கொரிய தேசிய அருங்காட்சியகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கொரிய தேசிய அருங்காட்சியகம்
Korean name
Hangul국립중앙박물관
Hanja
திருத்தப்பட்ட ரோமானியமாக்கல்Gunglib Jung-ang Bagmulgwan
McCune–ReischauerKunglip Chung'ang Pagmulgwan
Map
நிறுவப்பட்டது1909 (2005 ஆம் ஆண்டில் யோங்சானில் கொரிய தேசிய அருங்காட்சியகம் மீண்டும் திறக்கப்பட்டது)
அமைவிடம்137 Seobinggo-ro, யோங்சான்-கு, சியோல், தென் கொரியா
வகைவரலாறு மற்றும் கலை அருங்காட்சியகம்
சேகரிப்பு அளவு310,000 க்கும் மேற்பட்ட காட்சிப்பொருள்கள் 295,551 சதுர மீட்டர்கள் (3.18 மில்லியன் சதுர அடிகள்)
வருனர்களின் எண்ணிக்கை3,476,606 (2017)

கொரியா தேசிய அருங்காட்சியகம் (National Museum of Korea) தலைமை அருங்காட்சியகமாக உள்ளது. இந்த அருங்காட்சியகம் 1945 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டதிலிருந்து தென் கொரியாவின் வரலாறு மற்றும் கலை ஆகியவற்றைப் பிரதிபலிக்கும் கலாச்சார அமைப்பா உள்ளது.[1] இந்த அருங்காட்சியகம் தொல்பொருள், வரலாறு மற்றும் கலை ஆகிய துறைகளில் பல்வேறு ஆய்வுகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையிலான உறுதிப்பாட்டைக் கொண்டுள்ளது, தொடர்ந்து பல்வேறு கண்காட்சிகள் மற்றும் கல்வித் திட்டங்களை உருவாக்கி வருகிறது.

2005 ஆம் ஆண்டில், யோங்சன் மாவட்டத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டதிலிருந்து, இந்த அருங்காட்சியகம் 20 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது, வேறுவிதமாகக் கூறினால், ஆண்டுதோறும் 3 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்துள்ளது, இது உலகிலும் ஆசியாவிலும் அதிகம் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகங்களில் ஒன்றாகும். தென்கொரியாவைப் பொறுத்தவரை இதுவே மிக அதிமாகப் பார்வையிடப்பட்ட அருங்காட்சியகமாகும்.[2][3] சியோல் பெருநகர அரசாங்கத்தால் 2011 நவம்பரில் கிட்டத்தட்ட 2,000 வெளிநாட்டு பார்வையாளர்களிடம் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில், சியோலில் தங்களுக்கு பிடித்த நடவடிக்கைகளில் இந்த அருங்காட்சிகத்தைப் பார்வையிடுவது ஒன்றாகும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.[4] இது ஆசியாவின் மிகப்பெரிய அருங்காட்சியகங்களில் ஒன்றாகும்.

வரலாறு[தொகு]

அருங்காட்சியகத்தின் வெளிப்புறம்

சன்ஜோங் பேரரசர் கொரியாவின் முதல் அருங்காட்சியகமான இம்பீரியல் வீட்டு அருங்காட்சியகத்தை 1909ஆம் ஆண்டில் நிறுவினார். கொரியாவை ஜப்பானிய ஆட்சியின் போது நிர்வகிக்கப்பட்ட ஜப்பானிய அரசாங்க பொது அருங்காட்சியகம், சாங்யோங்கொங்கில் உள்ள இம்பீரியல் வீட்டு அருங்காட்சியகம் ஆகியவை தேசிய அருங்காட்சியகத்தின் சேகரிப்பின் கருப்பொருளாக மாறியது, இந்த அருங்காட்சியகம் 1945ஆம் ஆண்டில் தென் கொரியா மீண்டும் சுதந்திரம் பெற்றபோது நிறுவப்பட்டது.

கொரியப் போரின் போது அருங்காட்சியகத்தின் 20,000 பொருட்கள் அழிவினைப் பாதுகாப்தற்காக புசானுக்கு கொண்டு செல்லப்பட்டன. அருங்காட்சியகம் போருக்குப் பிறகு சியோலுக்குத் திரும்பியபோது, அருங்காட்சியகத்தின் பொருள்கள் கியோங்போகுங் மற்றும் தியோக்ஸுகங் அரண்மனை ஆகிய இரண்டிலும் வைக்கப்பட்டன. 1972 ஆம் ஆண்டில், அருங்காட்சியகம் மீண்டும் கியோன்போகுங் அரண்மனையின் மைதானத்தில் ஒரு புதிய கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகம் 1986 ஆம் ஆண்டில் முன்னாள் ஜப்பானிய பொது அரசாங்க கட்டிடமான ஜுங்காங்சியோங்கிற்கு மாற்றப்பட்டு 1995ஆம் ஆண்டில் கட்டிடம் இடிக்கப்படும் வரை (சில சர்ச்சைகள் மற்றும் விமர்சனங்களுடன்) வைக்கப்பட்டது. 2005 ஆம் ஆண்டில் அக்டோபர் 28, அன்று யோங்சன் குடும்ப பூங்காவில் அதன் புதிய புதிய கட்டிடத்தில் அதிகாரப்பூர்வமாக மீண்டும் திறக்கப்படுவதற்கு முன்பு, டிசம்பர் 1996 இல், புதுப்பிக்கப்பட்ட சமுதாயக் கல்வி அரங்கத்தின் தற்காலிக தங்குமிடங்களில் இந்த அருங்காட்சியகம் பொதுமக்களுக்கா திறக்கப்பட்டது.

அக்டோபர் 2005 இல், தென் கொரியாவின் சியோலில் உள்ள யோங்சன் குடும்ப பூங்காவில் ஒரு புதிய கட்டிடத்தில் இந்த அருங்காட்சியகம் திறக்கப்பட்டது. கொரியாவில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் படைகளின் மத்தியப் பிரிவு தங்கியிருந்த யோங்சன் கேரிசனின் ஒரு பகுதியாக இருந்த கோல்ப் மைதானமாக பயன்படுத்தப்பட்ட நிலத்தில் இந்த அருங்காட்சியகம் அமைந்துள்ளது. அமெரிக்க இராணுவம் 1992 ஆம் ஆண்டில் நிலத்தின் ஒரு பகுதியை கொரிய அரசாங்கத்திற்கு திருப்பி அளித்தது. இது யோங்சன் குடும்பப் பூங்காவாக மாறியது. பூங்காவின் நிலப்பகுதிக்குள் அருங்காட்சியகத்திற்கான திட்டங்கள் 1993 இல் தொடங்கியிருந்தாலும், அதன் திறப்பு ஒரு உலங்கூர்தித் தளத்தால் மீண்டும் மீண்டும் தாமதமானது. இறுதியில் 2005ஆம் ஆண்டில் ஏற்பட்ட ஒப்பந்தத்தால் மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் 310,000 காட்சிப்பொருள்கள் உள்ளன.[5]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Seoul's best museums" பரணிடப்பட்டது 2012-09-28 at the வந்தவழி இயந்திரம் CNN Go. 27 October 2011.
  2. Visitor Figures 2013: Museum and exhibition attendance numbers compiled and analysed, The Art Newspaper, International Edition, April 2014.
  3. "National Museum of Korea Welcomes 20-Millionth Visitor since Its Relocation to Yongsan" இம் மூலத்தில் இருந்து 2013-02-18 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20130218211048/http://www.museum.go.kr/program/board/detail.jsp?boardTypeID=80&searchSelect=&keyWord=&boardCategory=&currentPage=2&menuID=002006006&finishIsYN=&boardText1=&boardLines=10&boardID=17512&mode=detail&boardnum=121&totalcount=132. 
  4. "Mt. Nam Tops List of Foreign Tourists' Favorites". http://english.chosun.com/site/data/html_dir/2011/11/28/2011112801317.html. 
  5. "Director's Message | About the Museum | 국립중앙박물관". Museum.go.kr. Archived from the original on 2010-11-17. பார்க்கப்பட்ட நாள் 2014-03-28.