கொரிய அணியெழுத்து

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கொரிய அணியெழுத்து
Hangul서예
Hanja書藝
Revised Romanizationசியோயே
McCune–Reischauerசோயே
'சூ-சா-சயே(추사체)' எனும் தனது பாணியில் கிம் யுங்-ஃஈ எழுதிய அணியெழுத்து
ஃஆன் ஃஓவின் ஃஅஞ்சா அணியெழுத்து; தலைப்பு "யேயங்கிரியூ யியோயங் சியோசெப்"

கொரிய அணியெழுத்து என்பது ஃஆங்குல் அல்லது ஃஅஞ்சா எனும் இருவகைக் கொரிய மரபு அணியெழுத்துகளையும் உள்ளடக்கும். இவை முறையே கொரிய நெடுங்கணக்கு எழுத்துகளாலும் சீன எழுத்துருக்களாலும் ஆனவை ஆகும். ஃஆங்குல் வட்ட வளைவுள்ள கோண எழுத்துகளை அறிமுகப்படுத்தியது.

வரலாறு[தொகு]

சீன எழுத்துருக்கள் கி.பி 2 ஆம், 3 ஆம் நூற்றாண்டுகளில் கொரியாவில் புத்தமதப் பரவலால் அறிமுகப்படுத்தப் பட்டுவிட்டது.[1] ஒருங்கிணைந்த சில்லா காலத்தில் வளர்ந்தோங்கிய தாங் பேரரசுப் பண்பாடும் சீன அணிஎழுத்துகளும்பால் இருந்த ஆர்வத்தால் 8 ஆம் நூற்றாண்டு சார்ந்த கிம் சயேங் என்பவர் வாங் சிழி நிகர்த்த அணியெழுத்துகளை உருவாக்கியதும் அவர் முதல் கொரிய அணியெழுத்து வல்லுனர் ஆனார்.[2] கவிஞர் சோயே சிவான் என்பவரும் அவரது அணியெழுத்துகளுக்காகப் பெயர்பெற்றார். இவரது அணியெழுத்துகளின் பதக்கூறு ஃஅயேயங் தே மாவட்டப் பாறையில் பொறிக்கப்பட்டுள்ளது.

யூ சினான், குயாங் சுன், யான் ழென்கிங் போன்ற தொடக்க கால அணியெழுத்து வல்லுனர்களின் கோணப் பாணி 14 ஆம் நூற்றாண்டில் மேலும் வட்டவடிவமான ழாவோ மெங்பூ பாணி அறிமுகமாகி வழக்கில் வரும்வரை தொடர்ந்து நிலவியது.[1][3]தொடக்க 19 ஆம் நூற்றாண்டில் கிம் யியோங்-இயூஅல்லது கிம் யுங்-ஃஈ கொரிய அணியெழுத்துகளைப் புரட்சிகரமாக சூசா பாணியில் அதாவது அவரது புனைபெயரிலான பாணியில் உருமாற்றினார். இது, 秋史[hangul : chusa] பாணி பண்டைய சீன இலிழ்சு எழுத்துப் பாணிபாலான ஆர்வத்தால் உருவாக்கப்பட்டதாகும்.

புலமைசார் சமூக வகுப்புகள் சீன எழுத்துருக்களை பயன்படுத்தியதால், 1910–1945 வரை ஃஅஞ்சாவகை கொரிய அணியெழுத்துகள் வழக்கில் இருந்தன. கொரியா ஜப்பானிய ஆட்சியில் வந்தபோது எழுச்சிகண்ட தேசிய உணர்வு ஃஆங்குல் எழுத்துகளை மக்களிடம் பரப்பியது. எனவே ஃஆங்குல் பயன்படுத்தும் கொரிய அணியெழுத்துகள் மறுமலர்ச்சி உற்றன.

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கொரிய_அணியெழுத்து&oldid=2228912" இருந்து மீள்விக்கப்பட்டது