்பொருள் திணைகளுள் ஒன்றான வஞ்சித் திணையின் ஒரு துறை அல்லது உட்பிரிவு ஆகும். கொற்றம் என்னும் சொல் வெற்றியைக் குறிப்பது. மன்னர் போரில் வெற்றி பெற்றதைப் பொருளாகக் கொள்வதால் இத்துறை "கொற்ற வஞ்சி" என்னும் பெயர் பெற்றது.
இதனை விளக்க, உலகத்தோர் போற்றி வணங்கத்தக்க வகையில் வாள் வீசிப் போரிட்டான் என்று காலில் வீரக் கழல் அணிந்த மன்னனைப் பாராட்டுவது[1] என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது.
- வையகம் வணங்க வாளோச்சினன் எனச்"
- செய்கழல் வேந்தன் சீர்மிகுத் தன்று
எடுத்துக்காட்டு
[தொகு]- அழலடைந்த மன்றத்து அலந்தயரா நின்றார்
- நிழலடைந்த நின்னையென்று ஏத்திக் - கழலடைய
- செற்றம்கொண் டாடிச் சிலைத்தெழுந்தார் வீந்தவியக்
- கொற்றம்கண் டெஃகுயர்த்தான் கோ
- - புறப்பொருள் வெண்பாமாலை 40.
குறிப்பு
[தொகு]- ↑ இராமசுப்பிரமணியன், வ. த., 2009. பக். 69, 70
உசாத்துணைகள்
[தொகு]- இராமசுப்பிரமணியன், வ. த., புறப்பொருள் வெண்பாமாலை, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, 2009.
- கௌரீஸ்வரி, எஸ். (பதிப்பாசிரியர்), தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2005.