கொரோனா தேவி வழிபாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கொரோனா தேவி வழிபாடு , இந்தியாவில் கொரோனா வைரசு, பெருந்தொற்றால் 14 சூன் 2020 வரை 3,24,482 பேர் பாதிக்கப்பட்டு, 9,247 பேர் இறந்துள்ளனர். [1]இப்பெருந்தொற்று நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில், உலகில் பல பகுதிகளில் பெண்கள் சில வினோதமான தடுப்பு நடைமுறைகள் மற்றும் சடங்குகள் செய்து வருகின்றனர். இருப்பினும், இந்தியாவில், இந்த பெருந்தொற்று நோய், சில பகுதிகளில் மக்களை மூடநம்பிக்கைக்குள்ளாக்கியுள்ளது.

மார்ச், 2020 மாத இறுதியில் உத்தரப் பிரதேசம் மாநிலம், சீதாப்பூர் மாவட்டத்தில் கொருனா (Koruna) என்ற கிராமத்தில் வசிப்பவர்கள், கொரோனா வைரசு மார்ச், 2020 மாத இறுதியில் இந்தியாவில் பரவியதிலிருந்து பல பாகுபாடுகளை எதிர்கொண்டனர்.[2]

தற்போது சூன் மாத நடுவில் பிகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தின் பல மாவட்டங்களில் பெண்கள் மற்றும் திருநங்கைகள் கொரோனா வைரசு பெருந்தொற்றிலிருந்து தங்களைக் காத்தருள கொரோனா தேவி வழிபாடுகள் செய்கின்றனர்.[3][4][5] [6]கேரளாவின் கொல்லம் மாவட்டத்தில் உள்ள கடக்கல் என்னும் இடத்தில் அணிலன் என்பவர் கொரோனா வைரசு வடிவச் சிலையை நிறுவி கொரோனா தேவியை வழிபாடு செய்கிறார்.[7] [8]

மேற்கோள்கள்[தொகு]

  1. Coronavirus Worldometer
  2. Coronavirus Poses A Different Problem For UP Village Called "Korauna"
  3. Women in Bihar, Jharkhand, UP & West Bengal perform 'Corona Devi' puja to ward off coronavirus
  4. How a goddess called Corona Devi came to be worshipped in West Bengal
  5. Assam: Many perform 'Corona Devi Puja' to end coronavirus pandemic perform 'Corona Devi' puja to ward off coronavirus
  6. Women in parts of Assam offer prayers to please 'Corona Devi'
  7. கொரோனா தேவிக்கு தினமும் பூஜை செய்யும் நம்பூதிரி
  8. கொரோனா தேவி பூஜை ; கேரளாவில் விநோதம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரோனா_தேவி_வழிபாடு&oldid=2986996" இருந்து மீள்விக்கப்பட்டது