கொரே அண்டர்சன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கொரே அண்டர்சன் (Corey Anderson) 13 திசம்பர் 1990இல் பிறந்த, நியுசிலாந்தை சேர்ந்த துடுப்பாட்ட வீரர். சர்வதேச துடுப்பாட்டபோட்டிகளில் மிகக் குறைந்த பந்துகளில் சதம் அடித்த சாதனையை 2014இல் செய்தார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக குயின்ஸ்லாண்டில் நடைபெற்ற ஒரு நாள் போட்டியில் 36 பந்துகளில் கொரே அண்டர்சன் சதம் அடித்தார். அதற்கு முன்பு 1996 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் சாகித் அஃபிரிடி 37 பந்துகளில் அடித்த சதமே உலக சாதனையையாக இருந்தது. ஆட்ட நேர முடிவில் அண்டர்சன் 131 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதில் 14 சிக்சர்களையும், 6 பவுண்டரிகளையும் அடித்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Corey Anderson". பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2014.
  2. "36 பந்துகளில் சதம் அடித்தார் கொரே அண்டர்சன்". பார்க்கப்பட்ட நாள் 15 சனவரி 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரே_அண்டர்சன்&oldid=3719160" இலிருந்து மீள்விக்கப்பட்டது