கொரோனா அல்லது ஒளிவட்டம் (ஒளியியல் செயல்பாடு)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஒரு நிலா ஒளிவட்டம்
இந்தியா, மும்பையில் காணப்பட்ட நிலா ஒளிவட்டம்
சூரிய உதயத்தின் போது காணப்பட்ட சூரிய ஒளிவட்டம்

வானிலையியலில் கொரோனா அல்லது ஒளிவட்டம் (ஒளியியல் செயல்பாடு) சூரியனில் அல்லது நிலாவில் விளிம்பு விளைவால் ஏற்படும் ஒரு ஒளியியல் நிகழ்வாகும்.[1] நட்சத்திரங்களாலும், கோள்களாலும், நீர் துளிகளாலும், மேகங்களிலுள்ள பனிப் படிகங்களாலும், கண்ணாடியின் மேற்பரப்பில் உள்ள மூடுபனிகளாலும் சில நேரங்களில் ஒளிவட்டம் உருவாகிறது. கொரோனா என்பது வானுலக பொருட்களைச் சுற்றி பல மையங்களைக் கொண்ட பல வண்ண வளையங்களைக் கொண்டு மையத்தில் வெளிச்சமான பகுதியைப் பெற்றிருக்கும்.[2][3] மையத்தில் வெளிச்சமான பகுதி (aureole) நிலவின் ஒளிவட்டத்தில் உள்ளது. இது மையத்தில் வெளிர் நீல வட்டமாகவும், ஓரங்களில் செம்பழுப்பு நிறத்துடனும் காணப்படும். ஒளிவட்டத்தின் கோண அளவு, அதை உருவாக்கும் நீர் துளிகளின் விட்ட அளவைப் பொறுத்தது. சிறிய நீர் துளிகள் பெரிய கொரோனாக்களை உருவாக்கும். நீர் துளிகள் ஒரே அளவுடன் இருந்தால் உருவாகும் ஒளிவட்டங்களும் ஒரே பொலிவுடன் இருக்கும். ஒளி எதிரொளிப்பால் உருவாகும் பரிவேடம் விளிம்பு விளைவால் ஏற்படும் கொரோனாக்களிலிருந்து மாறுபடுகிறது. ஆனால் பரிவேடம் கொரோனாக்களை விட பெரிதாக இருக்கும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Cowley, Les (2012). "Jupiter corona from Iran".
  2. Calvert, J. B., The Corona, University of Denver, 2 August 2003. Access date 11 Feb. 2107
  3. Cowley, Les, Corona, Atmospheric Optics. Access date 11 Feb. 2107

வெளியிணைப்புகள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Corona
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
Lunar corona with Altocumulus floccus

காட்சியகம்[தொகு]